Showing posts with label கட்டுரைகள். Show all posts

தனிநாயகம்அடிகள் (History of Thaninayakam Adikal)


தனிநாயகம் அடிகளாரின் தந்தை நெடுந்தீவை சேர்த்தவர் அவரது தாயார் கரம்பனை சேர்த்தவர் அவரது தந்தை பெயர் கணபதிப்பிள்ளை இவரது தந்தையார் பெயர் தான் நாகநாதர். நெடுந்தீவின் புகழ்பெற்ற தனிநாயக முதலி வழி வர்ந்ததால் தான் இவருக்கு தனிநாயகம் என்று இவரது தந்தை பெயர்சூட்டினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் பிறந்த தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும்.
ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
ஆசிரியப் பணி
தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரசால் உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப் பணியாற்றினார், இங்கு இருந்தபோது பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ்ப் பணி
கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil Culture (தமிழ்க் கல்ச்சர்) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture)என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார்.
தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்
மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 – 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். பின்னர் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மறைவு
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்றதனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
தனிநாயகம் அடிகள் பற்றி காரையூர் நா பொன்னையா
தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் எமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்ப்னவ்ற்றை உலகிற்கு பறைசாற்றி வந்துள்ளார் என்பதை தமிழர்களாகிய நாமறிவோம்.
“தமிழ்க் கலாசாரம்” என்னும் முத்திங்கள் ஏடு தமிழர்களுடைய கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை பறைசாற்றி வ்ந்துள்ளது. இந்த ஏடு ஆற்றிவந்த அரும் பெரும் பணி மிகவும் மகத்தானது. இவ்வேடு உலகை வலம் வரச் செய்த பெருமை பிதா தனிநாய்கம் அடிகளாரையே சாரும். கத்தொலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் காலப்போக்கில் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும் தமிழ்க் கலாசாரம் ஏட்டின் ஆசிரியராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
தமிழ் மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைஷ்ணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.
தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே இந்நூலாகும் என்பதையும் தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகும் என்பதையும் இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். ஆதிகாலம், இடைக்காலம், நவீன் காலம் என்ற முக்காலங்களிலும் தமிநாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்றதென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற அர்ரய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
1966-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரதம அதிதியாக வண தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. அவ்வரங்கில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்! பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும்,  தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார,  திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டம் என்று கூறுவார். பிதா தமிழ் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஓர் என்றும் அழியா ஓர் நினைவுச் சிலை எனலாம். தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் சின்னம் என்றே கூறலாம்.

Read More »

காலை நேர உண்வை தவிக்க கூடாது ஏன் என்று தெரியுமா?


காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு , காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.
எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

Read More »

கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது - ஆன்மிக உண்மை

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.



நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

Thanks To : Thamizhachi

Read More »

பெண்கள் -ரிலாக்ஸ் ப்ளீஸ்

பொதுவாக. பெண்கள் அழுத்தக்காரர்கள். எளிதில் எதையும் பேசமாட்டார்கள் என்ற ஒரு கருத்து உண்டு........... ஆனால் பட படவென பட்டாசு போல பொறிந்து தள்ளும் பெண்களே அதிகம். 

தன்னிடம் யாராவது சிறிது அன்பாகப்பேசினாலும் போதும்... அவரின் பின்னணி என்ன? நல்லவரா கெட்டவரா? எந்த நோக்கத்தோடு நம்மிடம் பேசுகிறார் என்று எதையுமே யோசிக்காமல் அவர்களை முழுதாய் நம்பி.....வீட்டு சமையலில் ஆரம்பித்து, குடும்பக்கதை, ஃப்ளாஷ்பேக் என்று எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்து விடுவார்கள். அதன் பின் விளைவுகளை சிறிதும் யோசிப்பதில்லை வெகுளித்தனமகவும், வெளிப்படையாகவும் பேசுதல் நல்லதுதான் . அது நம்மை சுடாத வரை.

ஒருவரிடம் பேசும்போது அவரைப்பற்றி சரியாக எதுவும் தெரியாத நிலையில்.......அவர் கேள்விக்குத்தேவையான சரியான பதிலை மட்டுமே சொல்லுதல் போதுமானது. நாம் சொல்லும் விஷயம் அவருக்கு அவசியமா? அதனால் அவருக்கு ஏதாவது நன்மை உண்டா என்று யோசித்து பேசவேண்டும்...... எதார்த்தமாய் பேசுகிறேன் பேர்வழி என்று குப்பைத்தொட்டியில் குப்பை கொட்டுவது போல கண்டதையும் பிறர் காதில் கொட்டி அவர்களை முகம் சுளிக்கச்செய்வது சரி அல்ல. இது நல்ல உறவுகளையும் நம்மிடமிருந்து பிரித்து விலகிச்செல்ல வைக்கும். எனவே அளவோடு பேசி அன்போடு வாழ்வோம்.

Read More »

டெல்லி மாணவி பற்றி அக்கறைப்படுவோர் மண்டைதீவு சிறுமி பற்றி அக்கறை கொள்ளாததேன்?


டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாகியிருக்கின்றன. ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்திருக்கிறது.
பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் கண்டிக்கப்பட வேண்டும், அந்த பாதகங்களை செய்பவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மனிதத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
இத்தகைய கொடியவர்கள் சமூகத்தில் களையப்பட வேண்டும், இந்த கொடுமையான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவை பாரபட்சமற்ற வகையில் வெளிக்கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அறிந்து கொழும்பில் உள்ள மேட்டுக்குடி பெண்ணிலை வாதிகளும் ஐக்கிய தேசியக்கட்சி மகளிர் அமைப்பினரும் கையெழுத்து வேட்டை நடத்தி ஊர்வலகமாக சென்று இந்திய தூதரிடம் மனுவும் கொடுத்திருக்கிறார்கள். நல்ல விடயம்.
இலங்கையில் உள்ள பெண்ணிலைவாதிகளும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு மேலாக ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போராடுவதாக கூறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் டெல்லி மாணவியின் படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த மேட்டுக்குடி பெண்ணிலை வாதிகளுக்கு தங்கள் நாட்டில் தினம் தினம் நடக்கும் பாலியல் பலாத்காரங்களும் படுகொலைகளும் ஏன் கண்ணுக்கு தெரியவில்லை.
ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக கூறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு மண்டைதீவில் 4வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காதில் விழவில்லை. ஆனால் டெல்லி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டும் அவர்களை பாதித்திருக்கிறது.   நாடு கடந்த அரசாங்கத்தில் உள்ள பெண்களும் மேட்டுக்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் டெல்லி பெண்ணின் படுகொலை மட்டும் அவர்கள் காதில் கேட்டிருக்கிறது. ஆனால் மண்டைதீவிலும், திருக்கோவிலிலும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழைத்தமிழ் பெண்கள் என்பதால் அவர்களின் அவலக்குரல் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அம்மணிகளின் காதில் விழவில்லை போலும்.
ஐ.தே.கவினரை பொறுத்தவரை தென்னிலங்கையை விட போரினால் பாதிக்கப்பட்டு நொந்து ஒடிந்து போய் இருக்கும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் இந்த கொடுமைகள் நடப்பதால் இவர்களின் கண்களுக்கு இது தெரியவில்லையா அல்லது அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் தெரியவில்லையா என்பது புரியவில்லை.
தமிழ் பெண்கள் மீது இராணுவத்தினராலும், இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களாலும் நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலைகள் அனைத்தும் அதிகார மமதையில் நடத்தப்படுவதாகவே எண்ணத்தோன்றுகிறது.
இராணுவத்தினரோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஓட்டுக்குழுக்களும் சிங்களப்பெண்களையோ முஸ்லீம் பெண்களையோ பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றனர் என்றோ அல்லது படுகொலை செய்கின்றனர் என்றோ நாம் அறியவில்லை. ஆனால் அவர்களின் இலக்கு தமிழ் பெண்கள் தான் என்பதிலிருந்து இதுஒருவகை இனஅடக்கு முறையின் வெளிப்பாடாகவும் கருத வேண்டியிருக்கிறது.
எந்த ஒரு தமிழனும் ஒரு சிங்களப்பெண்ணையோ அல்லது முஸ்லீம் பெண்ணையோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக வரலாறு இல்லை. ஆனால் தமிழ் பெண்களை சிங்களவர்களும், முஸ்லீம்களும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்கள் அதிகம் உண்டு. தமிழர்கள் மீது கைவைத்தால் சட்டத்தின் முன் தமக்கு தண்டனை கிடைக்காது தப்பி விடலாம் என்ற அதிகார பலத்தின் வெளிப்பாடாடே தமிழ் பெண்கள் தொடர்ந்தும் வன்கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர்.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்களும் டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என ஓயாமல் ஓலமிட்டன. ஆனால் மண்டைதீவில் 4வயது சிறுமி இதே காலப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏன் அறியவில்லை. அல்லது திருக்கோவிலில் மூன்று தமிழ் பெண்கள் சிங்கள காடையர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையான தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அறியவில்லையா?
தமிழர் என்ற ஒரே காரணத்திற்காகவே இவை மூடிமறைக்கப்படுகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக நாடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வடக்கில் சிறிலங்கா கடற்படையினரினதும், ஈ.பி.டி.பியினரதும் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுப்பகுதியில் மட்டும் 2012ஆம் ஆண்டு இரு சிறுமிகள் உட்பட அண்மைய ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் இவர்களில் நான்கு சிறுமிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் யாரும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.
ஐயோ டெல்லியில் உள்ள மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுவிட்டார் என கொழும்பில் உள்ள மேட்டுக்குடி பெண்கள் காவடி எடுத்து திரிந்த அதே காலப்பகுதியில் தான் மண்டைதீவில் நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டார். திருக்கோவிலில் வயலில் களை பிடுங்கிக்கொண்டிருந்த மூன்று தமிழ் பெண்கள் மீது சிங்கள காடையர்கள் பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை தாக்கிய காயப்படுத்தி இருக்கிறார்கள்.
அருகில் இருக்கும் தமிழ் பெண்களின் அவலக்குரல்களை கேட்காத கொழும்பு மேட்டுக்குடி பெண்ணிலை வாதிகளுக்கு டெல்லியில் உள்ள பெண்ணின் அவலக்குரல் கேட்டிருக்கிறது. இதுதான் எமக்கு புரியாத புதிராக இருக்கிறது.
மண்டைதீவில் குணராசா சுடரினி என்ற சிறுமி கடந்த வாரம் (28.12.2012) பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு பழடைந்த கிணறு ஒன்றில் போடப்பட்டிருக்கிறார். அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதை பிரேத பரிசோதனையை நடத்திய சட்டவைத்திய அதிகாரி சிவரூபன் உறுதிப்படுத்தியிருக்கிறார். வன்புணர்வினால் பிறப்பு வாசல் மற்றும் மலவசல் என்பவற்றில் காயங்கள் காணப்படுவதாகவும் அவர் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
சிறுமியை காணவில்லை என்ற உடன் அன்று மாலையே அயலவர்களும் உறவினர்களும் அக்கிணறு உட்பட பல இடங்களிலும் தேடிய போதிலும் அச்சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. மறுநாளும் அப்பகுதியில் தேடிய போதே செருப்பு ஒன்று கிணற்றில் மிதந்து கொண்டிருந்ததை கண்டவர்கள் கிணற்றில் தேடிய போது அச்சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது.
அச்சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அன்று இரவுதான் அக்கிணற்றில் வீசப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. சடலம் கிணற்றில் போடப்பட்டதால் யார் பாலியல் பலாத்காரம் புரிந்தார் என்பதை டி.என்.ஏ. பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்றும் வைத்தியஅதிகாரி சிவரூபன் கூறியிருக்கிறார்.
இந்த பாலியல் பலாத்காரமும் கொலையும் இராணுவத்தினரால் அல்லது இராணுவத்தினருடன் இயங்கும் ஆயுதக்குழுவால் தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றே அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆயுதக்குழுவாக இயங்கும் அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்த ஒருவர் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்ட போதிலும் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். இக்கொலையை மூடி மறைப்பதற்காகவும் திசை திருப்புவதற்காகவுமே அரசியல் கட்சி ஒன்று கடந்த வியாழக்கிழமை மண்டைதீவில் மக்களை கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் கடந்த காலங்களில் தீவுப்பகுதி உட்பட யாழ் குடாநாட்டிலும் ஏன் வடக்கு கிழக்கில் தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், படுகொலைகளின் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருப்பது போலவே மண்டைதீவில் 4வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் மறைக்கப்பட்டு விடும்.
இது போன்றே நெடுந்தீவிலும் 03.03.2012 அன்று ஈ.பி.டி.பியினர் லக்சனா என்ற 12வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்திருந்தனர். நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் நடந்த இப்படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பியை சேர்ந்த கிருபா என்ற நபர் கைது செய்யப்பட்ட போதிலும் இச்சம்பவத்தில் முக்கிய பிரதான நபர் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் என்றும் இவர் தமிழ்நாட்டிற்கு தப்பி செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரியவருகிறது.
கடந்த 2012ம் ஆண்டில் யாழ். தீவுப்பகுதியில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தவிர கடந்த ஆண்டு காரைநகரில் பழைய இரும்பு வியாபாரியான முஸ்லீம் நபர் ஒருவர் ஊனமுற்ற இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்திருந்திருந்தார்.







