ரொமான்ஸ் (Romance) என்றால் என்ன?

Written By - P.Latheep
support@vavuniya.info

ரொமான்ஸ் என்றால்... தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு, விடிய விடிய கட்டிப்பிடித்து, கையை பிடித்துக் கொண்டு இருப்பதுதானாக்கும் என்றெல்லாம் ஓவராக கற்பனை வானில் மிதந்து, யதார்த்தத்தை கோட்டைவிடாதீர்கள்.
நிஜ வாழ்வில் ரொமான்ஸ் என்பது, அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்பாமல், ராத்திரி சிணுங்கும் குழந்தைக்கு கணவன் எழுந்து தொட்டில் ஆட்டிவிடுவது, கணவன் தேடுவானே என்று மனைவி அவன் சொக்ஸ் ஜோடியை எடுத்து வைப்பது... இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் ஒருவர் காட்டும் பரிவில்தான் இருக்கிறது.
'ஐ லவ் யூ பேபி' (I love you baby)என்று தினமும் முணுமுணுக்கலாம். அது ரொம்ப ரொம்ப சுலபம். ஆனால், வெறும் வார்த்தைகள் மட்டுமே, அதை நிறைவேற்றிவிடுமா? ஒருவர் தன் அன்பின் ஆழத்தை செயல்களில் வெளிப்படுத்தும்போதுதானே... முழுமை அடையும்!
Remember, actions speak better than words. . கணவர் செய்யும் சின்னச்சின்ன உபகாரங்களை இன்முகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 'இதை எல்லாம் நீ ஏன் செய்கிறாய்? நானா செய்துகிட்டாதான் எனக்கு திருப்தி’ என்று ஓவராக பிகு செய்துகொள்ளாமல், அன்பாக, ஆசையாக ஒரு 'தேங்க் யூ டார்லிங்’ சொல்லுங்கள். அதேசமயம், 'பரவாயில்லையே... நமக்காக செய்கிறானே இளிச்சவாயன்’ என்று அவரைத் தொடர்ந்து அதேவேலையைச் செய்ய ஏவாதீர்கள். 'அன்றைக்கு செய்தியே, இப்ப மறுக்குறியே, அப்படினா, இப்ப என் மேல அன்பு போச்சா?’ என்றெல்லாம் தேவையில்லாமல் சண்டை போட்டு அவர் அன்பை கொச்சைப் படுத்தாதீர்கள்.
'மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்' - திருக்குறள்
ஆம்... சிலர் மட்டும்தான் அந்த உண்மையை அறிந்து, அதன் நல்ல பயனை பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காரணம், சிலருக்குதான் அந்த உறவைக் கட்டிக் காப்பாற்றும் பொறுமையும், திறமையும் இருக்கிறது. அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் ரொமான்டிக் வாழ்க்கை.....எப்போதுமே சுவாரசியம்தான்!

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.