Showing posts with label மன்னார். Show all posts

மன்னார் தனியார் பஸ் போக்குவரத்துச் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பு


மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டு வரும் பணிப்பகிஸ்கரிப்பால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி மன்னார் மாவட்டச் செயலகத்தினுடாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் அனுமதியை பெறுவதற்கு கேள்வி கோரல் விடுத்துள்ளனர்ர் . இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மன்னார் தனியார் பஸ் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.ர்
தமக்கு உரிய பதில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் கிடைக்கும் வரை தமது பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என மன்னார் தனியார் பஸ் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது. பணிப்பகிஸ்கரிப்பால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட சகல கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ர்
இந்நிலையில் வேறு மாவட்டங்களில் இருந்தும் தனியார் பஸ்கள் மன்னாரிற்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஸ் தெரிவித்தார்.ர்
இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.

Read More »

மன்னார், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு ரணில் விஜயம்.


இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் வட மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கட்சியின் உயர்பீட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயத்தின் போது அவர், மன்னார், கிளிநொச்சி மற்றம் வவுனியா மாவட்டங்களுக்குச் சென்று அங்கு நிலைமைகளை ஆராய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயம் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அமையும் எனவும் கட்சித் தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன

Read More »

மன்னாரில் வீட்டுக்குள் புகுந்த வேற்றுக் கிரகவாசி! (Photo)


மன்னாரில் பெரிய கடைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேற்றுக் கிரகவாசி போன்ற தோற்றத்திலான ஒரு உருவம் திடீரென்று தோன்றி மறைந்து உள்ளது.இவ்வுருவத்தை வீட்டுக்காரர்கள் நேரில் கண்டு உள்ளார்கள்.கையடக்கத் தொலைபேசியில் இவ்வுருவம் புகைப்படம் பிடிக்கப்பட்டது.இச்செய்தி மன்னார் முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது

alians_mannar (1)

Read More »

க.பொ.த உ/த (2012)பரீட்சை பெறுபேறு

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று (30) மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய தள முகவரியில் பார்வையிட முடியும். 

உத்தியோகபூர்வமான பெறுபேறுகள் நாளைய தினம் அஞ்சல் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

Read More »

A/L 2012 முடிவுகள் எதிர்வரும் புதன் கிழமை- உறுதியாக அறிவிப்பு


க.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி  புதன் கிழமை வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களம் உறுதியாக அறிவித்துள்ளது.


அன்றைய தினமே எமது இணையத்தளத்தின் மூலமும் பெறுபேறுகளை பார்வையிட முடியும்


Read More »

சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை !


IMAGEFRONTDIS.
14 மாவட்டங்களில் இன்று (25ஆம் திகதி ) சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகைகள் இடம் பெறவுள்ளன. இந்த தகவலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத் தெரிவித்துள்ளது
 இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரையிலான இரண்டு மணி நேரம் குறித்த சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகை இடம் பெறும் எனவும் இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும்  அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் ஊடக பணிப்பாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார்.
இந்த சுனாமி அனர்த்த முன் எச்சரிக்கை ஒத்திகைகள் கடற்கரைகளை அண்மித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

மன்னார் கல்வி வலயத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு பின் தள்ளவைக்கும் செயற்பாடு!


மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட தமிழ் பாடசாலைகள் திட்டமிட்டு மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளரினால் பின்தள்ளவைக்கப்பட்டு வருவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வருடா வருடம் தரம் 1இற்கு மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற போது அந்த மாணவர்களை தரம் 1 இற்கு பொறுப்பான ஆசிரியர்கலள வரவேற்பது வழமை.
இந்த நிலையில் இவ்வருடம் மன்னார் வங்காலை புனித ஆனால் ம.வி பாடசாலையில் தரம் 01 இற்கான ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.
கடந்த 18 ஆம் திகதி இடம் பெறவிருந்த தரம் 01 மாணவர்களை பாடசாலையில் அனுமதிக்கும் கால்கோல் விழா இதுவரை இடம் பெறவில்லை என பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது வரை வங்காலை புனித ஆனால் ம.வி பாடசாலையில் தரம்-01 இற்கு சேர்ப்பதற்காக 95 மாணவர்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மூன்று பிரிவுகளில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் மன்னார் வலயக்கல்வித்தினைக்களம் இது வரை ஆசிரியர்கள் எவரையும் நியமிக்கவில்லை.
இது தொடர்பாக வங்காலை கிராம மக்கள் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் அவர்களுக்கு பல தடவை கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் அவர் செயற்படுவதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
Mr. M. M. Ziyaan
Mr. M. M. Ziyaan
உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் மன்னார் வலயக்கல்விப்பணிமனைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இதே வேளை தமிழ் பாடசாலைகளான பேசாலை புனித-மரியாள் பாடசாலையில் இவ்வருடம் தரம் 1 இற்கு சுமார் 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் மூன்று பிரிவுகளுக்கும் இது வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதே வேளை தாழ்வுபாடு புனித வளனார் ம.வி பாடசாலையில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவுகளுக்காண ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-கடந்த காலங்களில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாத நிலையில் மன்னார் கல்வி வலயம் இயங்கி வந்த போதும் கடந்த ஒரு வருடகாலமாக மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று வருவதாகவும் குறிப்பாக தமிழ் பாடசாலைகள் வலயக்கல்விப்பணிப்பாளரினால் திட்டமிட்டு பின்தள்ளவைக்கப்பட்டு வருவதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

Read More »

மன்னார் முசலியில் குவைத் நாட்டின் நிதி உதவியுடன் வீட்டுத்திட்டம்!


