Showing posts with label முல்லைத்தீவு. Show all posts

வவுனியா கடும் மழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு! (Photos)

வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் பல குளங்கள் வான் பாய்ந்து வருவதனால் விவசாயமும் பாதிப்படைந்தள்ளது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் மற்றும் நாவல்குளம் என்பன உடைப்பெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஓமந்தை கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் க. அமிர்தலிங்கம் இதன் காரணமாக 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை வயல் நிலங்கள் நீரிழ் மூழ்கியுள்ளமையினால் இம் முறை அறுவடை மேற்கொள்ள முடியாதிருப்பதன் காரணத்தால் அனைத்து விவசாயிகளுக்கும் நஸ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டுமெனவும் இது தொடர்பில் தான் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் கமநல கேந்திர நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஆகியோரை கோரியுள்ளதாகவும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு அவர்களுடைய செலவினை ஈடுசெய்யும் முகமாக 25000 ருபாய் வீதம் செலுத்த வேண்டும் எனவும்தெரிவித்தார்.
இத்துடன் வவுனியாவில் அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் தோட்டச்செய்கை உட்பட மேட்டுநிலப்பயிhச்செய்கைகளும் பாதிப்டைநதுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் இது தொடர்பில் அதிகாரிகள் நஸ்டஈடு வழங்க கவனம் செலுத்துமாறும் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக கமநல கேந்திர நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி சரோஜினியிடம் கேட்டபோது இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமது அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இரு குளப்பகுதிக்கும் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

Read More »

க.பொ.த உ/த (2012)பரீட்சை பெறுபேறு

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று (30) மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய தள முகவரியில் பார்வையிட முடியும். 

உத்தியோகபூர்வமான பெறுபேறுகள் நாளைய தினம் அஞ்சல் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

Read More »

A/L 2012 முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை- உறுதியாக அறிவிப்பு


க.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி  புதன் கிழமை வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் உறுதியாக அறிவித்துள்ளது.


அன்றைய தினமே எமது இணையத்தளத்தின் மூலமும் பெறுபேறுகளை பார்வையிட முடியும்


Read More »

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாதவர்கள் விண்ணப்பிக்கலாம்! - பெப்ரவரி பரீட்சை!

நாட்டிலேற்பட்ட சீரற்ற காலநிலையால் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களின் தரவுகளை பாடசாலை அதிபர்கள் ஊடாக வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 17, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றாத மணவர்களுக்கான மீள் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09,10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே பரீட்சைக்கு தோற்றும் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக தரவுகளை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பரீட்சார்த்திகள் தமது தகவல்களை நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான மேலதிக தகவல்களை 0112784208, 0112784537, 0113188350, 0112786200, 0112784201, 0112784204 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Read More »

அசிட் மழையும் பெய்யும் அபாயம்

நாட்டில் பல பாகங்களில் அண்மைகாலமாக பெய்து வரும் மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை வீழ்ச்சிகளுக்கு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகையே காரணம் என விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.



இதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், “அசிட்’ மழையும் பெய்ய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டில் பெய்த மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானி அனுர சி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.


தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகைகள், நுண்ணுயிர்களுடன் கலந்து வாயுமண்டலத்தைச் சென்றடைவதாலேயே இந்த மழை பெய்கின்றது. இதனாலேயே நிறங்களில் மழை பெய்கின்றது. இதற்கும் எரி நட்சத்திர மழைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்

Read More »

