Showing posts with label வவுனியா. Show all posts

வவுனியா குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா குளத்தில் இன்று மதியம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 30வயது மதிக்கப்பட்ட இளைஞரின் சடலமே வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் இதுவரை யாரென அடையாளம் காணப்படவில்லை எனவும் இளைஞன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

வவுனியா, யாழ். அணிகள் வெற்றி

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மாவட்டங்களின் ஆண்கள், பெண்களுக்களுக்கான கபடிப் போட்டிகள் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. பெண்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினை எதிர்த்து வவுனியா மாவட்ட அணி மோதியது. யாழ்ப்பாண மாவட்ட அணி 46:22 என்ற புள்ளிகள் அடிபடைபடையில் வெற்றிபெற்றது. ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் வவுனியா, யாழ்ப்பாண மாவட்ட அணிகள் மோதின. வவுனியா மாவட்ட அணி 41:20 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணியினை வெற்றிகொண்டது.

Read More »

வவுனியாவின் பிரபல சாரண பாடசாலைகளான விபுலானந்தா கல்லூரி மற்றும் ஓமந்தை மத்திய கல்லூரிகளில் நிறைவு பெற்ற சாரண பயிற்சி பாசறைகள்

மேற்படி இரண்டு கல்லூரிகளிலும் நடைபெற்ற புது முக சாரணர்களுக்கான பயற்சி பாசறைகள் முறையே விபுலானந்த கல்லூரியில் கடந்த 5/4/2013 தொடக்கம் 7/4/2013 வரைக்கும் கல்லூரி முன்றலில் நடைபெற்றது. இதில் 30 சாரணர்களும் 3 சாரணத்தலைவர்களும் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஓமந்தை மத்திய கல்லூரியில் 7/4/2013 தொடக்கம் 10/4/2013 வரைக்கும் பாசறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Read More »

மாங்குளத்தில் மனிதமுக சிலந்தி கண்டுபிடிப்பு


மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்றும், குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்றும், குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்றும், குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

வவுனியா மாவட்டத்தில் சைவ பூசாரி சிறுமி மீது பாலியல் பலாத்காரம்


முன்னர்  பிக்குகள் பாஸ்டரர்கள்  தான் சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்ற செய்தி அதிகமாக வெளிவந்திருந்தன. தற்போது சைவ கோவில்களின் பூசாரிகளும் காமவெறி கொண்டு அலைகிறார்கள் என்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

இதற்கு உதாரணமாக இங்கே இரு செய்திகளை தருகிறோம்.
யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய பூசாரி ஒருவரே தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சிறுமியை கோவில் பின்வளவில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள் தொடர்பில் தினமும் ஏராளமான முறைப்பாடகள் கிடைக்கப்பெற்றுகின்றன என வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்தார்.
எமது மதத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் பல்வேறு தரப்பிலும் தமது ஒழுக்க நிலையை மாற்றியமையினால் இந்துக்களுக்கு மட்டுமல்ல எமது மதத்திற்கும் பெரியதொரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் ஆலய நிர்வாகத்தினர் மீதும் சிவாச்சாரியார்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமுள்ளது. அவை சொல்லமுடியாத பிரச்சனைகளாக உள்ளன. குறிப்பாக கோவில்குளம் விஸ்ணு ஆலயத்தில் 18 வருடங்களாக கடமையாற்றிய பிரதம சிவாச்சாரியாih ஒழுக்க நிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாரும் அவர் சார்ந்த புத்திரர்களும் ஆலயத்தின் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.


