Showing posts with label கிளிநொச்சி. Show all posts

கிளிநொச்சியில் வாகன விபத்து: கணவனும் மனைவியும் அந்த இடத்திலேயே பலி!


கிளிநொச்சியில் வாகன விபத்து: கணவனும் மனைவியும் அந்த இடத்திலேயே பலி!
கிளிநொச்சி,155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவனும் மனைவியும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் இன்று காலை 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது. விசுவமடுவிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்சுடன் நெடுங்கேணியிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்துகொண்டிருந்த ஓட்டோ மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஓட்டோவில் இருந்து வந்த கணவனும் மனைவியும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இருவரது சடலங்களும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நெடுங்கேணியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தெய்வேந்திரகுமார் (வயது 66), அவரது மனைவியான ஸ்ரீரதி (வயது 58) ஆகியோரே மரணமடைந்துள்ளனர். இதன்போது ஓட்டோ சாரதி படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,மேலதிய சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

மன்னார், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு ரணில் விஜயம்.


இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் வட மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கட்சியின் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது அவர், மன்னார், கிளிநொச்சி மற்றம் வவுனியா மாவட்டங்களுக்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயம் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அமையும் எனவும் கட்சித் தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன

Read More »

க.பொ.த உ/த (2012)பரீட்சை பெறுபேறு

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று (30) மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய தள முகவரியில் பார்வையிட முடியும். 

உத்தியோகபூர்வமான பெறுபேறுகள் நாளைய தினம் அஞ்சல் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

Read More »

A/L 2012 முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை- உறுதியாக அறிவிப்பு


க.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி  புதன் கிழமை வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் உறுதியாக அறிவித்துள்ளது.


அன்றைய தினமே எமது இணையத்தளத்தின் மூலமும் பெறுபேறுகளை பார்வையிட முடியும்


Read More »

இளம் வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் மாயம்!

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியிலுள்ள கடையொன்றின் உரிமையாளர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகலுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளார். யாழ்ப்பாணம், கொக்குவிலில் மூன்று நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற சகோதரனின் திருமணத்திற்குச் சென்று விட்டு வியாழக்கிழமை நண்பகல் கரடிபோக்குச் சந்தியிலுள்ள தனது கடைக்கு வந்த இவர் நண்பகலுக்கு பின்னர் காணாமல்போயுள்ளார். இவருடன் உறவினர்களால் தொடர்புகொள்ள முடியாது போன அதேநேரம், இவரும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவிகப்படுகிறது.
யாழ்ப்பாணம் காரைநகர் களபூமியைச் சேர்ந்த தர்மலிங்கம் தவரூபன் (29 வயது) என்பவரே காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் அங்குள்ள இராணுவ முகாம்களிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read More »

கிளிநொச்சி ஆலயங்களில் பெருமளவு நகைகள், பொருட்கள் கொள்ளை! இரு வர்த்தக நிலையங்களும் தீக்கிரை


கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் கிராமத்தில் ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பெருமளவு நகைகள், பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், இரண்டு வர்த்தக நிலையங்கள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கடந்த 21ம்திகதி இரவு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஸ்கந்தபுரம் சந்தைப் பகுதியிலுள்ள புடவையகம் மற்றும் தையலகம் என்பன முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் இரவு 1 மணியளவில் இடம்பெற்றதாகவும், வர்த்தக நிலையங்கள் எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் சிலர் கூச்சலிட்டு ஏனையவர்களையும் அழைத்துள்ளதுடன், இராணுவத்தினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
எனினும் அனைவரும் அங்குவந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குள் வர்த்தக நிலையங்கள் இரண்டும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்நிலையில் ஸ்கந்தபுரம் முருகன் ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் ஆகியவற்றிலும் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளமை நேற்றுக் காலையே தெரியவந்துள்ளது.
குறித்த இரு ஆலயங்களிலும் மூல விக்கிரகங்கள் பெயர்க்கப்பட்டு விக்கிரகங்களின் கீழுள்ள யந்திர தகடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், ஆலயங்களிலிருந்த உண்டியல்களும் உடைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதேபோல் அக்கராயன்- அம்பலப்பெருமாள் சந்தியிலுள்ள வர்த்தக நிலையமொன்றும் உடைத்து அங்கிருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஒரு இரவில் இடம்பெற்ற இந்த கொள்ளை மற்றும் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எரிந்துபோன வர்த்தக நிலையங்களிலிருந்த பொருட்களின் பெறுமதி பல 10 லட்சத்திற்கும் மேல் என தெரிவிக்கப்படுவதுடன், அம்பலப்பெருமாள் சந்தியிலுள்ள வர்த்தக நிலையத்திலிருந்து குளிர்பானங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ஒரு தொகைப் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