உறவுகளுக்கான உதவிக்கரம்

வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் ஏந்பட்ட வெள்ள அனர்த்தத்தால்பாதிக்கப்பட்ட தண்ணீர்ஊற்று கிராமத்தைச் சேர்ந்த 100 தமிழ்க்  குடும்பங்களுக்கு யாழ் இந்துக் கல்லுரியின் 2012 உயர்தரப் பிரிவு மாணவர்கள் யாழ் நகர் மைய நகர் றோட்டறக்ட் கழகத்துடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்களான உலர் உயவுப் பொதிகள், மருந்துப் பொருட்கள், உடைகள் மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள். யாழின் கரங்கள் – உறவுகளுக்கான உதவிக்கரம்- என பெயர் சூட்டப்பட்ட இச்செயற்திட்டத்தில் 6 தினங்களில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் பாடசாலைகள் பொது நல விரும்பிகளின் ஊடாக மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட 1.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் குமிழமுனைப் பிரதேசத்தில் தந்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ஊற்று கிராமத்தைச் சேர்ந்த 93 குடும்பங்களுக்கும் மேலும் 7 வறிய குடும்பங்களுக்கும் யாழ் இந்து மாணவர்கள் மற்றும் யாழ் நகர் மைய றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களினால் நேரடியாக மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.  இச் செயற்திட்டத்திற்கான போக்குவரத்துச் செலவு மற்றும் பாரிய நிதி உதவிகளை யாழ்ப்பாணம் சிவ குருநாத குருபீடம் வழங்கியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு குருபீடத்தின் குருபீடாதிபதியும் எமது ஏற்ப்பாட்டுக்குழு சார்பில் அன்றைய நிகழ்வுக்கான விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேலும் இவ்வாறான செயந்திட்டங்களை முன்னெடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாக யாழ் இந்து மாணவர்கள் தெரிவித்திருந்தனர்

_DSC5518_DSC5526

Read More »

முல்லைத்தீவில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மலக்குழியிலிருந்து மீட்பு

முல்லைத்தீவு – மாங்குளம் கொலனி பகுதியில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயிருந்த நிலையில் மலக்குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.

நேற்று மதியம் 1:00 மணியளவில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த யோகராஜா லெனுஜன்(வயது05) என்ற குறித்த சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளான்.
இதனையடுத்து, பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் மாங்குளம் பொலிஸிலும் முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சிறுவனின் வீட்டிற்கு அருகிலுள்ள வளவினுள் சென்ற அயலவர் ஒருவர் அங்கிருந்த கைவிடப்பட்ட மலசலகூட குழியினுள் சிறுவனின் உடலைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து விடயம் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

கிராமத்தை விட்டு வெளியேறும் மனநிலையுடன் வாழும் முல்லைத்தீவு புத்துவெட்டுவான் மக்கள்!


மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதும், அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றிக் கொடுக்கப்படாத நிலையில், கிராமத்தை விட்டே வெளியேறும் மனோநிலையுடன் தாம் இருப்பதாக முல்லைத்தீவு புத்துவெட்டுவான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
2009ம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தக் கிராமத்தில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தபோதும் போக்குவரத்து, மருத்துவம், வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றிக் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மாற்றிடம் செல்ல வசதியற்ற 75 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இன்று கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளபோதும் 50 குடும்பங்கள் கூடாரங்களிலும், அரைநிரந்தர வீடுகளிலும் வாழ்கின்றனர்.
மேலும் சாதாரணமான சுகயீனத்திற்கு மருந்தெடுப்பதற்கும் கூட 18 கிலோ மீற்றர் பயணம் செய்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அல்லது அதேயளவு தூரம் பயணம் செய்து மல்லாவி வைத்தியசாலைக்கு மக்கள் செல்ல வேண்டியிருக்கின்றது.
போக்குவரத்திற்காக கிராமத்திலிருந்து 7 கிலோ மீற்றர் தூரத்திலிருந்கும் ஏ-9 வீதிக்குச் சென்று அங்கிருந்தே பேருந்தினை எடுக்கவேண்டிய நிலையுள்ளது. யுத்தத்திற்கு முன்னர் இந்தக் கிராமத்திற்கூடாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தபோதும் யுத்ததின் பின்னர் அந்த நிலை மாற்றப்பட்டிருக்கின்றது.
இதேபோல் புத்துவெட்டுவான் கிராம பாடசாலையில் யுத்தத்திற்கு முன்னர் தரம் 9 வரையான வகுப்புக்கள் நடத்தப்பட்டபோதும் தற்போது தரம் 5 வரையான வகுப்புக்களே இடம்பெற்று வருகின்றன.
தரம் 5 இற்கு மேல் கற்கும் மாணவ, மாணவியர் 8 கிலோ மீற்றர் காட்டுப்பகுதிக்கூடாக பயணம் செய்து ஜயங்கன் குளம் கிராமத்திற்குச் செல்கின்றனர். இந்நிலையில் தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More »