Read More »

ஆஸி செல்ல முனைந்த 35பேர் கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 35பேர் களுத்துறை மாவடடம் பேருவளைக் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த இவர்கள், காலி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 11 பெண்கள் அடங்குகின்றனர். மஹபாகே, அம்பாறை, திருமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More »

வவுனியா கோவில்குளத்தில் புனரமைக்கப் படாதுள்ள சிறுவர் பூங்கா-


வவுனியா கோவில்குளத்தில் நீண்டகாலமாக புனரமைக்கப் படாதுள்ள சிறுவர் பூங்காவை, புனரமைத்து மக்கள் பாவனைக்கு விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1996ம் ஆண்டு காலப்பகுதியில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொறுப்பில் இருந்த நகரசபையினால் அமைக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்காவானது, அதன் பின்னர் புனரமைப்புக்கள் எதுவும் செய்யப்படாது, கவனிப் பாரற்றுள்ளது. தற்போதைய நகரசபையும் அதனை கண்டுகொள்ளாதுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சிறுவர் பூங்காவில் தினமும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அங்குள்ள கிணறில் மதுப்போத்தல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்த மக்கள், சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதியெங்கும் பாத்தீனியம் படர்ந்து காணப்படுவதால் சிறுவர்கள் விளையாடச் சென்றால் ஒவ்வாமை ஏற்படும் என்பதனால் அப் பகுதிக்குள் எவரும் செல்வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் பொறுப்பில் நகரசபை இருந்த போது அமைக்கப்பட்ட இளங்கோ அடிகளாரின் சிலையும் பராமரிப்பற்று காணப்படுகிறது. தற்போதைய நகரசபை கவனம் செலுத்தாமை கவலையளிக்கிறது எனவும் மக்கள் கூறுகின்றனர்.

Read More »

பரீட்சை பெறுபேறுகள்-


கல்விப் பொதுத் தராதார சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.இம்முறை பரீட்சைக்கு சுமார் மூன்று லட்சம் மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர். இலங்கை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk/exam/ என்ற இணைய தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

வவுனியா குருமன்காடு பகுதியில் இப்படியும் “மக்கள் போராட்டம்”!! (PHOTOS)


மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்தது நகரசபையா? மின்சார சபையா?
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியான குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள முதலாம் ஒழுங்கையில் நீண்டகாலமாக தெருவிளக்குகள் ஒளிராமையால் மக்கள் போராட்டம்.. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வவுனியா நகர சபையின் எல்லைக்குட்பட்ட குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள முதலாம் ஒழுங்கையில் பெருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த ஒரு வருடமாக ஒளிரவில்லை. இது தொடர்பாக வவுனியா நனரசபை மற்றும் மின்சார சபை என்பவற்றை மக்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதும் தீர்வு கிடைக்கவில்லை. இதே வேளை வவுனியா நகர சபைத் தலைவர் ஜ.கனகையா 06 மின்சார விளக்குகளை கறித்த பிரதேசம் ஒன்றில் உள்ள கடையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டு 06 மாதம் கடந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று வித்தியாசமான முறையில் போராட்டம் உன்றினை மேற்கொண்டனர். நகரசபைத்தலைவரால் கடையில் கொண்டு சென்ற வைக்கப்பட்ட மின்விளக்குகளை வீதியில் வைத்து உடனடியாக மின்சார விளக்குகளை பொருத்துமாறு போராடினர். இது தொடர்பாக நகர சபைத்தலைவர் ஜ.ககையா மின்சாரசபை மீதும், மின்சாரசபை நகரசபை மீதும் மாறி மாறி குற்றசாட்டுக்களை முன்வைத்தன. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் உடனடியாக மின்சார விக்குகள் பொருத்தப்படாது விடின் “போராட்டம்” இன்னும் பெரிதாகும் என கூறியதும் இரவு இரவாக சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரசபையால் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.
P1010304
P1010296
P1010305
P1010306
P1010307
P1010308
P1010309
P1010310
P1010311
P1010314



Read More »

மன்னார், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு ரணில் விஜயம்.


இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் வட மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கட்சியின் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது அவர், மன்னார், கிளிநொச்சி மற்றம் வவுனியா மாவட்டங்களுக்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயம் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அமையும் எனவும் கட்சித் தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன

Read More »

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது வவுனியாவில் உதயனை விற்கலாம்; வவுனியா நகர சபையில் ஏகமனதாக தீர்மானம்

வவுனியாவில் உதயன் பத்திரிகை முகவர் ஒருவரையும் விநியோகஸ்தர் ஒருவரையும் இனந்தெரியாத நபர்கள் தொலைபேசியில் மிரட்டியமை தொடர்பிலான சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் யாருடைய அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது தொடர்ந்தும் பத்திரிகையினை விற்பனை செய்யலாம் என இன்று இடம்பெற்ற வவுனியா நகரசபையின் மாதாந்தப் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வவுனியா பஸ் நிலையப்பகுதியில்உதயன் பத்திரிகை விற்பனை செய்யும் முகவர் ஒருவரையும் விநியோகஸ்தர் ஒருவரையும் இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் மிரட்டியுள்ளனர். 

