Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

வவுனியா மாவட்டத்தில் சைவ பூசாரி சிறுமி மீது பாலியல் பலாத்காரம்


முன்னர்  பிக்குகள் பாஸ்டரர்கள்  தான் சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்ற செய்தி அதிகமாக வெளிவந்திருந்தன. தற்போது சைவ கோவில்களின் பூசாரிகளும் காமவெறி கொண்டு அலைகிறார்கள் என்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

இதற்கு உதாரணமாக இங்கே இரு செய்திகளை தருகிறோம்.
யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய பூசாரி ஒருவரே தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சிறுமியை கோவில் பின்வளவில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள் தொடர்பில் தினமும் ஏராளமான முறைப்பாடகள் கிடைக்கப்பெற்றுகின்றன என வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்தார்.
எமது மதத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் பல்வேறு தரப்பிலும் தமது ஒழுக்க நிலையை மாற்றியமையினால் இந்துக்களுக்கு மட்டுமல்ல எமது மதத்திற்கும் பெரியதொரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
தினமும் ஆலய நிர்வாகத்தினர் மீதும் சிவாச்சாரியார்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமுள்ளது. அவை சொல்லமுடியாத பிரச்சனைகளாக உள்ளன. குறிப்பாக கோவில்குளம் விஸ்ணு ஆலயத்தில் 18 வருடங்களாக கடமையாற்றிய பிரதம சிவாச்சாரியாih ஒழுக்க நிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாரும் அவர் சார்ந்த புத்திரர்களும் ஆலயத்தின் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.


Read More »

வடக்கிற்கான புகையிரதப் பாதை மீள்காட்டுமானம்


இதேவைளை, 2013 செப்டெம்பர் மாதமளவில் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவி ரயில் வரும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளும், புகையிரதப் பாதைகளும் பல தசாப்த காலமாக புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்குட்படுத்தப்பட்டு வந்ததே தவிர அவை மாற்றிய அமைக்கப்படவில்லை.


மீள்கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய பாலம்!வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்கட்டுமானம் செய்யப்பட்டுவரும் ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் நவீன முறையில், மிகத் துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் முதல் கட்டப்பணியும், மாங்குளத்திலிருந்து பளை வரை இரண்டாவது கட்ட பணியும், பளையிலிருந்து காங்கேசன்துறை வரை மூன்றாவது கட்டபணிகளுமாக புகையிரத பாதையின் நிர்மானப் பணிகள் இந்தியாவின் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
IMG_1827நாட்டில் நிலவிய யுத்தத்தால் முற்றாக அழிந்துபோன புகையிரதப்பாதை தற்போது இருந்ததைப் போன்றே மீண்டும் புனரமைக்கப்படாது, நவீன முறையில் மீள் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் புகையிரதப் பாதை பற்றைகள் அகற்றப்பட்டு கிரவல் மண்போட்டு உயர்த்தப்பட்டுள்ளதுடன், தற்போது பாதைக்கு மேலே கருங்கல் சல்லிகள் பரவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதைகளுக்கு இடையிடையே உள்ள சிறிய பாலங்களும் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு வருவதுடன், மாங்குளம் வரையிலான பாலங்களின் மீள்கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளளன.
இந்தப் பணியில் பல பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன், பல இயந்திரங்கள், வாகனங்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கருங்கல் சல்லிகள் பரவும் பணிகள் முடிவடைந்ததும், தண்டவாளங்கள் , சிப்பர் கட்டைகள் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால், ஆங்காங்கே கருங்கல் சல்லிகள் என்பன குவிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான சிலிப்பர் கட்டைகளும் அடுக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, முன்னர் வளைவுகளாக இருந்த தண்டவாளங்கள் இப்போது புகையிரதம் வேகமாகப் பயணிக்கக்கூடிய வகையில், ஒரே நேராக அமைக்கப்படுகிறது.
42-300x225இந்த தண்டவாளைங்களைத் தனித்தனித் துண்டுகளாக ஆணிகளால் பொருத்தப்படாது, வீதியிலும் தண்டவாளத்திலும் பயணிக்கக்கூடிய விஷேட மின் பொறியியல் இயந்திரத்தின் உதவியூடாக அதியுயர் மின் அழுத்தத்தின் மூலம் உருக்கி நேராக ஒட்டிப் பொருத்தப்படுகின்றன.
தண்டவாளம் ஒட்டும் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளதால், அடுத்தகட்டமாக ஓமந்தையிலிருந்து தண்டவாளம் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும், தண்டவாளங்களை உருக்கி ஒட்டப் பயன்படுத்தப்படும் விசேட பொறியியல் இயந்திரம் தண்டவாளத்தில் ஓடியவாறே அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒட்டிபடி முன்னோக்கி நகரும் எனவும் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மீள்கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய பாலம்!
இந்த நிலையில்,புகையிரதப் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் தற்போது தாமதமடைந்து வருவதாகஇந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
புகையிரதப் பாதையை உயர்த்துவதற்கும், அருகில் பரவுவதற்கும் தேவையான கிரவல் மண்ணைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் புகையிரதப் பாதைகளின் மீள்கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் வேகமாக முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக, 1990க்குப் பின், 23 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குப் புகையிரதம் வரும்போது, நேரான புகையிரதப்பாதையில் அதிவேகமாக வரவுள்ளது.
இதனால், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான போக்குவரத்துக்கான நேரம் மேலும் சுருங்குவதால், பயணிகளுக்கு இது மேலும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் புகையிரத பாதை வவுனியாவில் இருந்து ஓமந்தை வரை மீள்கட்டமைப்பு செய்யப்பட்டு, தற்போது வவுனியா நகரிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத சேவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருங்கல் சல்லிகள்!