நெடுந்தீவில் கடந்த 3.3.2012 அன்று நடந்த லக்சனா என்ற சிறுமியின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பே காணப்படுகிறது. இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட மரபணு சோதனை முடிவு அரசியல் செல்வாக்கு காரணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதற்கு தீவுப்பகுதியில் உள்ள வைத்திய அதிகாரிகளும் துணைபோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  தீவுப்பகுதியில் உள்ள அரச அதிகாரிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் ஈ.பி.டி.பியினர் தமது குற்றங்களை மறைப்பதற்கு இந்த அதிகாரிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோன்று கடந்த முதலாம் திகதி திருக்கோவில் வட்டமடு பகுதி வயலில் களை பிடுங்கிகொண்டிருந்த மூன்று தமிழ் பெண்கள் மீது சிங்கள காடையர் குழு ஒன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவர்களை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இந்த மூன்று பெண்களும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பெண்கள் மூவரும் அபாய குரல் எழுப்பியதை கேட்ட அப்பகுதி பிரதேச மக்கள் அங்கு வந்த போது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சிங்கள காடையர் குழு தப்பி சென்றுள்ளது. ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான இந்த மூன்று பெண்களும் வயலில் களை பிடுங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த 4பேரை கொண்ட சிங்களவர்கள் குழு அப்பெண்களை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர். அப்பெண்கள் அபயக்குரல் எழுப்பி தப்பி செல்ல முற்பட்ட போது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ள போதிலும் காவல்துறையினர் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாலியல் பலாத்கார கொடுமையை புரிந்தவர்கள் சிங்களவர்கள் என்பதாலும் பாதிக்கப்பட்டது அப்பாவி ஏழை தமிழ் பெண்கள் என்பதாலும் காவல்துறையினர் குற்றம் புரிந்தவர்களை கைது செய்ய எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என திருக்கோவில் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொழும்பில் ஐக்கிய தேசியக்கட்சி மகளிர் அமைப்பினர் டெல்லி மாணவிக்காக நடத்திய கையெழுத்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையின் ஒரு பகுதியை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்
புதுடில்லி பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் தொடர்பாக நாம் அக்கறை கொண்டுள்ளோம். ஆனால், புதுடில்லி பெண் தொடர்பில் இந்திய தூதுவரிடம் மனு கையளிக்கும் தகைமை நமது நாட்டில் நிலவுவதாக நாம் நம்பவில்லை. இந்த நாட்டில் இன்று தமிழ் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம், புதுடில்லி பெண்களின் நிலைமையைவிட பல மடங்கு பாரதூரமானதாகும். குறிப்பாக வன்னியிலே நிர்க்கதியாயுள்ள தமிழ் பெண்கள் பெரும் உடல், உள துன்பங்களை சந்திக்கின்றனர். நடந்து முடிந்த போரின் போதும், போர் முடிந்து அகதிமுகாம்களில் அடைப்பட்டிருந்தபோதும் நமது பெண்கள் மிகபெரும் அவலங்களை சந்தித்தனர். இந்த அவலங்கள் இன்றும் தொடர்கின்றன.
எனவே நமது பெண்கள் அவல நிலையில் வாழும் பொழுது, அதை அறியாதது போல் புதுடில்லி பெண் தொடர்பாக நாம் செயல்பட முடியாது. நம் நாட்டு தமிழ் பெண்களின் அவல நிலையை ஐதேக பெண்கள் சங்கத்தினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியினர் தெரிவித்திருந்தனர்.
தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கும், வெளிநாட்டு பணத்தில் பெண்ணிலை வாதம் பேசித்திரிபவர்களுக்கும் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இந்த கொடுமைகளை தினம் தினம் அனுபவித்து வருகிறார்கள்.
கிழக்கிலே திருக்கோவில் சம்பவம் போல, வடக்கிலே மண்டைதீவு சம்பவம் போல தினம் தினம் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பெண்கள் இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களாலும், சிங்களவர்களாலும் ஏன் முஸ்லீம்களாலும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.
திருக்கோவிலில் தமிழ் பெண்கள் சிங்களவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி இனஐக்கியம் பேசும் எந்த ஒரு சிங்கள அமைப்புக்களோ அல்லது பெண்கள் அமைப்புக்களோ வாயே திறக்கவில்லை.
அதேபோன்று காரைநகரில் தமிழ் பெண் ஒருவர் முஸ்லீம் இரும்பு வியாபாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது முஸ்லீம் அரசியல்வாதிகள் குற்றவாளியை காப்பாற்ற முற்பட்டனரே தவிர அக்குற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
லண்டனிலும் கொழும்பிலும்  பியர் அடிப்பதற்கும் களியாட்டம் போடுவதற்கும் சமஉரிமை கேட்டு போராடிவரும் பெண்ணிலை வாதிகளுக்கும் திருக்கோவில் சம்பவமோ மண்டைதீவு சம்பவமோ காதில் கேட்காது. டெல்லி சம்பவம் மட்டுமே காதில் கேட்கும்.   ஏனெனில் இங்கே பாதிக்கப்படுவது அப்பாவி நாதியற்ற தமிழ் பெண்கள் அல்லவா…..
Thanks to - Thinakkathir