குறித்த விடயம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இன்று நடைபெற்ற மாதாந்தப் பொதுக் கூட்டத்தில் விசேட பிரேரணையினை சமர்ப்பித்து உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபை உபதலைவர் குறித்த தீர்மானத்தை கொண்டுவந்ததுடன் சபையியில் ஏகமனதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More »

வடக்கிற்கான புகையிரதப் பாதை மீள்காட்டுமானம்


இதேவைளை, 2013 செப்டெம்பர் மாதமளவில் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவி ரயில் வரும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளும், புகையிரதப் பாதைகளும் பல தசாப்த காலமாக புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்குட்படுத்தப்பட்டு வந்ததே தவிர அவை மாற்றிய அமைக்கப்படவில்லை.


மீள்கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய பாலம்!வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்கட்டுமானம் செய்யப்பட்டுவரும் ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் நவீன முறையில், மிகத் துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் முதல் கட்டப்பணியும், மாங்குளத்திலிருந்து பளை வரை இரண்டாவது கட்ட பணியும், பளையிலிருந்து காங்கேசன்துறை வரை மூன்றாவது கட்டபணிகளுமாக புகையிரத பாதையின் நிர்மானப் பணிகள் இந்தியாவின் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
IMG_1827நாட்டில் நிலவிய யுத்தத்தால் முற்றாக அழிந்துபோன புகையிரதப்பாதை தற்போது இருந்ததைப் போன்றே மீண்டும் புனரமைக்கப்படாது, நவீன முறையில் மீள் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் புகையிரதப் பாதை பற்றைகள் அகற்றப்பட்டு கிரவல் மண்போட்டு உயர்த்தப்பட்டுள்ளதுடன், தற்போது பாதைக்கு மேலே கருங்கல் சல்லிகள் பரவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதைகளுக்கு இடையிடையே உள்ள சிறிய பாலங்களும் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு வருவதுடன், மாங்குளம் வரையிலான பாலங்களின் மீள்கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளளன.
இந்தப் பணியில் பல பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன், பல இயந்திரங்கள், வாகனங்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கருங்கல் சல்லிகள் பரவும் பணிகள் முடிவடைந்ததும், தண்டவாளங்கள் , சிப்பர் கட்டைகள் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால், ஆங்காங்கே கருங்கல் சல்லிகள் என்பன குவிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான சிலிப்பர் கட்டைகளும் அடுக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, முன்னர் வளைவுகளாக இருந்த தண்டவாளங்கள் இப்போது புகையிரதம் வேகமாகப் பயணிக்கக்கூடிய வகையில், ஒரே நேராக அமைக்கப்படுகிறது.
42-300x225இந்த தண்டவாளைங்களைத் தனித்தனித் துண்டுகளாக ஆணிகளால் பொருத்தப்படாது, வீதியிலும் தண்டவாளத்திலும் பயணிக்கக்கூடிய விஷேட மின் பொறியியல் இயந்திரத்தின் உதவியூடாக அதியுயர் மின் அழுத்தத்தின் மூலம் உருக்கி நேராக ஒட்டிப் பொருத்தப்படுகின்றன.
தண்டவாளம் ஒட்டும் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளதால், அடுத்தகட்டமாக ஓமந்தையிலிருந்து தண்டவாளம் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும், தண்டவாளங்களை உருக்கி ஒட்டப் பயன்படுத்தப்படும் விசேட பொறியியல் இயந்திரம் தண்டவாளத்தில் ஓடியவாறே அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒட்டிபடி முன்னோக்கி நகரும் எனவும் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மீள்கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய பாலம்!
இந்த நிலையில்,புகையிரதப் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் தற்போது தாமதமடைந்து வருவதாகஇந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
புகையிரதப் பாதையை உயர்த்துவதற்கும், அருகில் பரவுவதற்கும் தேவையான கிரவல் மண்ணைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் புகையிரதப் பாதைகளின் மீள்கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் வேகமாக முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக, 1990க்குப் பின், 23 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குப் புகையிரதம் வரும்போது, நேரான புகையிரதப்பாதையில் அதிவேகமாக வரவுள்ளது.
இதனால், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான போக்குவரத்துக்கான நேரம் மேலும் சுருங்குவதால், பயணிகளுக்கு இது மேலும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் புகையிரத பாதை வவுனியாவில் இருந்து ஓமந்தை வரை மீள்கட்டமைப்பு செய்யப்பட்டு, தற்போது வவுனியா நகரிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத சேவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருங்கல் சல்லிகள்!