A/L 2012 பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 30ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதே தினத்தில் பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
Read More »

வட மாகாணப் பாடசாலைகள் மோதும் கரப்பந்தாட்டத் தொடர்


வட மாகாண கல்வித் திணைக் களத்தினால் வட மாகாணப் பாடசாலை களுக்கு இடையேயான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பங்களை வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற் கல்வி பிரிவினால் கோரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து நடத்தும் இப்போட்டிக்கான விண்ணப் பங்களை யாழ். மாவட்டப் பாடசாலை அணிகள் யாழ்ப்பாணம் கல்வி வலய உடற் கல்வி கல்விப் பணிப்பாளர் சண் தயாளனுடனோ அன்றி யாழ்ப்பாணம் கல்வி வலயம் வலயக் கல்வி அலுவலகம் நல்லூர் யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடனும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டப் பாடசாலை அணிகள் ஏ. எம். சுபைர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற் கல்வி வலயக் கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு வவுனியா என்னும் முகவரியுடனோ உடன் தொடர்பு கொள்ளும் படியும் வட மாகாண உடற்கல்வி பிரதிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


Read More »

முல்லைத்தீவில் முந்திரிப் பயிர்ச் செய்கை


நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முந்திரி பயிர்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினால்ட் கூரேயின் ஆதரவுடன் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமான ஒன்றுகூடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் 120 விவசாயிகள் மத்தியில், அமைச்சரால் முந்திரி செடிகள் பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டன. இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம் விவசாயிகளுக்கு முந்திரி பயிரிடல் பயிற்சியையும் வழங்கியது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 ஏக்கர்கள் பயிரிட திட்டங்கள் முன்னெடிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட திவி நெகும அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 11 மாதங்களில் இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம் முந்திரி விவசாயிகள் மத்தியில் 700,000 முந்திரிச் செடிகளை விநியோகித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், முந்திரி கூட்டுத்தாபனம் 22 மாவட்டங்களில் உள்ள முந்திரி விவசாயிகள் மத்தியில் முந்திரி செடிகளை விநியோகம் செய்தது. இவ் விவசாயிகள் ஏற்கனவே 1,000 உள்நாட்டு பொருளாதார அலகுகளை ஸ்தாபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் ஏற்கனவே 20,000 ஏக்கர்களில் பயிரிட்டுள்ளனர். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதற்கான நிதியை வழங்கியுள்ளது. முந்திரி கூட்டுத்தாபனம் 22 மாவட்டங்களில் உள்ள 130 பிரதேச செயலக அலுவலகங்கள் மத்தியில் அதிகலவான முந்திரிச் செடிகளை விநியோகித்துள்ளது.
அதேநேரம் 3,500 முந்திரி பயிர் உற்பத்தியாளர்கள் இணைந்து 4,000 ஏக்கர்களில் பயிர்செய்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் 6,000 ஏக்கர்களில் மேலும் 500,000 முந்திரி செடிகள் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் முந்திரி கூட்டுத்தாபனமானது இலவசமாக முந்திரி தோட்டக்காரர்கள் மத்தியில் உயர்தர முந்திரி செடிகளையும் வழங்கியுள்ளது

Read More »

பிரச்சினைகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு மீனவர்கள்

முல்லைத்தீவு கடற்பரப்புக்குள் நாளாந்தம் நானூறுக்கு மேற்பட்ட தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் தெரிவிக்கிறது. 

