Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!

கூகுள் தளம் Easter Eggs என்ற பெயரில் அவ்வப்போது புதுமையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தும். உதாரணத்திற்கு Zerg Rush, Do the Harlem Shake போன்றவைகள். தற்போது தனது Google I/O தளத்தில் ரகசிய விளையாட்டை வைத்துள்ளது கூகுள். அதனை கண்டுபிடிக்கலாம் வாங்க!

Google I/O என்றால் என்ன? 

Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். இந்த வருடம் வரும் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பாக Android 5.0 Key Lime Pie பதிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை பிரபலப்படுத்தவே இந்த ரகசிய விளையாட்டை வைத்துள்ளது. ரகசிய குறியீடு தெரிந்தால் மட்டுமே அதனை பார்க்க முடியும். 

https://developers.google.com/events/io/ என்ற முகவரிக்கு சென்றால் மேலே உள்ள படத்தில் உள்ளது போல I, O என்று இருக்கும். அது தான் குறியீடு. அதை க்ளிக் செய்வதன் மூலம் ஒவ்வொரு விளையாட்டுக்களையும் விளையாடலாம்.

உதாரணத்திற்கு IIOIIOII என்ற குறியீட்டை அழுத்தினால் ட்ரம்ஸ் வாசிக்கலாம்.



 மற்ற குறியீடுகள்:
  • Cat : IIIOOIII
  • Space: OOIOIOIO
  • Pong : IOOOOOOI
  • Bacon : IOOIOOOO
  • Simone : IIOIOOII
  • Eightbit : OIOIOOII
  • Synth : IOOOIOOO
  • ASCII : OIIIIIII
  • Bowling : OIIIOIOI
  • Rocket : OIOOOIOI
  • Burger : OOIIIOOI

Read More »

நீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்? -


விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால்
விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு.

இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும்.

அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும். இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும்.

அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும்.

கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.

அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். மாற்றங்கள் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

Read More »

ஆன்ட்ராய்ட் மொபைலில் பேட்டரி சார்ஜ் நீண்ட நேரம் இருக்க

ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. 

பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. 

நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது? 



மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Use) பகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.

பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:

1. திரை ஒளிர்வு (Brightness)



மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

2. GPS, Wi-Fi & Bluetooth



தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.

3. Live Wallpaper



ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

4. Home Screen Widgets



ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

5. Background Applications

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 

Read More »

'பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...!

USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட்டா? என கேட்கிறீர்களா?
ஆம்.. பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர் பயன்படுத்தவதை தடுக்க முடியும். சாதாரண கோப்புகள் என்றால் பரவாயில்லை. முக்கியமான மதிப்புமிக்க கோப்புகளாக இருப்பின் பாதுகாப்பு அவசியம்தானே..?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.

அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity

இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.

பிளாப்பி(Floppy) கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு பதிலாக இக்காலத்தில் பயன்படுபவைகள் இந்த Flash Drive or pendrive or Usb கள். இவை எந்தளவுக்கு பயன்மிக்கதாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு ஆபத்தையும் விளைவிக்கக்கூடியவைதான். பயந்துவிடாதீர்கள். இதற்கு கொஞ்சம் நன்றி உணர்வு அதிகம். அதாவது யாரிடமிருந்தும்(கணினி) வைரஸ் வந்தாலும் பெற்றுக்கொள்ளும். உடனே அதை நம்முடைய கணினிக்கு பரப்பிவிடும் அற்புதமான ஒரு செயலைச் செய்துவிடும். ஆகவே வைரஸ் சாப்ட்வேர் மூலம் சோதனை செய்து கொள்வது நல்லது.

USB -இதிலுள்ள தகவல்களை பாதுகாக்கவும், இதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கும் உதவ ஒரு மென்பொருள் உண்டு.
Click Here To Download

OR
http://adf.ly/KfRrO
மேற்கண்ட சுட்டியின் வழிசென்று Install wizard என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக்கொள்ளுங்கள்.


இதில் போர்ட்டபிள் வெர்சனும் உள்ளது. தேவையெனில் Portable version ஐ தரவிறக்கிக்கொள்ளலாம். மென்பொருளை தரவிறக்கி நிறுவியவுடன் TaskBar -ல் USB alert செய்திப்படம் காட்டும்.