IMG_9376

IMG_1824
IMG_1813

Read More »

மூதாட்டியை தாக்கி கொள்ளையத்தவர்களில் மூவர் கைது


71 வயது மூதாட்டியை தாக்கி 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நான்கு பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு ஏ. எல். விக்கிரமராச்சி இன்று தெரிவித்தார்.
யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் மூதாட்டியும் அவரது கணவரும் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்த வேளை, 4 பேர் வீட்டின் சமையல் அறை முகட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியையும் கணவரையும் தாக்கி விட்டு சுமார் 6 லட்சம் ருபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றதாக முதாட்டி யாழ். பொலிஸ் நிலையத்தில் மறுநாள் முறைப்பாடு செய்திருந்தார்.
இம் முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியா தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் மற்ற இருவரும் அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களிடத்தில் மேற்கொண்ட விசாரணையின் போது, இந்த சம்பவத்துடன் வவுனியா தாண்டிக்குளம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், குறித்த நபரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் கூறினார்.
அதேவேளை, இன்று கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று நபர்களையும் பொலிஸ்
விசாரணையின் பின்னர் நாளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர்
மேலும் கூறினார்.

Read More »

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற கச்சியப்பர் விழா!

வவுனியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய கச்சியப்பர் விழாஅண்மையில் வவுனியா, வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவர், தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் மங்கலவிளக்கினை வேலுச்சாமி சத்தியநாதன், காந்தி தம்பதியர் ஏற்றிவைத்தனர். திருமுறையினை திருமதி சௌந்தரராஜா குருக்கள் பானுரேகா ஓதினார். தமிழ் வாழ்த்தினை வவுனியா, இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலய இசைத்துறை ஆசிரியை திருமதி தாட்சயிணி கணேசநாதன் பாடினார். தொடக்கவுரையினை வவுனியா நகர சபையின் செயலாளர் வே.வசந்தகுமார் நிகழ்த்தினார். தலைமையுரையினைத் தொடர்ந்து மாணவர் உரை அரங்கம் இடம்பெற்றது. கச்சியப்பர் என்னும் பொருளில் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் மாணவி செல்வி ஜெசிந்தா ஆனந்தமூர்த்தியும், கந்தபுராணம் என்னும் பொருளில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் மு.துவிஜனனும் உரையாற்றினார்கள். கௌரவம் வழங்கும் நிகழ்ச்சியில் கந்தபுராணபடன வித்தகர், அருளுரைவாரிதி, சுழிபுரம் மாதவர் மார்க்கண்டு, ஓய்வு பெறும் கிராம சேவை உத்தியோகத்தர் மயில்வாகனம் தியாகராஜா ஆகியோர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டார்கள். இக்கௌரவிப்பு நிகழ்வினை மா.நந்தகுமார் கவினுறத் தொகுத்து வழங்கினார். அடுத்து நடைபெற்ற கந்தபுராணக் கருத்தரங்கில் “வேலும் வில்லும்” என கவியெழில் திருமதி த. நிறைமதி, “கந்தபுராண கலாசாரம்” என சிவ.கஜன், “கந்தபுராணத்தில் சைவசித்தாந்தம்” என திருமதி வி.முருகேசம்பிள்ளை, “கந்தபுராணம் காட்டும் பண்பாடு” என கவிச்சிகரம் கி.உதயகுமார், “கந்தபுராணத்தில் இலக்கியச்சுவை” என ஆ.லோகேஸ்வரனும் நல்ல முறையில் கருத்துரைகளை வழங்கினர். இக்கருத்தரங்கத்திற்கு தமிழருவி த. சிவகுமாரன் நடுவராக கடமையாற்றினார். நிறைவாக நடைபெற்ற நாட்டிய அரங்கில், வவுனியா நர்த்தன சேஷ்திராலயா நடனப்பள்ளி இயக்குனர், செல்வி. பாலசுப்பிரமணியம் ஜெயசீலாவின் நட்டுவாங்கத்தில் “அழகுத் தெய்வம்” என்னும் நாட்டிய நாடகம் சிறப்பாக இடம்பெற்றது. ஒரு மணியளவில் விழா இனிதே நிறைவு பெற்றது.