மகளை தாயாக்கிய சிறிய தந்தை கைது – கிளிநொச்சியில் சம்பவம்


கிளிநொச்சி – வட்டக்கட்சி பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி சிறிய தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் உள்ளதாக யாழ். பிராந்தியப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இச்சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது,
40 வயதுடைய சிறிய தந்தை 15 வயது நிரம்பிய சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் சிறுமியின் வயிற்றில் கரு உருவாகியுள்ளது. இந்தக் கருவினைக் கலைப்பதற்காக வைத்தியரை நாடிய போது சிறிய தந்தை கையும் களவுமாக கிளிநொச்சி பொலிஸாரிடம் மாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சிறிய தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 

Read More »

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாதவர்கள் விண்ணப்பிக்கலாம்! - பெப்ரவரி பரீட்சை!

நாட்டிலேற்பட்ட சீரற்ற காலநிலையால் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களின் தரவுகளை பாடசாலை அதிபர்கள் ஊடாக வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 17, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றாத மணவர்களுக்கான மீள் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09,10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே பரீட்சைக்கு தோற்றும் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக தரவுகளை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பரீட்சார்த்திகள் தமது தகவல்களை நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான மேலதிக தகவல்களை 0112784208, 0112784537, 0113188350, 0112786200, 0112784201, 0112784204 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Read More »

அசிட் மழையும் பெய்யும் அபாயம்

நாட்டில் பல பாகங்களில் அண்மைகாலமாக பெய்து வரும் மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை வீழ்ச்சிகளுக்கு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகையே காரணம் என விஞ்ஞானி அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார்.



இதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், “அசிட்’ மழையும் பெய்ய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டில் பெய்த மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் கறுப்பு மழை தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானி அனுர சி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.


தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் இரசாயனப் புகைகள், நுண்ணுயிர்களுடன் கலந்து வாயுமண்டலத்தைச் சென்றடைவதாலேயே இந்த மழை பெய்கின்றது. இதனாலேயே நிறங்களில் மழை பெய்கின்றது. இதற்கும் எரி நட்சத்திர மழைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்

Read More »

கடன் பெற்று விதைத்த நெல்லை இயற்கை காவு கொண்ட பரிதாபம்!


kilinochchi_dry_land_001
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டமையின் காரணமாக அம்மாவட்டத்தின் பெரும்பான்மையான வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
நேற்று (10) கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்யாவிடினும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா பிரதேசங்களில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக இரணைமடு குளம் நிறைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டன.
பரந்தன், முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, வட்டக்கச்சி, உமையாள்புரம், புளியம்போக்கனை ஆகிய பிரதேசங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கி முற்று முழுதாக அழிவடைந்துள்ள.
அறுவடைக்கு பதமான நிலையில் இருந்த நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்த காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரதேச விவசாயிகள் வங்கியில் கடனைப் பெற்று பயிற்ச் செய்கையில் ஈடுபட்டதன் காரணமாக, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த போகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை அழிவடைந்த காரணத்தினால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வழியில்லாது விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலைக்கு முகங் கொடுத்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

Read More »

துவிச்சக்கர வண்டியில் வந்தவர்களை மோதித்தள்ளியது பொலிஸ் வாகனம்

பரந்தன் சந்திக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ 9இல் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பரந்தன் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த இருவரை பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பொலிஸ் ஜீப் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தெரியவருவதாவது, 

குறித்த விபத்து நடைபெறுவதற்கு முன்னர் பரந்தன் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் எதிரே வந்து தரிப்பிடத்தில் நின்ற பேரூந்துடன் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியதுடன் மற்றயவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