இம் மென்பொருள் Windows XP, Windows Vista (32 / 64 bit), Windows 7 (32 / 64 bit) இயங்குதளங்களில் ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமாக நாம் பென்டிரைவ் கணினியில் இணைத்தவுடன் அலர்ட் மெஜேஸ் வருமல்லவா? அதைப்போன்றே இம்மென்பொருளை நிறுவியவுடனும் அலர்ட் மெசேஜ் வரும். பிறகு அந்த ஐகானை சொடுக்கி Eject என்பதை கிளிக் செய்து பென்டிரைவ் கணினியிலிருந்து நீங்கிவிடலாம்.

ஒவ்வொரு முறையும் USB Pendrive இந்த முறையில் எடுக்கும்போது பென்டிரைவ் பாதுகாப்பாக நீங்குவதோடு, சேமிக்கப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

Read More »

அண்ட்ராய்டு 'ரகசிய குறியீடுகள்'

புதிய அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரா நாங்கள்? அப்படியானால் உங்களுடைய செல்போன் தொடர்பான பல்வேறு விவரங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் போன் பற்றிய தகவல்கள், பேட்டரி, காப்பு முறை, கேமரா அமைப்புகள், சேவைமுறை என பல்வேறு விவரங்களை தெரிந்துகொள்வதற்கான ரகசிய குறியீடுகளைத்தான் இங்கே வழங்கியுள்ளோம்.
android secret codes hacks


1) உங்கள் Android தொலைபேசியின் IMEI எண் தெரியவேண்டுமா..?
குறியீடு: * # 06 #
2.) தொலைபேசியின் பேட்டரி தொடர்பான விவரங்கள்:
குறியீடு: * # * # 4636 # * # *
3.)போனை ரீசெட் செய்ய:
குறியீடு: * # * # 7780 # * # *
4.) முழு போனையும் பார்மட் செய்ய:
குறியீடு: * 2767 * 3855 #
5.) ஜீடாக் சேவை கண்காணிப்பு
குறியீடு: * # * # 8255 # * # *
6.) கேமரா மற்றும் நிறுவன மென்பொருள் அமைப்புகள்
குறியீடு: * # * # 34971539 # * # *
7.) முடிவு கால் / பவர்
குறியீடு: கோட்: * # * # 7594 # * # *
8.) காப்பு முறை
குறியீடு: * # * # * # * # * 273283 * 255 * 663282
9.) சேவை முறை
குறியீடு: * # * # 197328640 # * # *
10.) WLAN, GPS, ப்ளூடூத் டெஸ்ட்
குறியீடு: * # * # 232339 # * # * அல்லது * # * # 526 # * # * அல்லது * # * # 528 # * # *
11.) டெஸ்ட் GPS
குறியீடு: * # * # 232331 # * # *
12.) ப்ளூடூத் டெஸ்ட்
குறியீடு: * # * # 232337 # * # *

Read More »

பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம்.

தற்பொழுது இப்படி ஒரு புகைப்படம் முகநூளில் வருகிறது.
இது ஒரு விதமான வைரஸ் இதை கிளிக் செய்தால்.
நீங்கள் எபோளுது எல்லாம் ஆன்லைன் வருகிரிர்களோ அப்பொழுது எல்லாம் உங்களின் அனுமதி இல்லாமல் இந்த புகைப்படம் உங்களது பக்கத்திலும் உங்களது நண்பர்கள் பக்கத்திலும் பகிரபட்டுவிடும். 
உங்களது முகநூலும் வேகம் குறைந்து காணப்படும். 
face book ஜ பயன்படுத்தும் அனைத்து நண்பர்களும் கவனமாக இருங்கள்.மீண்டும் facebook மூலம் I Just got Facebook BLACK என்ற பெயரில் ஒரு வைரஸ் பரவிக்கொண்டு இருக்கிறது.
ஆகையால் இப்படி பட்ட புகைபடத்தை யாரும் கிளிக் செய்து பார்காதிர்கள்...!



Read More »

Internet Download Manager Free Download (New)

Internet Download Manager (IDM)  புதிய பதிப்பினை இலவசமாக தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
  IDM v6.15 Crack file for free Download|
Internet Download Manager (IDM) has a smart download logic accelerator that features intelligent dynamic file segmentation and safe multipart downloading technology to accelerate your downloads. IDM increases download speeds by up to 5 times, resumes and schedules downloads. Comprehensive error recovery and resume capability will restart broken or interrupted downloads due to lost connections, network problems, computer shutdowns, or unexpected power outages. Simple graphic user interface makes IDM user friendly and easy to use. IDM has a smart download logic accelerator that features intelligent dynamic file segmentation and safe multipart downloading technology to accelerate your downloads. Unlike other download managers and accelerators, IDM segments downloaded files dynamically during download process and reuses available connections without additional connect and login stages to achieve best acceleration performance.