IMG_9376

IMG_1824
IMG_1813

Read More »

மூதாட்டியை தாக்கி கொள்ளையத்தவர்களில் மூவர் கைது


71 வயது மூதாட்டியை தாக்கி 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்த நான்கு பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு ஏ. எல். விக்கிரமராச்சி இன்று தெரிவித்தார்.
யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் மூதாட்டியும் அவரது கணவரும் கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்த வேளை, 4 பேர் வீட்டின் சமையல் அறை முகட்டின் வழியாக வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியையும் கணவரையும் தாக்கி விட்டு சுமார் 6 லட்சம் ருபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றதாக முதாட்டி யாழ். பொலிஸ் நிலையத்தில் மறுநாள் முறைப்பாடு செய்திருந்தார்.
இம் முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியா தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார் மற்ற இருவரும் அரியாலை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
அவர்களிடத்தில் மேற்கொண்ட விசாரணையின் போது, இந்த சம்பவத்துடன் வவுனியா தாண்டிக்குளம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும், குறித்த நபரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் கூறினார்.
அதேவேளை, இன்று கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று நபர்களையும் பொலிஸ்
விசாரணையின் பின்னர் நாளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் அவர்
மேலும் கூறினார்.

Read More »

யாழில் தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்


யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு பத்திரிகைகளை எடுத்துச்சென்ற யாழ்.தினக்குரல் பத்திரிகையின் விநியோகஸ்தர் இன்று வியாழக்கிழமை அதிகாலை இனம் தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.தினக்குரல் பத்திரிகைகளை பருத்தித்துறைக்கு விநியோகிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ஊழியர் மீது புத்தூர் சந்திக்கு அண்மையாக வைத்து இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீதியோரமாகக் கிடந்த மேற்படி ஊழியரை அவ் வீதியால் சென்ற பொதுமக்கள் காப்பாற்றியதுடன் வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு கொண்டு செல்லப்பட்ட உதயன் பத்திரிகை விநியோகஸ்தரும் மேற்படி இனம் தெரியாதவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்க முயற்சிக்கப்பட்ட போதிலும் அவ்வூழியர் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கை மூலம் தாக்குதலில் இருந்து தப்பிச்சென்றுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இது என்பதும் குறிப்பி;டத்தக்கதாகும். இறுதியாக உதயன் பத்திரிகை வடமராட்சி குங்கர் கடையடிப்பகுதியில் வைத்து தீயிடப்பட்டதுடன் அதன் ஊழியரும் தாக்கப்பட்டு மோட்டார் சைக்கிளும் தீயிடப்பட்டமை யாவரும் அறிந்ததே.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவன ஊழியர்கள் மீது பல தாக்குதல் சம்பவங்கள் இதுவரை இடம்பெற்றுள்ள போதிலும் எவரையும் பொலிசார் இதுவரை கைது செய்யவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

க.பொ.த உ/த (2012)பரீட்சை பெறுபேறு

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று (30) மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய தள முகவரியில் பார்வையிட முடியும். 