Read More »

மாம்பழம் பிடிக்குமா? - அவசியமான செய்தி


20130128-111447.jpg

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் “மாங்கோ’ என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள், இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். அதனால்தான் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா என்று நாம் இப்போது சப்புக்கொட்டிச் சாப்பிடுபவை எல்லாம் போர்ச்சுக்கீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை. உலகிற்கு மாம்பழங்களை (ஏற்றுமதி செய்து) அறிமுகப்படுத்தியவர்களும் அவர்களே! இந்தியர்கள் மாம்பழங்களை 3000 ஆண்டுகளாகச் சுவைத்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்கு இதன் சுவை கடந்த 300 ஆண்டுகளாகத்தான் தெரியும் என்பது அதிசய செய்தி! ஆண்டு முழுவதும் பச்சைப் பசேலென்று இருப்பது மாமரம்.கோடையின் உச்சத்தில் மாம்பழ சீசன் ஆரம்பிக்கும். கோடை வெய்யிலின் உக்கிரம் அதிகரிக்க, அதிகரிக்க மாம்பழத்தின் இனிப்பும் அதிகரிக்கும்! நமது கண்ணையும் கருத்தையும் நாவையும் கவரும் மாம்பழத்தில், உலகில் 1000 வகைகள் உள்ளன. பந்துபோல உருண்டையாகவும், சற்றே நீள் உருண்டையாகவும், முன்பாகம் கிளியின் மூக்கு போல வளைந்த நிலையிலும் பல்வேறு வடிவங்களில் மாம்பழங்கள் விளைகின்றன. சில வகை மாம்பழங்கள் மாலை வானத்தைப் போல மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் கண்ணைக் கவரும். சுத்தமான மஞ்சள் மற்றும் இலைப் பச்சை நிறங்களில் கிரிக்கெட் பந்து அளவிலிருந்து தர்பூசணி அளவு பெரிய சைஸ் வரையிலும் வகைவகையாக மாம்பழங்கள் உள்ளன.
இந்தியாவும் ஆசியாவும் உலகிற்கு அளித்த அன்புப் பரிசு இந்த மாம்பழம். இந்தியாவின் மிகப்பெரும் சாதனை என்று யாராவது கேட்டால், தயங்காமல் “உலகிற்கு மாம்பழத்தை அறிமுகப்படுத்தியதுதான்’ என்று சொல்லலாம். அஸ்ஸôம் காடுகளிலும் பர்மா (மியான்மர்) நாட்டின் அடர்ந்த காடுகளிலும்தான் முதன் முதலில் மாம்பழங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வைட்டமின் ஏ,சி மற்றும் டி அதிகமாக உள்ள மாம்பழத்துக்கு வேறு பல குணங்களும் இருப்பதாக நம்மவர்கள் நம்புகின்றனர். மாம்பழம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று பெரும்பாலோர் நினைக்கின்றனர். மாவிலைத் தோரணங்களை வீட்டு வாசல்களில் தொங்கவிடுவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதையை இல்லங்களுக்கு வரவழைத்து ஆசைக் கனவுகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். மண்மாதாவின் அன்புக் கொடை என்றும் மாம்பழத்தை வர்ணிக்கின்றனர். கௌதம புத்தர் வெள்ளை நிற மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் பிற்காலத்தில் அவருடைய வழிவந்தவர்கள் அம்மரத்தை வழிபட்டனர் என்றும் கதைகள் உள்ளன. எல்லோருடைய மனங்களிலும் இல்லங்களிலும் நிறைவான இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் மாம்பழம் உண்மையிலேயே “பழங்களின் அரசன்’தான்!