இதனால் தங்களின் தொழில் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது... 

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் சிறிது காலம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்து. 

ஆனால் அந்தக் காலப் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மீனவர்கள் அமைச்சர்கள், படைத்தரப்பு, அதிகாரிகள் என பலரிடமும் பல தடவைகள் கோரிக்கை விடுத்து பல அலுவலகங்களுக்கு ஏறி இறங்கிய பின்னர் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கடற்றொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

யுத்தத்தால் தங்களுடைய பெறுமதிமிக்க கடற்றொழில் உபகரணங்களை இழந்து பின்னர் மிள்குடியேறி கடன், லீசிங் என பலவேறு சுமைகளுக்கு ஊடாக மீண்டும் தொழிலினை ஆரம்பித்து மேற்கெண்டு வருகின்ற நிலையில் தென்னிலங்கை மீனவர்களின் வருகையும் தொழில் நடவடிக்கைகளும் தங்களின் தொழிலினை பெருமளவுக்கு பாதித்துள்ளதாக சமாசத்தினர் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் தென்னிலங்கை மீனவர்கள் தடை செய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தங்கள் பிரதேச கடல் வளங்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதோடு தங்களுடைய கடற்றொழில் உபகரணங்களும் சேதமடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதுகுறித்து தங்களால் பல அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரைக்கும் பயன் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். 

அதுமட்டுமன்றி இந்திய மீனவர்களின் வருகையும் அவர்களின் றோலர்களின் நடவடிக்கையும் முல்லைத்தீவு மீனவர்களை மேலும் மேலும் பாதித்துவருகிறது. 

சுனாமி,யுத்தம் என தொடச்சியாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த முல்லைத்தீவு மீனவர்களின் பொருளாதாரத்தை, தற்போது மேற்படி பிரச்சினையும் தொடச்சியாக பாதித்து வருகிறது. 

Read More »

முல்லைத்தீவு ல் 16ஆயிரம் மாணவர்களின் கல்வி பாதிப்பு

முல்லைத்தீவுக்கல்வி வலயத்திற்குட்பட்ட 52 பாடசாலைகளில் 185இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையினால் 16750இற்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ம.ராஜ்குமார். தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் நடை பெற்ற போரின் போது பல பாடசாலைகளின் கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பௌதீக வளங்களும் அழிவடைந்துள்ளன. மக்கள் இடம்பெயர்ந்து அதன் பின்னர் மீள்குடியமர்த்தப்பட்டு முல்லைத்தீவு கல்வி வலயத்திலுள்ள 56 பாடசாலைகளில்; 52 பாடசாலைகள் தற்போது இயங்கிவருகின்றன.

ஆனால் இங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் நிலை பற்றாக்குறையாகவே உள்ளது. இதில் ஆரம்பக் கல்விக்கு 73 ஆசிரியர்களும், இடைநிலை கல்வியில் கணிதம், விஞ்ஞானம், ஆகிய பாடங்களிற்கு 59 ஆசிரியர்களும், ஆங்கில பாடத்திற்கு 29 ஆசிரியர்களும், க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களிற்கு 15 ஆசிரியர்களும் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவிற்கு 10 ஆசிரியர்களுமாக சுமார் சில நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனைவிட வருடாந்த இட மாற்றம் பெறும் ஆசிரியர்களும், 2 வருட ஒப்பந்த அடிப்படையில் எதிர்வரும் மாசிமாதம் தமது சேவையை நிறைவு செய்து இடமாற்றம் பெற்று செல்ல இருக்கும் நிலையில் மேலும் ஆசிரியர் பற்றாக்குறை நிகழவுள்ளதாகவும் இது தொடர்பாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள தாகவும், தற்போது நடைபெற இருக்கும் இடமாற்றத்தில் இவ் பற்றாக்குறையை நிறைவு செய்து தருவதாகவும் தெரிவித்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