உத்தியோகபூர்வமான பெறுபேறுகள் நாளைய தினம் அஞ்சல் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

Read More »

A/L 2012 முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை- உறுதியாக அறிவிப்பு


க.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி  புதன் கிழமை வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் உறுதியாக அறிவித்துள்ளது.


அன்றைய தினமே எமது இணையத்தளத்தின் மூலமும் பெறுபேறுகளை பார்வையிட முடியும்


Read More »

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் உள்ள தனியார் வர்த்தக நிலையத்தில் களவு.

கொழும்புத்துறையில் உள்ள தனியார் வர்த்தக நிலையம் திருடர்களால் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சனிக்கிழமையன்று அதிகாலை 2.50 மணியளவில், குறித்த வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு, இனிப்பு வகைகள், பிஸ்கட் வகைகள், புகை பாவனைப் பொருட்கள், எண்ணை வகைகள் போன்ற பெறுமதியான பொருட்கள் திருடு போயுள்ளதாக, யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

         

Read More »

யாழில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை!


jaffna
யாழ். குடாநாட்டில் குற்றச் செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய விசேட பொலிஸ் பொறிமுறை ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது இவ்விடையம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்
யாழ்.குடாநாட்டில் சென்ற வாரம் இடம் பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக பட்டியல்படுத்தியுள்ளார். அவை வருமாறு,
யாழ்.நல்லூர் வீதியிலுள்ள வீடு ஒன்றில் 2,18,000 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக சந்தையின் போது 2,80,000 பெறுமதியான மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ் ஒன்றில் பயணித்த பெண் பயணியிடமிருந்து 9 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு பேர் அடங்கிய குழவினர் ஜயனார் கோவில் அருகிலுள்ள வீடு ஒன்றில் புகுந்து 1,80,000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர் குழு வைத்தியர் ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்பு அவரிடமிருந்த தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் கடை உடைத்து 22,000 ரூபா பெறுமதியான பிட்கட்டுக்கள், பால் மா பக்கற்டுக்கள் திருடப்பட்டுள்ளது என யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். 

Read More »

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாதவர்கள் விண்ணப்பிக்கலாம்! - பெப்ரவரி பரீட்சை!

நாட்டிலேற்பட்ட சீரற்ற காலநிலையால் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களின் தரவுகளை பாடசாலை அதிபர்கள் ஊடாக வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 17, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றாத மணவர்களுக்கான மீள் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09,10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே பரீட்சைக்கு தோற்றும் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக தரவுகளை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பரீட்சார்த்திகள் தமது தகவல்களை நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான மேலதிக தகவல்களை 0112784208, 0112784537, 0113188350, 0112786200, 0112784201, 0112784204 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Read More »

அசிட் மழையும் பெய்யும் அபாயம்

நாட்டில் பல பாகங்களில் அண்மைகாலமாக பெய்து வரும் மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை வீழ்ச்சிகளுக்கு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகையே காரணம் என விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.



இதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், “அசிட்’ மழையும் பெய்ய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டில் பெய்த மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானி அனுர சி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.


தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகைகள், நுண்ணுயிர்களுடன் கலந்து வாயுமண்டலத்தைச் சென்றடைவதாலேயே இந்த மழை பெய்கின்றது. இதனாலேயே நிறங்களில் மழை பெய்கின்றது. இதற்கும் எரி நட்சத்திர மழைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்

Read More »

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதான யாழ். இளைஞர் நிரபராதி என விடுதலை


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் யாழ்.மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு, அவர் நிரபராதி என இனங்காணப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் இந்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றுப் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
1990 ஆம் ஆண்டு ஜுன் செப்ரெம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து, போர் ஆயுதப் பயிற்சி பெற்று யாழ்.மணியம் தோட்டப் பகுதியில் வன்செயல்கள் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்ததாக இந்த இளைஞர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த அப்புத்துரை அகிலன் என்பவரே இவ்வாறு குற்றஞ் சாட்டப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவர் ஆவார்.
அவரை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸார் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் சந்தேகநபருக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அவர் தொடர்பான உண்மை விளம்பல் விசாரணையின் போது அவர் வழங்கியதாகக் கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கடந்த 18ம் திகதி நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.
அவருக்கு எதிராக வேறு எந்த ஆதாரமும் இல்லையென சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனால் வழக்கில் எதிரியான அகிலன் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டு நிரபராதியென இனங்கண்டு நேற்று அவரை யாழ். மேல்நீதிமன்றம் விடுதலை செய்தது.
எதிரி சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் வாதாடியிருந்தார். சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணி செல்வி நளினி கந்தசாமி வாதாடியிருந்தார்.

Read More »

கடலில் குளிக்கச் சென்று காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு: யாழில் சம்பவம்


யாழ். மாவட்டத்தில் கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாசியப்பிட்டியை சேர்ந்த சிவலிங்கம் உமாசங்கர் (16 வயது) சிறுவனின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை 10 மணியாளவில் சேந்தாங்குளம் கடலுக்கு குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் காணமால் போயுள்ளார். மற்றையவர் கடலில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டார்.
இவ்வாறு காணமால் போன சிறுவனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More »

Jaffna Nalloor Kovil Vedio (Pongal Special)


Read More »

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி; வெறிச்சோடியது வளாகம்

யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கபட்ட போதும் மாணவர்களது  வருகை காணப்பட்டதனால் பல்கலைக்கழகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

சுமார் நாற்பது நாட்டளுக்கு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என துணைவேந்தருக்கும் அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவப் பிரதி நிதிகளுக்கும் இடையில்  இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய தினமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் வந்து சேர்வதற்கான கால அவகாசம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதனாலேயே மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்றைய தினம் பல்கலைக்கழக சூழலில் ஒரு சில மாணவர்களையே காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் பல்கலைக்கழகத்தினைச் சுற்றி அமைக்கப்பட்ட காவலரண்கள் காணப்படுகின்றது ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் காவற்றுறையினர் ஏற்கனவே விலக்கப்பட்டிருந்தனர்.

ஆனாலும் காவரண்கள் அமைக்கப்பட்ட இடத்திலே தொடர்ந்தும் காணப்படுவதனால் வேண்டிய நேரத்தில் மீண்டும் காவற்றுறையினர் நிறுத்தப்படுவார்களா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய சந்திப்பில் நாளைய தினம் மாணவர்கள் வருகை தராதுவிட்டால் தான் பதவியினைத் துறப்பேன் என்றும் பல்கலைக்கழகம் மூடப்படும் நிலை ஏற்படும் எனவும் துணைவேந்தர் மாணவர்களிடம் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்காதவரை பல்கலைச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த மாணவர்கள் தொடர்ந்தும் விடுவிக்கப்படாது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More »

துவிச்சக்கர வண்டியில் வந்தவர்களை மோதித்தள்ளியது பொலிஸ் வாகனம்

பரந்தன் சந்திக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ 9இல் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பரந்தன் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த இருவரை பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பொலிஸ் ஜீப் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தெரியவருவதாவது, 

குறித்த விபத்து நடைபெறுவதற்கு முன்னர் பரந்தன் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் எதிரே வந்து தரிப்பிடத்தில் நின்ற பேரூந்துடன் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியதுடன் மற்றயவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

அதனையடுத்து படுகாயமடைந்தவர் முச்சக்கர வண்டியின் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதனையடுத்து அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மதுபோதையிலேயே வந்திருந்தமை தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்திருந்த மற்றயவரை ஏற்றிக் கொண்டு பொலிஸ் ஜீப் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போதே முன்னால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தவர்களை மோதித்தள்ளி விட்டு வீதியியை விட்டு விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Read More »