Read More »

ரொமான்ஸ் (Romance) என்றால் என்ன?

Written By - P.Latheep
support@vavuniya.info

ரொமான்ஸ் என்றால்... தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு, விடிய விடிய கட்டிப்பிடித்து, கையை பிடித்துக் கொண்டு இருப்பதுதானாக்கும் என்றெல்லாம் ஓவராக கற்பனை வானில் மிதந்து, யதார்த்தத்தை கோட்டைவிடாதீர்கள்.
நிஜ வாழ்வில் ரொமான்ஸ் என்பது, அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்பாமல், ராத்திரி சிணுங்கும் குழந்தைக்கு கணவன் எழுந்து தொட்டில் ஆட்டிவிடுவது, கணவன் தேடுவானே என்று மனைவி அவன் சொக்ஸ் ஜோடியை எடுத்து வைப்பது... இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் ஒருவர் காட்டும் பரிவில்தான் இருக்கிறது.
'ஐ லவ் யூ பேபி' (I love you baby)என்று தினமும் முணுமுணுக்கலாம். அது ரொம்ப ரொம்ப சுலபம். ஆனால், வெறும் வார்த்தைகள் மட்டுமே, அதை நிறைவேற்றிவிடுமா? ஒருவர் தன் அன்பின் ஆழத்தை செயல்களில் வெளிப்படுத்தும்போதுதானே... முழுமை அடையும்!
Remember, actions speak better than words. . கணவர் செய்யும் சின்னச்சின்ன உபகாரங்களை இன்முகமாக ஏற்றுக்கொள்ளுங்கள். 'இதை எல்லாம் நீ ஏன் செய்கிறாய்? நானா செய்துகிட்டாதான் எனக்கு திருப்தி’ என்று ஓவராக பிகு செய்துகொள்ளாமல், அன்பாக, ஆசையாக ஒரு 'தேங்க் யூ டார்லிங்’ சொல்லுங்கள். அதேசமயம், 'பரவாயில்லையே... நமக்காக செய்கிறானே இளிச்சவாயன்’ என்று அவரைத் தொடர்ந்து அதேவேலையைச் செய்ய ஏவாதீர்கள். 'அன்றைக்கு செய்தியே, இப்ப மறுக்குறியே, அப்படினா, இப்ப என் மேல அன்பு போச்சா?’ என்றெல்லாம் தேவையில்லாமல் சண்டை போட்டு அவர் அன்பை கொச்சைப் படுத்தாதீர்கள்.
'மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்' - திருக்குறள்
ஆம்... சிலர் மட்டும்தான் அந்த உண்மையை அறிந்து, அதன் நல்ல பயனை பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காரணம், சிலருக்குதான் அந்த உறவைக் கட்டிக் காப்பாற்றும் பொறுமையும், திறமையும் இருக்கிறது. அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் ரொமான்டிக் வாழ்க்கை.....எப்போதுமே சுவாரசியம்தான்!

Read More »

பவர்ஸ்ரார்க்கு என்னாச்சு???