அதனையடுத்து படுகாயமடைந்தவர் முச்சக்கர வண்டியின் மூலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதனையடுத்து அங்கு வந்த கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மதுபோதையிலேயே வந்திருந்தமை தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்திருந்த மற்றயவரை ஏற்றிக் கொண்டு பொலிஸ் ஜீப் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருக்கும் வாகனம் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போதே முன்னால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்தவர்களை மோதித்தள்ளி விட்டு வீதியியை விட்டு விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Read More »

யாழ்., கிளிநொச்சி, விசுவமடு பகுதிகளில் வைபவங்கள்


தைத்திருநாளை முன்னிட்டு வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் தைப்பொங்கல் விழா நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள முருகன் கோயிலில் பிரதான சமய வழிபாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, விசுவமடு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கிளிநொச்சி முருகன் கோயிலில் இன்று காலை 6.00 மணிக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து விசுவமடு பிரதேசத்தில் காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் தைப் பொங்கல் விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. புனர்வாழ்வு வழங்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மாலை 4.00 மணிக்கு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
வட மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள், பயிற்சிகளை முடித்துக்கொண்ட ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, வவுனியா நகர சபை மண்டபத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குகொண்டனர்.
இதேவேளை, வவுனியாவில் இறுதியாக மீள் குடியமர்த்தப்பட்ட பிரதேசத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் இன்றும் மன்னார் நகர சபை மண்டபத்தில் நாளை 15 ஆம் திகதியும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Read More »

A/L 2012 பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 30ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதே தினத்தில் பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
Read More »

வட மாகாணப் பாடசாலைகள் மோதும் கரப்பந்தாட்டத் தொடர்


வட மாகாண கல்வித் திணைக் களத்தினால் வட மாகாணப் பாடசாலை களுக்கு இடையேயான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பங்களை வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற் கல்வி பிரிவினால் கோரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து நடத்தும் இப்போட்டிக்கான விண்ணப் பங்களை யாழ். மாவட்டப் பாடசாலை அணிகள் யாழ்ப்பாணம் கல்வி வலய உடற் கல்வி கல்விப் பணிப்பாளர் சண் தயாளனுடனோ அன்றி யாழ்ப்பாணம் கல்வி வலயம் வலயக் கல்வி அலுவலகம் நல்லூர் யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடனும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டப் பாடசாலை அணிகள் ஏ. எம். சுபைர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற் கல்வி வலயக் கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு வவுனியா என்னும் முகவரியுடனோ உடன் தொடர்பு கொள்ளும் படியும் வட மாகாண உடற்கல்வி பிரதிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


Read More »

மன்னார், வவுனியா: வெள்ளம் வடிகிறது


நலன்புரி நிலையங்களில் இருந்தோர் வீடு திரும்புகின்றனர்
147 தற்காலிக நிலையங்கள் மூடப்பட்டன.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்தவர்களில் பெரும் பகுதியினர் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி 10795 குடும்பங்களைச் சேர்ந்த 38681 பேர் 240 தற்காலிக நலன்புரி நிலையங்களில் நேற்று முன்தினம் (31ம் திகதி) காலையாகும் போது தங்கி இருந்தனர். ஆனால் நேற்று முதலாம் திகதி மாலையாகும் போது 4153 குடும்பங்களைச் சேர்ந்த 14616 பேர் 93 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்தனர்.
இதன்படி 6642 குடும்பங்களைச் சேர்ந்த 24,065 பேர் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இதன் காரணத்தினால் 147 தற்காலிக நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
வெள்ள நீர் தொடர்ந்தும் வடிந்து வருவதுடன் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருந்தவர்களும் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தற்போது மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட் டங்களில்தான் அதிகளவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 35 நலன்புரி நிலையங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 நலன்புரி நிலையங்களிலும் இவர்கள் தங்கியுள்ளனர் என்றார்.