103

Read More »

நெல் கொள்வனவை ஆரம்பித்தது வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்கம்!

வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்கம் விவசாயிகளின் நன்மை கருதி கால போக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளது. வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்கம் வவுனியா நகரம் ,ஆறுமுகத்தான் புதுக்குளம் ,ஓமந்தை ,கோமரசங்குளம் பால மோட்டை ஆகிய கிளைகள் மூலம் நெல்லை கொள்வனவு செய்யவுள்ளது என சங்கத்தலைவர் சி.சுப்பிரமணியம் தெரிவித்தார். சம்பா கிலோ ஒன்றுக்கு 35 ரூபாவாகவும் ஏனைய நெல் இனங்களுக்கு 32 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுங்கள்!

வவுனியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் சீரற்ற கால நிலையால் வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கோரி அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக மாவட்ட விவசாய அமைப்பின் செயலாளர் வேலாயுதம் இராஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட விவசாய அமைப்பு வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிசாட் பதியுதீனிடம் வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளின் நிலை குறித்தும் அதற்கான நிவாரணத்தை பெற்றுதருமாறும் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவே இக் கடிதம் அமைச்சரின் உத்தரவின் பேரில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெற்செய்கை, சிறுதானியச் செய்கைகள் என்பன பாதிப்படைந்ததினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே அவர்களுக்கு இதுவரை நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படாமையினால் வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களையும் மீளச் செலுத்த முடியாதளவிற்கு வவுனியா மாவட்ட விவசாயிகள் பெரும் கடன் சுமையை எதிர்கொண்டிருப்பதாகவும் மாவட்ட கமக்காரர் அமைப்பின் செயலாளர் வேலாயுதம் இராஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »

வவுனியா வர்த்தக நிலையங்களில் அளவீட்டு கருவிகளை சோதனை செய்யும் நடவடிக்கை தீவிரம்

வவுனியா, மன்னார் மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் தொடர்பாக சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதாக நியமங்கள் திணைக்கள வவுனியா,மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பதிகாரி பாலஸ்கந்தன் இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா மன்னார் மாட்டங்களில் உள்ள வர்தக நிலையங்களில் நிறத்தல் அளவை தொடர்பாக எமது திணைக்கள உத்தியோகத்தர்களினால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் மேற்கொண்ட சோதனைகளின் போது நிறுவை அளவை தொடர்பான பிரச்சனை இருப்பதாக இனங்காணப்பட்ட வவுனியா மாவட்டத்தில் உள்ள 09 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்திலும் மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 06 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 21ம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் வவுனியாவில் 07 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 12000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் அதில் 03 வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன் கடந்த மாதம் வவுனியாவில் 17 வர்தகர்களுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப்பட்டு 42000 ரூபாயும் மன்னார் மாவட்டத்தில் 17 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப்பட்டு 32500 ரூபாயும் அபராதமாக நீதவான் நீதிமன்றத்தினால் வித்திக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. . நிறுத்தல் கருவிகளுக்கு முத்தரை இடத்தவறியவர்கள் மாவட்ட செயலகத்தில் உள்ள எமது திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முத்திரை இட்டுக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