CLICK HERE TO DOWNLOAD INTERNET DOWNLOAD MANAGER

Read More »

எழுத்தாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்: பிழை கண்டுபிடிக்கும் புதிய பேனா அறிமுகம்

தற்சமயத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கம் இல்லாவிட்டாலும் பேனா புழக்கம் குறைந்தபாடில்லை.
பத்திரிக்கை நிருபர்கள், சட்டத்தரனிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் பாக்கெட்டிலும் பேனா கண்டிப்பாக இருக்கும்.
சரி, எழுதும் போது பிழை வருவது சகஜமான விடயமே. ஆனால் அடிக்கடி பிழை வரும் பட்சத்தில் தலைமை அதிகாரிகளிடத்தில் கண்டிப்பாக வசவு வாங்கவேண்டியதுதான்.
இனி, அந்த கவலை இருக்காது. இலக்கணப் பிழை மற்றும் எழுத்துப் பிழையுடன் நாம் எழுதும் பட்சத்தில் இதுகுறித்து அதிர்வுகள் மூலம் நமக்கு தகவல் தெரிவிக்கும் ஸ்மார்ட் பேனாவை ஜேர்மன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பிழையின்றி எழுதுவது எப்படி என்பதனடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேனா, உதவிகரமாக இருக்கும் என்று லெர்ன்ஸ்டிப்ட் என்ற ஜேர்மனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More »

iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் i-FlashDrive HD

அப்பிள் நிறுவனமானது தனது உற்பத்திகளுக்கென ஒவ்வொரு துணைச்சாதனத்தையும் பிரத்தியேகமாக தயாரித்து வழங்குவதில் சிரத்தையுடன் செயற்பட்டுவருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது தனது iOS இயங்குதளத்தில் செயற்படும் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியவாறு i-FlashDrive HD எனும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்பிள் கணினிகளிலிருந்து ஏனைய iOS சாதனங்களுக்கிடையே தரவுகளை பரிமாற்ற உதவும் இந்த i-FlashDrive HD ஆனது 4 GB, 8 GB, 16 GB, 32 GB மற்றும் 64 GB சேமிப்பு கொள்ளளவுகளை உடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
18 கிராம்களே எடையுள்ள இச்சாதனங்கள் உச்சமாக 10 MB/s வேகத்தில் தரவுகளை பரிமாற்றும் வல்லமை கொண்டவையாக காணப்படுகின்றன. இவற்றின் பெறுமதியானது அவற்றின் சேமிப்பு கொள்ளளவுகளுக்கு ஏற்ப 99 டொலர்களிலிருந்து 329 டொலர்கள் வரை வேறுபடுகின்றது.

Read More »

அமேஷன் வெளியிடும் புதிய அம்சத்துடன் கூடிய Anroid Apps

தற்போது தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் பலவிதமான ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் அதி உயர் மெகாபிக்சல் கொண்ட கமெராக்கள் மூலம் புகைப்படம் எடுத்து ரசிப்பது இயல்பாகிவிட்டது.
அத்துடன் நின்றுவிடாது அப்புகைப்படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் அனேகமானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இவர்களுக்காக அமேஷன் கிளவுட் ட்ரைவ் சேவையானது Amazon Cloud Drive Photos எனும் அன்ரோயிட் சாதனங்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை தானாகவே இணையத்தளங்களில் விரைவாக பதிவேற்றம் செய்யக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கென அமேஷன் இலவசமாக வழங்கும் 5GB வரையான ஒன்லைன் சேமிப்பு வசதியினை பயன்படுத்த முடியும்.