சினிமாவில் தற்போது பவர் ஸ்டாரின் பெயர் அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இயக்குனர் வெற்றி மாறன், தான் இயக்கவிருக்கும் புதிய பட தலைப்பை பதிவு செய்ய சென்றாராம்.
அங்கு தன் படத்திற்கான தலைப்பை ஏற்கனவே பவர் ஸ்டார் பதிந்துள்ளார்.
அதாவது துரை தயாநிதி தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கும் படம் தேசிய நெடுஞ்சாலை.
இதே தலைப்பில் பவரும் படமொன்றை எடுக்க விடுக்கிறார்.
இதனால் சற்றே அதிர்ந்து போன வெற்றிமாறன், உதயம் NH4′ என்று தனது படத்தின் பெயரை மாற்றிக் கொண்டார்.
இதற்கிடையே இதுவரை துரைதயாநிதி என்று தன் பெயரை உபயோகப்படுத்தி வந்தவர், இனி தயாநிதி அழகிரி என மாற்றிக்கொண்டதாகவும் ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.


கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்த காத்திருக்கும் பவர் ஸ்டார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்து விட்டு பவர் ஸ்டாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினி வாழ்த்தினாராம், இதனை தொடர்ந்து தற்போது ஒரு நாளைக்கு மூன்று லட்சம் சம்பளம் வாங்கும் பவர் ஸ்டார், அதை ஐந்து லட்சமாக மாற்றும் யோசனையில் இருக்கிறாராம். ஏன் இந்த சம்பளவு உயர்வு என்றால், காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் என்ற தத்துவத்தை சொல்லும் அவர், இன்னும் தான் நடித்த இரண்டு படங்கள் ஹிட்டானால், தனது சம்பளத்தை ஒரு கோடியாக கேட்கலாம் என்று இருக்கிறாராம். இந்த நிலையில் சிங்கம் 2 படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனை காமெடி கேரக்டரில் நடிக்க வைக்க ஹரி யோசித்து வருகிறாராம். அடிக்கிற காத்துல காணாம போயிடாம இருந்த சரி.

Read More »

கமல் ....கமல் ஹாசன்...விஸ்வரூபம்...என்ற இறுதி வியாபாரம்..!

கமல் ....கமல் ஹாசன்...விஸ்வரூபம்...என்ற இறுதி வியாபாரம்..! உலக நாயகன், ஊர் நாயகன் எந்த நாயகனின் படத்தையும் தடை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கருத்து எதுவாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் உரிமை யாருக்குமுண்டு. விஸ்வரூபத்தின் வினியோக எதேச்சதிகாரத்தில், தியேட்டர்கள் பிடுங்கப்பட்டு, தோழர்களால் கேரளாவின் சித்தூரில் நடக்கவிருந்த 'பஞ்சன்யம்' சர்வதேச திரைப்பட விழா(ஜனவரி 26 - 31) திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. எளியவர்களை வாழவிடாமல் செய்யும் தன்மைக்காகத் தான் படத்திற்கே அப்படியொரு பெயர் போலிருக்கிறது. 'செங்கடல்' உட்பட பல படங்களின் பிரிண்டுகள் வரவழைக்கப்பட்டு, விழா நடத்தமுடியாமல், இப்போது அவற்றையெல்லாம் பாதுகாக்கும் அல்லது திருப்பியனுப்பும் சிக்கலில் இருக்கிறார்கள் திரைப்பட இயக்கத்தினர். மிகச்சிறிய பட்ஜெட்டில் திரைப்பட விழா நடத்துபவர்களுக்கு, இது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம். கமலுக்காக நீங்கள் ஏன் உரிமைக்கொடி பிடிக்கவில்லை என்று ஏகப்பட்ட பேர் கேட்கிறீர்கள். சரி. கமல் என்றல்ல, எந்த கலைஞனின் கருத்து சுதந்திரத்திற்காகவும் கொடி பிடிக்க தயார் தான். ஆனால் கமல் தன் வியாபாரத்திற்கெல்லாம் வெளியே அப்படி யாருக்கெல்லாம் உரிமைக்கொடி பிடித்தார்?

Read More »

ONLINE -ல் இலகுவாக பணம் சம்பாதிப்பது எப்படி?

.P.Latheep
support@vavuniya.info

இணையத்தில் பலர் ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதில்லை. உலகில் வாழும் அனைவருக்கும் அத்தியாவசிய தேவை பணம் ஏனெனில் பணத்தை கொண்டே நாம் வாழத் தேவையான உணவு, உடை, உறைவிடம் எல்லாவற்றயும் பெற்றுகொள்ள முடியும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த வகையில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலர் இணையத்தில் பணம் சம்பாதிக்க முயன்று சரியான பாதை தெரியாததால் தோற்றுப் போயிருக்கலாம். இன்னும் பலர் இதனைப்பற்றி அறியாமலே இருக்கலாம். கவலை விடுங்கள். உங்களுக்காகவே இந்த பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பணம் சம்பாதிப்பது உங்கள் எண்ணமா ? உங்கள் பதில் ஆம் எனில் நீங்கள் வரவேண்டிய சரியான இடத்திற்குத் தான் வந்து உள்ளீர்கள். இங்கே நான் குறிப்பிடப்போகும் வழிமுறைகள் வெறும் கட்டுக்கதைகளோ, கற்பனைக்கதைகளோ இல்லை இவை யாவும் எம்மால் பரீட்சிக்கப்பட்டு நடைமுறையில் வெற்றியாக்கப்பட்ட வழிகளே ஆகும். எனவே அனைவரும் நம்பிக்கையாக முயலாம். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை. நம்பிக்கையோடு தொடங்குங்கள் வெற்றி உங்களுக்கே.