40 ஆண்டுகளுக்கு பின்னர் பரீட்சை சட்டத்தில் மாற்றம்

1-depart
இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் பரீட்சைத் திணைக்கள வடடாரங்கள் தெரிவித்துள்ளன.
2013ஆம் ஆண்டில் பரீட்சை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பரீட்சை மோசடிகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர  சாதாரண தரப்பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே வெளியாகியிருந்தது.
எனவே பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட அரச அச்சக அதிகாரிக்கு வாழ்நாள் பரீட்சைத் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் கடந்த காலங்களில் பரீட்சைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை ரத்து செய்வது குறித்தும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


Read More »

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 319பேர் டிசம்பரில் கைது


வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் பிரதேசத்தில் கடந்த டிசெம்பர் மாதத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 319பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எச்.ஜயவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக தின மற்றும் திறந்த நிலை பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் இவர்களை விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது அந்தந்த பகுதி பொலிஸாக்ரின் உதவியுடன் கைது செய்துள்ளதாகவும் இவர்களில் 131பேர் தின பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்த அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

Read More »

காஸ், மின்கட்டணம் அதிகரிக்கும் !


காஸ் மற்றும் மின்கட்டணம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், காஸ் மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள எரிவாயுக் கம்பனிகளின் வேண்டுகோள் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் பரிசீலிக்கப்பட்டுவருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வாரம் பல அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 2 வகை உலை எண்ணெய்யின் விலையை உயர்த்திவிட்டது.
இலங்கை மின்சாரசபை மற்றும் வேறு அனல் வெப்ப மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மானிய விலையில் எரிபொருளை வழங்குவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதமொன்றுக்கு 4,194 மில்லியன் ரூபா நட்டமடைவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.பி.எம்.ஜி.றொஷான் கூறினார்.
129 ரூபாவுக்கு விற்கவேண்டிய எண்ணெயை 115 ரூபாவுக்கு விற்பதால் ஒரு லீற்றரில் 14 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி இலங்கை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சகல விபரங்களையும் அனுப்பியுள்ளதென இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர் நிஹால் விக்கிரமசூரிய கூறினார்.
உலை எண்ணெயின் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கங்களை ஆராய்வதற்காக நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு மின்சக்தி, வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமை தாங்குவார். இதன் பின் உலை எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக நாம் ஓர் அறிக்கையை பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைப்போமெனவும் அவர் கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்னும் சில நாட்களில் மின்னுற்பத்தியை தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையா?


அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. பௌத்த மக்கள் செறிந்து வாழும் இலங்கையில், பௌத்தர்களுக்கு முக்கியமான பௌர்ணமி தினங்கள் இதுவரை காலமும் வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2013ம் ஆண்டு அரச நாட்காட்டிகளில் பௌர்ணமி தினங்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும், வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு ஊடக அறிக்கை மூலம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், ஏனைய மதங்களுக்கு முக்கியமான தினங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தைப்பொங்கல், ரமழான் பண்டிகை, நபிகள் பிறந்த தினம், ஹஜ் பெருநாள், நத்தார் பண்டிகை போன்றவை வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

வடக்குக்கு 8 விசேட குழுக்கள் அனுப்பி வைப்பு


வட மாகாணத்தில் மோசமான காலநிலை, வெள்ளப்பெருக்கினால் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ள மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்க ளுக்கும் மேலதிகமாக எட்டு விஷேட குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தினகரனுக்குத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டோ மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர்கள் ஐவர் அடங்கிய எட்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய மன்னார் மாவட்டத்திற்கு மூன்று குழுக்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு மூன்று குழுக்களும், வவுனியா மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தன்னுடன் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்த ஆளுநர், பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முதற் கட்டமாக 2 வாரங்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை அமைச்சு வழங்கியுள்ளதுடன், சிறுவர்களுக்கு தேவையான பால்மா, பாய் மற்றும் மருத்துவ பொருட்களை மாகாண சபையின் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ள அதே சமயம், தான் இன்று கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஆளுநர் ஜி. எ. சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.
அரசாங்க அதிபர்கள், சகல உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை அழைத்து பாதிக்கப்பட்ட சகல மாவட்டங்களுக்கும் தேவையான முழு¨யான நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்பொழுது மழை பெய்து குறைந்துள்ள நிலையில், குளங்களில் நீர்மட்டங்கள் குறைந்து வருவதுடன், குளங்களில் சில வான்கதவுகள் மூடப்பட்டு வருவதுடன், எஞ்சியுள்ள வான் கதவுகளை எதிர்வரும் ஓர் இரு தினங்களில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித தங்குதடைகள் இன்றி உடனடியாக நிவாரணங்களை உரிய முறையில் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரி களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Read More »