Read More »

இணையத்தளங்​களை பார்வையிடு​ம்போது புகைப்படங்​களை தவிர்ப்பதற்​கு


இணையத்தளங்கள் அனைத்தும் அதிகளவில் புகைப்படங்கள் மற்றும் அனிமேஷன்களை உள்டக்கியதாகவே காணப்படுகின்றன.
எனினும் குறைந்த வேகம் உடைய இணைய இணைப்பான GSM/GPRS/EDGE போன்றவற்றில் இவ்வாறான இணையத்தளங்களை பார்வையிடும்போதும் மிகுந்த தாமதம் ஏற்படும். இத்தாமதத்தை தவிர்ப்பதற்கு பார்வையிட விரும்பும் இணையத்தளங்களிலிருந்து புகைப்படங்கள் தென்படுவதை தடுப்பது ஒரு சிறந்த வழிமுறையாகும்.
இதனை கூகுளின் குரோம் மற்றும் Mozilla Firefox உலாவிகளில் இலகுவாக செயற்படுத்த முடியும்.
குரோம் உலாவியில் செயற்படுத்துவதற்கு
1. குரோம் உலாவியில் புகைப்படங்கள் தரவிறங்குதை தடை செய்யவேண்டிய இணையத்தளத்தினை ஓப்பன் செய்யவும்.
2.தொடர்ந்து குறித்த இணைப்பக்கத்திற்கான தவகல்களை பார்வையிடும் ஐகானை கிளிக் செய்யவும்.
3. அதன் பின்னர் தோன்றும் Drop Down மெனுவில் காணப்டும் புகைப்படத்திற்கான ஐகானை கிளிக் செய்து “Always Block on this Site” என்பதை தெரிவு செய்து தளத்தினை Refresh செய்யவும்.
Mozilla Firefox உலாவியில்  Image Block எனும் நீட்சியை பயன்படுத்துவதன் மூலம் இவ்வசதியினை பெற்றுக்கொள்ள முடியும்.

Read More »

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற முடியும்...!

1.இந்த வழிமுறையானது 1GBமெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம் நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள் வது நல்லது.

3.இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி
http://www.mediafire.com/?b27rb10ub00m94d

4. தரவிறக்கம் செய்த மென் பொருளை ஓபன் செய்யும்போ து இது போன்ற வடிவில் காட் டும்.

5. மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க காட்டப்படும் ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார் டை மட்டும் பயன் படுத்தவும்.

6. இப்போது உங்கள் மெமரி கார் டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட் டபடும்

7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்.

8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லா ம் அழிந்து 2GB மெமரி கார்டாக மாறிவிடும்.

9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு மீண்டும் கணினி யில் சொருகவும். மெமரி கார்டி ன் அளவு 1912MB என்று காட்டபடும்.



Read More »

ONLINE -ல் இலகுவாக பணம் சம்பாதிப்பது எப்படி?

.P.Latheep
support@vavuniya.info

இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ? உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள். இங்கே நான் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும். எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை. நம்பிக்கையோடு தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.

ClixSense-ல் சேருவது எப்படி ? 

 1. இங்கு கிளிக் செய்து ClickSense தளத்திற்கு செல்லவும்.

2.    வரும் திரையில் Sign up என்பதனை கிளிக் செய்யுங்கள்.



3.     வரும் பார்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து Sign up Now பட்டனை அழுத்துங்கள்.

4.    உங்கள்  மெயிலுக்கு லாகின் செய்து ClickSense  இல் இருந்துவந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

5.    மீண்டும் ClixSense  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username, Password என்பவற்றை இட்டு ClixSense  தளத்தினுள் லாகின்செய்யுங்கள்.
6.    விளம்பரத்தை க்ளிக் செய்க
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ளபடத்தில் உள்ளது போல் இருக்கும்.
உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம்சம்பாதித்திர்கள் என இருக்கும்இப்பொழுது பணம் சம்பாதிக்க View Ads-  க்ளிக் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன.முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் இப்பொழுது விளம்பரமானதுஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்.விளம்பரமானது validated ஆகும் வரை பொறுத்திருக்கவும். validated ஆகிய பின்பு Tab close செய்யவும்.

இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும்.அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள்அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.மேலும் Upgrade Golden Membership மூலம் Rented Referrals, Adprize மற்றும் மூலமும் சம்பாதிக்க முடியும்.
அவ்வளவுதான் தினமும் 5 நிமிடம் விளம்பரங்களை க்ளிக் செய்துஒரு மாதம் முயற்ச்சி செய்து பாருங்கள் பிறகு நீங்களே “ நிறையபணம் சம்பாதிப்பதற்கு இதை விட எளிமையான வழி இல்லை “ என்றுசொல்வீர்கள்கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே இணையுங்கள்.




