தனியார் ஊழியர் பிரச்சனைகளுக்கு ஊழியர் பற்றாக்குறையே காரணம்; வவுனியா உதவித் தொழில் ஆணையாளர்

வவுனியா மாவட்ட தனியார் ஊழியர் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதாக வவுனியா உதவித் தொழில் ஆணையாளர் எல்.ஆனந்த நடராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள், வியாபார நிலையங்கள், கல்வி நிலையங்களில் வேலை செய்கின்ற ஊழியர்களின் உரிமைகள் மீறப்படுவதாக மாவட்ட சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் சிறுவர்களை வேலைக்கு அமர்துதல், ஊழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படாமை, உரிய முறையில் தொழிலாளர்கள் வேலைத்தளங்களில் நடாத்தப்படாமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகள் திறக்கப்படல், பெண்களுக்கான மலசலகூட வசதிகள் காணப்படாமை உள்ளிட்ட பல பிரச்சனைகள் காணப்படுவதாகவும் இது தொடர்பாக மாவட்ட தனியார் ஊழியர் சங்கம் அவமந்தப் போக்குடன் இருப்பதாகசுவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வவுனியா மாவட்ட தனியார் ஊழியர் சங்க தலைவர் என்.பிரதீபன் அவர்களிடம் கேட்டபோது, 

எமது தனியார் ஊழியர் சங்கத்தை பதிவு செய்வதற்காக மாவட்ட தொழில் திணைக்களத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் பதிவு வேலைகள் முடியவில்லை. இதனால் ஊழியர் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதற்கு சட்ட ரீதியாக முடியவில்லை எனவும் பதிவு முடிந்ததும் புதிய அங்கத்தவர்கள் இணைக்கப்பட்டு தொழிலாளர் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி எல்.ஆனந்தநடராஜா கூறுகையில்,

வவுனியா மாவட்ட தனியார் ஊழியர் சங்கத்தின் ஆவணங்கள் பதிவுக்காக அனுப்பப்பட்டுள்ளன அவார்களால் தாயாரிக்கப்பட்ட யாப்பில் திருத்தங்கள் இருந்ததால் பதிவும் தாமதம் ஆகின்றது.

மேலும் தனியார் தொழிலாளார்கள் வவுனியாவில் பல பிரச்சனைகளை எதிர் நோக்குவதாக எமக்கும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவ்வாறு வருகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றோம்.

இருப்பினும் தனியார் நிறுவனங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதற்கு ஊழியர் பிரச்சனையே தடையாக உள்ளது. எமது மாவட்டத்தில் 06 தொழில் உத்தியோகத்தர்கள் பணியாற்ற வேண்டியவிடத்து தற்போது 02தொழில் உத்தியோகத்தர்களே கடமையாற்றகின்றனர். 
அத்துடன் ஞாயிற்றுக்கிழமை அரச விடுமுறை நாள் இந்த நாட்டகளில் தனியார் நிறுவனங்களையும் மூடுவது தொடர்பாக கவனம் செலுத்தி வருவதுடன் ஊழியர்களுக்கு கட்டாயமாக வாரத்தில் ஒன்றரை நாள் லீவு வழங்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றோம். 

ஊழியர் தொடர்பான ஆவணங்கள் வியாபார நிலையங்களில் சரியான முறையில் பேணப்படாததோடு ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை இதனால் ஊழியர் தொடர்பான முழுமையான விடயங்களை பெறமுடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.