Read More »

வவுனியா சாந்தசோலை சந்திக்கருகாமையில் விபத்து

இன்று அதிகாலை வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேரூந்தும் ஓமந்தை பகுதியியல் இருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட மூவர் காயமடைநதுள்ளனர். அதிகாலை 3 மணியளவில் ஏ9 வீதியின் சாந்தசோலை சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Read More »

வவுனியாவில் 108 பேருக்கு சுயதொழில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது


வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 108 பேருக்கு சுயதொழில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் S.S.வாசன் இன்று தெரிவித்தார்.
வடமாகாண சமூக சேவை திணைக்களத்தினால் இரண்டு கட்டங்களாக சுயதொழில் கடன் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொடுப்பனவுகளுக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் வவுனியா பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

தனியார் ஊழியர் பிரச்சனைகளுக்கு ஊழியர் பற்றாக்குறையே காரணம்; வவுனியா உதவித் தொழில் ஆணையாளர்

வவுனியா மாவட்ட தனியார் ஊழியர் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதாக வவுனியா உதவித் தொழில் ஆணையாளர் எல்.ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள், வியாபார நிலையங்கள், கல்வி நிலையங்களில் வேலை செய்கின்ற ஊழியர்களின் உரிமைகள் மீறப்படுவதாக மாவட்ட சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் சிறுவர்களை வேலைக்கு அமர்துதல், ஊழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமை, உரிய முறையில் தொழிலாளர்கள் வேலைத்தளங்களில் நடாத்தப்படாமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகள் திறக்கப்படல், பெண்களுக்கான மலசலகூட வசதிகள் காணப்படாமை உள்ளிட்ட பல பிரச்சனைகள் காணப்படுவதாகவும் இது தொடர்பாக மாவட்ட தனியார் ஊழியர் சங்கம் அவமந்தப் போக்குடன் இருப்பதாகசுவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வவுனியா மாவட்ட தனியார் ஊழியர் சங்க தலைவர் என்.பிரதீபன் அவர்களிடம் கேட்டபோது, 

எமது தனியார் ஊழியர் சங்கத்தை பதிவு செய்வதற்காக மாவட்ட தொழில் திணைக்களத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பதிவு வேலைகள் முடியவில்லை. இதனால் ஊழியர் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதற்கு சட்ட ரீதியாக முடியவில்லை எனவும் பதிவு முடிந்ததும் புதிய அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டு தொழிலாளர் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி எல்.ஆனந்தநடராஜா கூறுகையில்,

வவுனியா மாவட்ட தனியார் ஊழியர் சங்கத்தின் ஆவணங்கள் பதிவுக்காக அனுப்பப்பட்டுள்ளன அவார்களால் தாயாரிக்கப்பட்ட யாப்பில் திருத்தங்கள் இருந்ததால் பதிவும் தாமதம் ஆகின்றது.

மேலும் தனியார் தொழிலாளார்கள் வவுனியாவில் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாக எமக்கும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவ்வாறு வருகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றோம்.

இருப்பினும் தனியார் நிறுவனங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு ஊழியர் பிரச்சனையே தடையாக உள்ளது. எமது மாவட்டத்தில் 06 தொழில் உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டியவிடத்து தற்போது 02தொழில் உத்தியோகத்தர்களே கடமையாற்றகின்றனர். 
அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அரச விடுமுறை நாள் இந்த நாட்டகளில் தனியார் நிறுவனங்களையும் மூடுவது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதுடன் ஊழியர்களுக்கு கட்டாயமாக வாரத்தில் ஒன்றரை நாள் லீவு வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றோம். 

ஊழியர் தொடர்பான ஆவணங்கள் வியாபார நிலையங்களில் சரியான முறையில் பேணப்படாததோடு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை இதனால் ஊழியர் தொடர்பான முழுமையான விடயங்களை பெறமுடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Read More »
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.