ClixSense-ல் சேருவது எப்படி ? 

 1. இங்கு கிளிக் செய்து ClickSense தளத்திற்கு செல்லவும்.

2.    வரும் திரையில் Sign up என்பதனை கிளிக் செய்யுங்கள்.



3.     வரும் பார்மில் உங்கள் விபரங்களினை கொடுத்து Sign up Now பட்டனை அழுத்துங்கள்.

4.    உங்கள்  மெயிலுக்கு லாகின் செய்து ClickSense  இல் இருந்துவந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

5.    மீண்டும் ClixSense  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username, Password என்பவற்றை இட்டு ClixSense  தளத்தினுள் லாகின்செய்யுங்கள்.
6.    விளம்பரத்தை க்ளிக் செய்க
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ளபடத்தில் உள்ளது போல் இருக்கும்.
உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம்சம்பாதித்திர்கள் என இருக்கும்இப்பொழுது பணம் சம்பாதிக்க View Ads-  க்ளிக் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன.முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் இப்பொழுது விளம்பரமானதுஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்.விளம்பரமானது validated ஆகும் வரை பொறுத்திருக்கவும். validated ஆகிய பின்பு Tab close செய்யவும்.

இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும்.அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள்அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.
தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.மேலும் Upgrade Golden Membership மூலம் Rented Referrals, Adprize மற்றும் மூலமும் சம்பாதிக்க முடியும்.
அவ்வளவுதான் தினமும் 5 நிமிடம் விளம்பரங்களை க்ளிக் செய்துஒரு மாதம் முயற்ச்சி செய்து பாருங்கள் பிறகு நீங்களே “ நிறையபணம் சம்பாதிப்பதற்கு இதை விட எளிமையான வழி இல்லை “ என்றுசொல்வீர்கள்கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து இன்றே இணையுங்கள்.




Read More »

இத்தாலியின் வரலாற்றை கூறுகிறார் VTV கணேஷ்!...நீங்களும் கொஞ்சம் கேளுங்களேன்!.


No.1 Website in Vavuniya   - Add Your Advertisements - support@vavuniya.info 

Read More »

பரபரப்புச் செய்திகளுக்காக மிகைப்படுத்தப்படும் தவறான தகவல்கள்! ரிசானா குடும்பம் கவலை