யாழ்., கிளிநொச்சி, விசுவமடு பகுதிகளில் வைபவங்கள்


தைத்திருநாளை முன்னிட்டு வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் தைப்பொங்கல் விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள முருகன் கோயிலில் பிரதான சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, விசுவமடு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிளிநொச்சி முருகன் கோயிலில் இன்று காலை 6.00 மணிக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து விசுவமடு பிரதேசத்தில் காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் தைப் பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. புனர்வாழ்வு வழங்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மாலை 4.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
வட மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், பயிற்சிகளை முடித்துக்கொண்ட ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, வவுனியா நகர சபை மண்டபத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொண்டனர்.
இதேவேளை, வவுனியாவில் இறுதியாக மீள் குடியமர்த்தப்பட்ட பிரதேசத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் இன்றும் மன்னார் நகர சபை மண்டபத்தில் நாளை 15 ஆம் திகதியும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Read More »

A/L 2012 பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 30ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதே தினத்தில் பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
Read More »

வட மாகாணப் பாடசாலைகள் மோதும் கரப்பந்தாட்டத் தொடர்


வட மாகாண கல்வித் திணைக் களத்தினால் வட மாகாணப் பாடசாலை களுக்கு இடையேயான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பங்களை வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற் கல்வி பிரிவினால் கோரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து நடத்தும் இப்போட்டிக்கான விண்ணப் பங்களை யாழ். மாவட்டப் பாடசாலை அணிகள் யாழ்ப்பாணம் கல்வி வலய உடற் கல்வி கல்விப் பணிப்பாளர் சண் தயாளனுடனோ அன்றி யாழ்ப்பாணம் கல்வி வலயம் வலயக் கல்வி அலுவலகம் நல்லூர் யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடனும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டப் பாடசாலை அணிகள் ஏ. எம். சுபைர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற் கல்வி வலயக் கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு வவுனியா என்னும் முகவரியுடனோ உடன் தொடர்பு கொள்ளும் படியும் வட மாகாண உடற்கல்வி பிரதிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


Read More »

யாழ்ப்பாணத்தில் தொடரும் அடை மழை!


யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்ற இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் பலத்த காற்று இடி மின்னலுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
நேற்றைய தினம்  54.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும்  நேற்று முன்தினம் திங்கட்கிழமை 79.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலியில் அமைந்துள்ள வானிலை ஆய்வு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றுடன் கூடிய மழையானது மேலும் ஒரு கிழமைக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் அடை மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, ஒரு சில இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆனால் இதனை உடனடியாக உறுதி செய்து கொள்ள முடியிவில்லை.
இதேவேளை மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் தொடர்ச்சியான மழை நீடிப்பதாகவும், காற்றழுத்த தாழமுக்க காலநிலை நீடிப்பதாகவும் தெரியவருகின்றது.
மேலும், யாழ்ப்பாணத்திலும் கடந்த இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இரவு பகல் மழை பெய்தவண்ணமே உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் தாழமுக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் கடந் சில நாட்களாக பெய்துவரும் மழைகாரமான 1648 குடும்பங்களைச் சேர்ந்த 5656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்வாகவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 1006 குடும்பங்களைச் சேர்ந்த 3318 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 277 குடும்பங்களைச் சேர்ந்த 1003 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 571 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும், பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 6 குடும்பங்கள் நல்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.




Read More »

யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு புதிய மணிக்கூடுகள்

யாழ்ப்பாண நகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று மகாத்தமா வீதியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். 135 வருடங்கள் பழமை வாய்ந்த இம்மணிக்கூட்டுக் கோபுரம், 1875 இல் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவு கூருமுகமாக நிர்மாணிக்கப் பட்டது.


யாழ்ப்பாணத்தில் மகாத்மா வீதியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில் புதிய மணிக்கூடுகள் பொருத்தப்பட உள்ளன. யாழ். மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.


யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இதற்கான நிதி மாநகர அபிவிருத்தி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு உள்ளது.

Read More »
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.