வவுனியா வர்த்தக நிலையங்களில் அளவீட்டு கருவிகளை சோதனை செய்யும் நடவடிக்கை தீவிரம்
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் தொடர்பாக சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருவதாக நியமங்கள் திணைக்கள வவுனியா,மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பதிகாரி பாலஸ்கந்தன் இராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மன்னார் மாட்டங்களில் உள்ள வர்தக நிலையங்களில் நிறத்தல் அளவை தொடர்பாக எமது திணைக்கள உத்தியோகத்தர்களினால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்த வாரம் மேற்கொண்ட சோதனைகளின் போது நிறுவை அளவை தொடர்பான பிரச்சனை இருப்பதாக இனங்காணப்பட்ட வவுனியா மாவட்டத்தில் உள்ள 09 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்திலும் மன்னார் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 06 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 21ம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்தில் வவுனியாவில் 07 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 12000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் அதில் 03 வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன்
கடந்த மாதம் வவுனியாவில் 17 வர்தகர்களுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப்பட்டு 42000 ரூபாயும் மன்னார் மாவட்டத்தில் 17 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப்பட்டு 32500 ரூபாயும் அபராதமாக நீதவான் நீதிமன்றத்தினால் வித்திக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.
நிறுத்தல் கருவிகளுக்கு முத்தரை இடத்தவறியவர்கள் மாவட்ட செயலகத்தில் உள்ள எமது திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முத்திரை இட்டுக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.