கோடி கோடியாகக் கொண்டுவந்து கொட்டினாலும் மாடி வீடுகளைக் கட்டித்தந்தாலும் எங்கள் மகள் ரிசானாவுக்கு அது ஈடாகுமா? அன்பு மகள் ரிசானா இனிமேல் எங்களுக்கு கிடைப்பாளா? ரிசானாவின் வீட்டுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்களிடம் அழுதழுது புலம்புகின்றனர் அவரின் பெற்றோர்.
ரிசானாவின் வீட்டுக்கு திரள்திரளாக வரும் ஆயிரக்கணக்கான மக்கள் ரிசானாவின் தாய், தந்தை மற்றும் சகோதரர்களுக்கு என்னதான் ஆறுதல் வார்த்தைகள் கூறி வருகின்றபோதும் இழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை இழந்தவர்களாகவே அவர்கள் இருப்பதாக மூதூர் பள்ளிவாசல் கதீப் ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள், அரசியல் வாதிகள், சமூகநல இயக்கங்களின் முக்கியஸ்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானோர் அங்கு வந்து உதவிகள் அளிக்க முன்வந்தபோதும் அவற்றைப்பற்றி சிந்திக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.
யாராவது உதவிகளை வழங்கினால் கண்ணீரே அவர்களுக்கு பெருக்கெடுக்கின்றது. அந்தப் பிரதேசம் சோகமாகவே இன்னும் காட்சியளிக்கின்றது. மூதூரிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் தமது சொந்த வீட்டில் மரணம் நடந்த உணர்வையே காணமுடிகின்றது.
இதேவேளை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், இராணுவத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூகநல அமைப்புகள் ரிசானாவின் குடும்பத்துக்கு எண்ணற்ற உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்.
ரிசானாவின் குடும்பத்துக்கென வீடு வழங்க பல நிறுவனங்களும் அரசாங்கமும் முன்வந்துள்ளபோதும் எவற்றிலுமே சந்தோசம் கொள்ளும் ஒரு மனநிலையில் இப்போது அந்தக் குடும்பம் இல்லை. எதை யுமே பொருட்படுத்துவதாக அவர்கள் இல்லை.
எந்தக் குற்றமும் செய்யாத தன்பிள்ளை அநியாயமாக மரணித்துவிட்டாள் என்ற கவலை அவர்களை வாட்டி வதைக்கின்றது. தாயையும் தந்தையையும் சுற்றி எந்நேரமும் அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்கள் குழுமியிருப்பதையே காண முடிகின்றது.
இதேவேளை ரிசானாவின் மரணதண்டனை ஒரு சமூக மாற்றத்துக்கு வித்திடவேண்டும் என்ற தூய எண்ணத்தில் மூதூரில் ஒரு புதிய முயற்சியொன்று தொடங்கப்பட்டுள்ளது.
மூதூர் மஜ்லிஸ் சூரா, மூதூர் ஜம் இய்யதுல் உலமா, கதீப்மார் சம்மேளனம், தடயம் சமூக அபிவிருத்தி மையம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மூதூர் ‘பீஸ் கெளஸ்’ ஒரு கையெழுத்து வேட்டையை அங்கு ஆரம்பித்துள்ளது.
இலங்கையிலிருந்து பணிப்பெண்களை பிள்ளைப் பராமரிப்புக்கும் கடினமான வேலைகளுக்கும் அனுப்புவதை அரசாங்கம் தடைசெய்ய வேண்டுமென கோரியே இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.
இது தொடர்பான மனுவை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான முயற்சியே இதுவென பீஸ் கெளஸின் தலைவர் அமீர் எஸ். ஹமீட் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க ரிசானா விவகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை எழுதும் போர்வையில் தவறான, மிகைப்படுத்திய செய்திகளை வெளியிடுவதாகவும், ஒலிபரப்புவதாகவும் குடும்ப அங்கத்தவர் ஒருவர் வருத்தம் வெளியிட்டார்.
அப்பாவியான, ஒன்றுமேயறியாத ரிசானாவின் தாயாரிடம் ஏதாவது விடயங்களை கேட்டு விட்டு அதனைத் திரிபுபடுத்தி செய்திகளை வெளியிடுவது வேதனையானது எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான செய்திகள் இடிந்து போயிருக்கும் ரிசானாவின் குடும்பத்தை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என அவர் கவலையும் அச்சமும் தெரிவித்தார்.
இஸ்லாமிய ஷரிஆ அடிப்படையில் ரிசானாவின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் அந்தச் சிறுமியை விசாரணை செய்த முறை பிழையானது என்ற கருத்தே இலங்கையர் பலரின் வேதனையாகவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் வாழும் எந்த ஒரு பெண்ணும் இந்தச் சம்பவத்திலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
அத்துடன் சவூதி அதிகாரிகள் மீதும் ரிசானாவின் வீட்டு எஜமானியின் மீதும் இலங்கை மக்களின் கோபக் கனல் குறைந்ததாகத் தெரியவில்லை.
மொழி தெரியாத ஒரு பிள்ளையிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு பொறுப் பற்ற விதத்தில் நடந்துகொண்ட அந்த அரபுப் பெண், இறுதிவரை தனது அடம்பிடிப்பை கைவிடாது மன்னிப்பு வழங்காதிருந்தமை அந்தப் பெண்ணின் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்து வதாகவே பெண்கள் கூறுகின்றனர்.
ரிசானாவின் மரண தண்டனைக்குப் பின்னர் இஸ்லாமிய ஷரிஆவை கொச்சைப்படுத்தும் முயற்சிகளில் மேற்குலக ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குலகத்தின் உலக தமிழ் வானொலி யொன்று ஷரீஆ சட்டம் தொடர்பில் இஸ்லாமிய மதப் பெரியார்களின் முரண்பட்ட கருத்துக்களை மாறி மாறி ஒலிபரப்பி ஷரீஆ சட்டத்தை ‘பிழையான ஒரு கோட்பாடு’ என சித்தரிக்க முற்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை இவ்விதமிருக்க, ரிசானாவின் மரணத்தின் பின்னர் அவரின் பெயரால் நிதியங்கள் உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் எந்த ஒரு திட்டமும் சுயநல நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாதென்பதில் மூதூர் மக்கள் உறுதியாக நிற்கின்றனர்.
அத்துடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ரிசானாவின் உயிரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நன்றியுணர்வும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

Read More »

டைட்டானிக் தெரிந்த தகவல்கள் ஆனால்....தெரியாதவை..?!

டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் பேசுகிறோமே தவிர, நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் வரை எனக்கும் எதுவும் தெரியாது. இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், இந்தக் கப்பல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில் எழுதுகிறேன். இதன் மூலம் நானும் பல விசயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. படிக்க ஓரளவு எளிமையாக கொடுக்க முயற்சிக்கிறேன். உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது. கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும். Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது. டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள். இந்தக் கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டது. மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது. மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் - ன் அறை) இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது. இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. புரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர். இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள். John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம் டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது. RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார். டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர். ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும். விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர். கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்! விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. முதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது. படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள். கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது. டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும். நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!… தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள் நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர். மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது. நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி. இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள். அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது. கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர் முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள். முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர். அப்போது ஒவ்வொரு குடும்பமும் மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள். டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது. ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது. விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர். இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள். கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உலவுகின்றன. இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது. மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும். 10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே! மனிதன் என்னதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதை உருவாக்கினாலும் இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று நம் அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது. அதில் விலை உயர்ந்த பாடமாக மனித குலத்திற்கு இந்த விபத்து அமைந்து விட்டது. என்றாலும், இவையெல்லாம் விட கடாரம் சென்ற சோழனின் கப்பல் படை..., ஜப்பானை ஆக்கிரமிக்கப் புறப்பட்ட செங்கின்கிஸ்கானின் கப்பல் படையை விட, மிகப் பெரிது என்று தெரியுமா என்ன..?

Read More »
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.