Read More »

40 ஆண்டுகளுக்கு பின்னர் பரீட்சை சட்டத்தில் மாற்றம்

1-depart
இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் பரீட்சைத் திணைக்கள வடடாரங்கள் தெரிவித்துள்ளன.
2013ஆம் ஆண்டில் பரீட்சை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பரீட்சை மோசடிகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர  சாதாரண தரப்பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே வெளியாகியிருந்தது.
எனவே பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட அரச அச்சக அதிகாரிக்கு வாழ்நாள் பரீட்சைத் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் கடந்த காலங்களில் பரீட்சைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை ரத்து செய்வது குறித்தும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


Read More »

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 319பேர் டிசம்பரில் கைது


வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் பிரதேசத்தில் கடந்த டிசெம்பர் மாதத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 319பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எச்.ஜயவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் மூலமாக தின மற்றும் திறந்த நிலை பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள் எனவும் இவர்களை விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது அந்தந்த பகுதி பொலிஸாக்ரின் உதவியுடன் கைது செய்துள்ளதாகவும் இவர்களில் 131பேர் தின பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்த அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

Read More »

காஸ், மின்கட்டணம் அதிகரிக்கும் !


காஸ் மற்றும் மின்கட்டணம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால், காஸ் மற்றும் மின்கட்டணம் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள எரிவாயுக் கம்பனிகளின் வேண்டுகோள் நுகர்வோர் விவகார அதிகாரசபையால் பரிசீலிக்கப்பட்டுவருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வாரம் பல அனல் மின் நிலையங்களில் மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 2 வகை உலை எண்ணெய்யின் விலையை உயர்த்திவிட்டது.
இலங்கை மின்சாரசபை மற்றும் வேறு அனல் வெப்ப மின்னுற்பத்தி நிலையங்களுக்கு மானிய விலையில் எரிபொருளை வழங்குவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதமொன்றுக்கு 4,194 மில்லியன் ரூபா நட்டமடைவதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.பி.எம்.ஜி.றொஷான் கூறினார்.
129 ரூபாவுக்கு விற்கவேண்டிய எண்ணெயை 115 ரூபாவுக்கு விற்பதால் ஒரு லீற்றரில் 14 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
மின்கட்டணத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி இலங்கை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சகல விபரங்களையும் அனுப்பியுள்ளதென இலங்கை மின்சாரசபையின் பொதுமுகாமையாளர் நிஹால் விக்கிரமசூரிய கூறினார்.
உலை எண்ணெயின் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கங்களை ஆராய்வதற்காக நாளை நடைபெறவுள்ள கூட்டத்திற்கு மின்சக்தி, வலு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமை தாங்குவார். இதன் பின் உலை எண்ணெய் விலை உயர்வு தொடர்பாக நாம் ஓர் அறிக்கையை பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைப்போமெனவும் அவர் கூறினார்.
கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்னும் சில நாட்களில் மின்னுற்பத்தியை தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையா?


அரசாங்க நாட்காட்டியில் பௌர்ணமி தினங்கள் வர்த்தக விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என உள்ளக நிறுவன ஊழியர் சங்கங்களின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்தார்.இதேவேளை பொதுபல சேனா அமைப்பு இதே குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளது. பௌத்த மக்கள் செறிந்து வாழும் இலங்கையில், பௌத்தர்களுக்கு முக்கியமான பௌர்ணமி தினங்கள் இதுவரை காலமும் வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2013ம் ஆண்டு அரச நாட்காட்டிகளில் பௌர்ணமி தினங்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும், வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்படவில்லை என பொதுபல சேனா அமைப்பு ஊடக அறிக்கை மூலம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், ஏனைய மதங்களுக்கு முக்கியமான தினங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தைப்பொங்கல், ரமழான் பண்டிகை, நபிகள் பிறந்த தினம், ஹஜ் பெருநாள், நத்தார் பண்டிகை போன்றவை வர்த்தக விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

இலங்கையில் விவாக பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு


விவாகப் பதிவுக் கட்டணங்களை இன்று 2013 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி இதுவரை நடைமுறையில் ஆயிரம் ரூபாவாக இருந்த விவாகப் பதிவுக் கட்டணம் ஐயாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இந்த கட்டணத் தொகையில் 500 ரூபா மாத்திரமே விவாகப் பதிவு திணைக்களத்திற்கு வருமானமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகுதித்தொகை பணம் அரசாங்கத்துக்கு வருமானமாக செல்லவுள்ளதாக விவாகப் பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More »
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.