Read More »

லேப்டாப் அடிப்படை எதிர்பார்ப்புகள்

லேப்டாப் வாங்குவதற்குப் பதிலாக, டேப்ளட் பிசி ஒன்று வாங்கலாமா என்றும், லேப்டாப் வாங்குவதாக இருந்தால், என்ன என்ன அம்சங்களை நாம் கவனிக்க வேண்டும் 
“என்ன வாங்குவது?” என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாக, “என் தேவை என்ன?” என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுப் பதிலை எழுதிப் பாருங்கள். 
உங்களுடைய தேவை இணையபக்கங்களைக் காண்பதும், மின்னஞ்சல்களைப் படித்து, பதில் அளிப்பது மட்டுமே எனில், உங்களுக்கு டேப்ளட் பிசி மட்டும் போதும். இவை மட்டுமின்றி, வேறு சில முக்கிய பணிகளுக்கும், பள்ளிக் கல்வி, கல்லூரிப் பணி மற்றும் அன்றாட வாழ்க்கை மற்றும் அலுவலக வேலைகளுக்குக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவதாக இருந்தால், இன்றைய நிலையில் டேப்ளட் பிசிக்கள் நம் தேவையை முழுமையாக நிறைவேற்றாது. இந்த நிலையில், நமக்கு ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் மட்டுமே உதவும். டேப்ளட் பிசியைக் காட்டிலும் பெரிய திரை, கீ போர்ட், அதிக அளவில் பைல்களைச் சேமிக்கும் வசதி, உங்களுடைய அனைத்து சாப்ட்வேர் தொகுப்புகளையும் அரவணைத்து இயக்கும் தன்மை ஆகியவை ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமே கிடைக்கும் வசதிகளாகும். 
சரி, லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், அதில் நாம் எதிர்பார்க்க வேண்டிய, அதில் இருக்க வேண்டிய வசதிகள் என்ன என்ன என்று பார்க்கலாம். 
1. குறைந்தது 4 ஜிபி ராம் நினைவகம்: பல லேப்டாப் கம்ப்யூட்டர்கள், 2 ஜிபி ராம் மெமரி மட்டுமே கொண்டு வெளியாகின்றன. இன்றைய பயன்பாட்டில் உள்ள பல புரோகிராம்களுக்கு இது போதாது. 
2. முடிந்தால் ஒரு எஸ்.எஸ்.டி.: சாலிட் ஸ்டேட் ட்ரைவ் (“solidstate drive”): உங்களிடம் அதிகம் செலவழிக்க பண வசதி இருந்தால், எஸ்.எஸ்.டி. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பொருத்தப்பட்ட லேப்டாப் வாங்கவும். இதில் நகரும் பகுதிகள் இல்லாததால், இது கூடுதல் வேகத்தில் இயங்கும். வழக்கமான ஹார்ட் ட்ரைவினைக் காட்டிலும், குறைவான மின் சக்தியில் இயங்கும். எனவே இதன் இயக்கத்தினால், வெப்பம் உண்டாவது குறைகிறது. இது ஹார்ட் ட்ரைவிற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கிறது. ஆனால், இதில் ஒரு குறை உள்ளது. அதிக காசு கொடுத்து வாங்கும் எஸ்.எஸ்.டி.க்களின் கொள்ளளவு குறைவாகவே உள்ளது. குறைந்தது 500 ஜிபி கொண்ட லேப்டாப்கள் கிடைக்கையில், அந்த அளவில் எஸ்.எஸ்.டி.க்கள் கொண்ட லேப் டாப் கிடைப்பது அரிது. ஆனால், எண்ணிப் பாருங்கள். நம்மில் எத்தனை பேர் 100 ஜிபிக்கு மேல் டேட்டா பதிக்கிறோம். 
3. இயக்கிப் பாருங்கள்: லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கப் போனால், அதன் கூறுகள், சிறப்பம்சங்கள் என்று ஒரு பட்டியலைக் காட்டி, அதற்கான மாடல் எண்ணையும் கொடுத்து, எது வேண்டும் எனக் கேட்டு, அட்டைப் பெட்டி பார்சலைத் தருவது நம் விற்பனை மையங்களின் வழக்கமாக உள்ளது. 
ஆனால், சில நிறுவனங்களின் விற்பனை மையங்களில், சில மாடல் லேப்டாப் கம்ப்யூட்டர்களையாவது, இயக்கிப் பார்க்க வைத்திருப்பார்கள். நீங்கள் வாங்கத் திட்டமிடும் லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். அதன் இயக்கத்தினை ஒருமுறையேனும் அனுபவித்துப் பார்த்து, பின்னர் வாங்குவது குறித்து முடிவு செய்திடவும். 
4. ப்ராசசர்: எந்தக் கம்ப்யூட்டரிலும் ப்ராசசர் வேகம், தன்மை மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், இதுவே அடிப்படையான ஒரு தேவையாக நம்மில் பலருக்கு இருப்பதில்லை. நீங்கள் அதிக கிராபிக்ஸ், வீடியோ எடிட்டிங் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டால், கூடுதல் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்கள் தேவை. இல்லை எனில், வழக்கமாக லேப்டாப்களில் பொருத்தப்படும் நடுநிலை வேக ப்ராசசர்கள் போதுமானது.

