வவுனியா குருமன்காடு பகுதியில் இப்படியும் “மக்கள் போராட்டம்”!! (PHOTOS)


மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்தது நகரசபையா? மின்சார சபையா?
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியான குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள முதலாம் ஒழுங்கையில் நீண்டகாலமாக தெருவிளக்குகள் ஒளிராமையால் மக்கள் போராட்டம்.. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வவுனியா நகர சபையின் எல்லைக்குட்பட்ட குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள முதலாம் ஒழுங்கையில் பெருத்தப்பட்டுள்ள தெரு விளக்குகள் கடந்த ஒரு வருடமாக ஒளிரவில்லை. இது தொடர்பாக வவுனியா நனரசபை மற்றும் மின்சார சபை என்பவற்றை மக்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதும் தீர்வு கிடைக்கவில்லை. இதே வேளை வவுனியா நகர சபைத் தலைவர் ஜ.கனகையா 06 மின்சார விளக்குகளை கறித்த பிரதேசம் ஒன்றில் உள்ள கடையில் பொருத்துவதற்காக வைக்கப்பட்டு 06 மாதம் கடந்த நிலையில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று வித்தியாசமான முறையில் போராட்டம் உன்றினை மேற்கொண்டனர். நகரசபைத்தலைவரால் கடையில் கொண்டு சென்ற வைக்கப்பட்ட மின்விளக்குகளை வீதியில் வைத்து உடனடியாக மின்சார விளக்குகளை பொருத்துமாறு போராடினர். இது தொடர்பாக நகர சபைத்தலைவர் ஜ.ககையா மின்சாரசபை மீதும், மின்சாரசபை நகரசபை மீதும் மாறி மாறி குற்றசாட்டுக்களை முன்வைத்தன. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் உடனடியாக மின்சார விக்குகள் பொருத்தப்படாது விடின் “போராட்டம்” இன்னும் பெரிதாகும் என கூறியதும் இரவு இரவாக சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரசபையால் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.
P1010304
P1010296
P1010305
P1010306
P1010307
P1010308
P1010309
P1010310
P1010311
P1010314



இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.