வடக்கிற்கான புகையிரதப் பாதை மீள்காட்டுமானம்


இதேவைளை, 2013 செப்டெம்பர் மாதமளவில் யாழ்ப்பாணத்திற்கு யாழ்.தேவி ரயில் வரும் எனவும், அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் ஏற்றுமதிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளும், புகையிரதப் பாதைகளும் பல தசாப்த காலமாக புனரமைப்பு செய்யப்பட்டு பாவனைக்குட்படுத்தப்பட்டு வந்ததே தவிர அவை மாற்றிய அமைக்கப்படவில்லை.


மீள்கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய பாலம்!வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மீள்கட்டுமானம் செய்யப்பட்டுவரும் ஓமந்தை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் நவீன முறையில், மிகத் துரிதகதியில் நடைபெற்று வருகின்றது.
185 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் முதல் கட்டப்பணியும், மாங்குளத்திலிருந்து பளை வரை இரண்டாவது கட்ட பணியும், பளையிலிருந்து காங்கேசன்துறை வரை மூன்றாவது கட்டபணிகளுமாக புகையிரத பாதையின் நிர்மானப் பணிகள் இந்தியாவின் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
IMG_1827நாட்டில் நிலவிய யுத்தத்தால் முற்றாக அழிந்துபோன புகையிரதப்பாதை தற்போது இருந்ததைப் போன்றே மீண்டும் புனரமைக்கப்படாது, நவீன முறையில் மீள் கட்டமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஓமந்தையிலிருந்து மாங்குளம் வரையில் புகையிரதப் பாதை பற்றைகள் அகற்றப்பட்டு கிரவல் மண்போட்டு உயர்த்தப்பட்டுள்ளதுடன், தற்போது பாதைக்கு மேலே கருங்கல் சல்லிகள் பரவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாதைகளுக்கு இடையிடையே உள்ள சிறிய பாலங்களும் மீள்கட்டுமானம் செய்யப்பட்டு வருவதுடன், மாங்குளம் வரையிலான பாலங்களின் மீள்கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளளன.
இந்தப் பணியில் பல பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதுடன், பல இயந்திரங்கள், வாகனங்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கருங்கல் சல்லிகள் பரவும் பணிகள் முடிவடைந்ததும், தண்டவாளங்கள் , சிப்பர் கட்டைகள் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளதால், ஆங்காங்கே கருங்கல் சல்லிகள் என்பன குவிக்கப்பட்டுள்ளதுடன், ஏராளமான சிலிப்பர் கட்டைகளும் அடுக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, முன்னர் வளைவுகளாக இருந்த தண்டவாளங்கள் இப்போது புகையிரதம் வேகமாகப் பயணிக்கக்கூடிய வகையில், ஒரே நேராக அமைக்கப்படுகிறது.
42-300x225இந்த தண்டவாளைங்களைத் தனித்தனித் துண்டுகளாக ஆணிகளால் பொருத்தப்படாது, வீதியிலும் தண்டவாளத்திலும் பயணிக்கக்கூடிய விஷேட மின் பொறியியல் இயந்திரத்தின் உதவியூடாக அதியுயர் மின் அழுத்தத்தின் மூலம் உருக்கி நேராக ஒட்டிப் பொருத்தப்படுகின்றன.
தண்டவாளம் ஒட்டும் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளதால், அடுத்தகட்டமாக ஓமந்தையிலிருந்து தண்டவாளம் பொருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும், தண்டவாளங்களை உருக்கி ஒட்டப் பயன்படுத்தப்படும் விசேட பொறியியல் இயந்திரம் தண்டவாளத்தில் ஓடியவாறே அவற்றை ஒன்றுடன் ஒன்று ஒட்டிபடி முன்னோக்கி நகரும் எனவும் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மீள்கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய பாலம்!
இந்த நிலையில்,புகையிரதப் பாதையின் மீள்கட்டுமானப் பணிகள் தற்போது தாமதமடைந்து வருவதாகஇந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
புகையிரதப் பாதையை உயர்த்துவதற்கும், அருகில் பரவுவதற்கும் தேவையான கிரவல் மண்ணைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் புகையிரதப் பாதைகளின் மீள்கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் வேகமாக முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக, 1990க்குப் பின், 23 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குப் புகையிரதம் வரும்போது, நேரான புகையிரதப்பாதையில் அதிவேகமாக வரவுள்ளது.
இதனால், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான போக்குவரத்துக்கான நேரம் மேலும் சுருங்குவதால், பயணிகளுக்கு இது மேலும் வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் புகையிரத பாதை வவுனியாவில் இருந்து ஓமந்தை வரை மீள்கட்டமைப்பு செய்யப்பட்டு, தற்போது வவுனியா நகரிலிருந்து ஓமந்தை வரையான புகையிரத சேவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருங்கல் சல்லிகள்!

IMG_9376

IMG_1824
IMG_1813

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.