Read More »

மெசஞ்சரை மூடி ஸ்கைப் திறங்க


மைக்ரோசாப்ட் நிறுவனம், அடுத்த 2013 தொடக்கத்தில், தன் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் வசதியை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் அனைவரையும், ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. மெசஞ்சரில் உள்ள அனைத்து காண்டாக்ட் முகவரிகளை, ஸ்கைப் புரோகிராமிற்கு மாற்றிக் கொள்ளும் வசதியை இப்போதே தருகிறது. 

இப்போதே, மெசஞ்சரில் உள்ள காண்டாக்ட் முகவரிகளை ஸ்கைப் பயன்படுத்துபவர்கள் எடுத்து இயக்கலாம். இரண்டும் பயன்படுத்துபவர்கள், இரண்டிலும் உள்ள முகவரிகளை, ஸ்கைப் தொகுப்பில் ஒருங்கிணைக்கலாம். 
வாடிக்கையாளர்கள், எங்கள் தொகுப்பின் வசதிகளைப் பயன்படுத்தும் அனுபவத்தினை மேம்படுத்தும் அதே நேரத்தில், அதனை எளிமைப்படுத்தவும் முயற்சிக்கிறோம். அதற்காகவே இந்த மாற்று ஏற்பாடு என ஸ்கைப் நிறுவனத் தலைவர் டோனி பேட்ஸ் அறிவித்துள்ளார். 
ஸ்கைப் தொகுப்பினை ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் டேப்ளட் பிசிக்களிலும் பயன்படுத்தலாம். லேண்ட்லைன் தொலைபேசிகளுக்கும் இணைப்பு ஏற்படுத்திப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோ அழைப்புகளை குழுவாக ஏற்படுத்தலாம். 
ஸ்கைப் மற்றும் லைவ் மெசஞ்சர் இணைப்பு குறித்து இன்னும் தகவல்கள் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. கட்டணம் செலுத்தி ஸ்கைப் பயன்படுத்துவோருக்குக் கூடுதல் வசதிகளை அளிக்க மைக்ரோசாப்ட் திட்டமிடுகிறது. 
இருப்பினும் மெசஞ்சர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். 
அனைத்து மெசஞ்சர் வாடிக்கையாளர்களைக் கையாளும் அளவிற்கு ஸ்கைப் திறன் கொண்டுள்ளதா? மெசஞ்சரில் கிடைக்கும் அனைத்து வசதிகளும், ஸ்கைப் தொகுப்பில் கிடைக்குமா? என்று கேட்டுள்ளனர். இதற்கான பதில் விரைவில் கிடைக்கலாம். ஸ்கைப் நிறுவத்தினை, மைக்ரோசாப்ட் 2011 ஆம் ஆண்டு அக்டோபரில் வாங்கியது. 850 கோடி டாலர் பணம் கொடுத்தது.

Read More »

Graph Search: பேஸ்புக்கில் புத்தம் புதிய வசதி (வீடியோ இணைப்பு)

பேஸ்புக் சமுக வலைத்தளம் விரைவில் Graph Search எனும் புதிய பகுதியை தமது பில்லியன் கணக்கிலான பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்த போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் விரைவில் Graph Search என்னும் புதிய பகுதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனர் சூக்கர்பேர்க் கூறுகையில், பேஸ்புக்கில் விரைவில் Graph Search என்ற புதிய பகுதியை அறிமுகப்படுத்த உள்ளோம்.
இதன் மூலம் உங்கள் நண்பர்களுடன் தொடர்புடைய, அவர்களுடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை எளிதில் தேடிக் கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதுவரை அமெரிக்காவில் Beta வேர்ஷனாக வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக்கின் இப்புதிய வசதி, இன்னும் சில மாதங்களில் உத்தியோகபூர்வமாக அனைத்து பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Read More »
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.