இயற்கையின் சீற்றத்தில் முல்லைத்தீவு



முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 2362 குடும்பங்களைச் சேர்ந்த 7796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலகப் பிரிவில் ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 3505 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலகப் பிரிவில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 972 பேரும் மாந்தை கிழக்கில் 328 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர். துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 420 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் அவர்
கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு குளம் நிரம்பி வழிவதுடன் பேராறும் பெருக்கெடுத்து ஓடுகிறது. ‘உடனடியாக மக்களின் பாதிப்புத் தொடர்பில் முழுமையாகக் கணக்கிட முடியாதுள்ளது. பிரதேச செயலக ரீதியாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்.
கேப்பாபிலவில் வலுக்கட்டாயமாக மீளக்குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் அன்றாடக் கருமங்களைச் செய்ய முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவு, சீனியாமோட்டைப் பகுதியில் 110 குடும்பங்கள் சிறீலங்கா இராணுவத்
தினராலும், அதிகாரிகளாலும் கட்டாயமாக மீளக்குடியமர்த்தப்பட்டனர். கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் மழையினால் இவர்களின் தற்காலிகக்குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
சமைக்கவோ, படுத்துறங்கவோ முடியாத நிலையில் தாம் அவதிப்படுகின்றோம் என்று அந்த மக்கள் தெரிவித்தனர். குடிசைகளுக்குள் மேலும் வெள்ளம் புகாதவாறு மண் அணைகளை அமைப்பதிலும், தேங்கியுள்ள வெள்ளத்தை அகற்றுவதிலும் நேற்று முழு நாளும் தாம் ஈடுபட்டனர் என்று அந்த மக்கள் கூறுகின்றனர்.
ஒட்டுசுட்டானில் பண்டாரவன்னி, கருவேலன் கண்டல், கற்சிலைமடு, பேராறு, கனகரத்தினபுரம் வசந்தபுரம், முத்துஐயன்கட்டு, மூத்தவிநாயகர் முதலாம் கண்டம், இரண்டாம் கண்டம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியை மூடி மூங்கிலாறு பெருக்கெடுத்து பாய்கிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  
முல்லைத்தீவுக்கு சுற்றுலா வந்த 150ற்கும் மேற்பட்ட சிறீலங்கா வாகனங்கள் வெளியேற முடியாமல் உடையார்கட்டுப் பகுதியில் சிக்கிக்கொண்டிருந்தன. இதேவேளை, இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வடைந்துள்ளது. குளத்தின் மொத்த நீர்க்கொள்ளவு 34 அடியாக உள்ள நிலையில் குளத்துக்கான நீர் வரத்து மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகரித்தாலும் குளத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறப்படுகின்றது. இரணைமடுக்குளம் உடைப்பெடுத்தால் பாரிய அழிவு ஏற்படும் என்பதால் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கடமைக்கு அமர்த்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, இம்மாவட்டத்திலுள்ள ஏனைய குளங்களான அக்கராயன் குளம், கல்மடுக்குளம், பிரமானந்தன்குளம், புதுமுறிப்புக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகவடுவான்குளம், குடமுறுட்டி குளம் ஆகிய குளங்கள் தொடர்ந்து வான்பாய்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Read More »
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.