குவைத் நாட்டின் நிதி உதவியுடனும் ஜமாத்தே இஸ்லாமின் அனுசரனையுடனும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மணற்குளம் கிராமத்தில் புதிதாக 50 வீடுகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது.
ஆரம்ப கட்ட பணிகள் தற்பொது இடம் பெற்று வருகின்றது.முசலி பிரதேசச் செயலகத்தினூடாக குறித்த 50 பயணாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாதவர்கள் விண்ணப்பிக்கலாம்! - பெப்ரவரி பரீட்சை!

நாட்டிலேற்பட்ட சீரற்ற காலநிலையால் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களின் தரவுகளை பாடசாலை அதிபர்கள் ஊடாக வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 17, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றாத மணவர்களுக்கான மீள் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 09,10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே பரீட்சைக்கு தோற்றும் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக தரவுகளை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பரீட்சார்த்திகள் தமது தகவல்களை நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிவுறுத்தல்களுக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவை தொடர்பான மேலதிக தகவல்களை 0112784208, 0112784537, 0113188350, 0112786200, 0112784201, 0112784204 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Read More »

மன்னாரில் சிங்கள நிலஅளவையாளர் கொலை தொடர்பில் தீவிர விசாரணை!


மன்னாரில் சிங்கள நில அளவையாளர் கொலை தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரனையில் ஈடுபட்டுவருவதால் குறித்த பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
மன்னார் பிரதேச நில அளவை அலுவலகத்தில் கடமையாற்றும் தென் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த மாதம் 7 ஆம் திகதி(07-12-2012) இரவு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மன்னார் காவல்துறையினரும் புலனாய்வுத்துரறை அதிகாரிகளும் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mannar Newsஇச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்
-மன்னார் உப்புக்குளம் பிரதான வீதியில் குறித்த மன்னார் பிரதேச நில அளவை அலுவலகம் அமைந்துள்ளது.அதற்கு முன்பாக உள்ள தனியார் ஒருவருடைய வீட்டில் அந்த அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் வாடகைக்கு அமர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சக ஊழியர்கள் விடுமுறைக்காக தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் பொலநறுவை பகுதியைச் சேர்ந்த நாமல் சோமரத்தின (வயது-32)என்ற இளைஞரும் மேலும் சில ஊழியர்களும் குறித்த வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினமான 07-12-2012 வெள்ளிக்கிழமை இரவு அலுவலக பணி முடிந்த நிலையில் குறித்த ஊழியர் தனது வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளார்.பின்னர் மறுநாள் சனிக்கிழமை(8-12-2012) காலை அவர் அலுவலகம் செல்லவில்லை.
இந்த நிலையில் மன்னார் பிரதேச நில அளவை அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதிகாரி ஒருவர் குறித்த இளைஞர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்டுள்ளார்.ஆனால் அங்கு வேறு எவரும் இருக்கவில்லை.
இந்த நிலையில் முதலில் அவருடன் இருந்த சக பணியாளர்கள் அழைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மன்னார் காவல்துறையயும் புலனாய்வுத்துறையினரும் கொலைச்சம்பவம் இடம் பெற்ற வீட்டிற்கு அருகாமையில் உள்ள மக்களிடம் தொடர்ந்தும் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள குடும்பஸ்தர்கள் சிலர் தொடர்ந்தும் விசாரனைகளுக்கு உற்படுத்தபப்பட்டு வருகின்றனர்.
தற்போது கொலைச்சம்பவம் இடம் பெற்ற வீடு தொடர்ந்தும் காவல்துறை பாதுகாப்பில் உள்ளது.
தொடர் விசாரனைகளினால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

புனர்வாழ்வு பெற்ற 313 பேர் நேற்று சமூகத்துடன் இணைப்பு


புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 313 பேர் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற விசேட நிகழ்வில் இவர்கள் விடுவிக்க ப்பட்டனர்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கந்தகாடு மற்றும் மருதமடு புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற பயனாளிகளே நேற்று சமூகத்தில் இணைக்கப்பட்டனர். எஞ்சியவர்களையும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் பின்னர் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்நிகழ்வில் உரையாற்றிய சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் கடனுதவிகளை வழங்கி வருகிறது.
இவர்களுக்கான கடன்களை வழங்க அரசாங்கம் இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் 5 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. கடந்த வருடம் 3 மில்லியன் ரூபாவாகவிருந்த இத்தொகை இம்முறை 5 மில்லியன்களாக ஜனாதிபதியால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
நேற்றைய நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர், புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், தென்மாகாண முதலமைச்சர் சான்லால் விஜயசிங்க, வன்னி கட்டளைத்தளபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முள்ளுக்கம்பிகளும், 5 தென்னங்கன்றுகளையும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர இன்று கையளிக்கவிருப்பதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கரைதுறைபற்று பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு நஷ்ட ஈடுகளும், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்புக் கடன்களும் வழங்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

(News - THINAKARAN)

Read More »

மன்னார் விவசாயிகளுக்கு உரம் வழங்கிவைப்பு


மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரம் மானிய அடிப்படையில் வழங்கப்படுகின்றது.
கமநல திணைக்களத்தால், முருங்கன் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து  நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் மானியமாக வழங்கப்படுகின்றது.
e2(102)

Read More »

A/L 2012 பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 30ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதே தினத்தில் பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
Read More »

மன்னார் நிலை குறித்து பிரான்ஸ் தூதுவர் ஆய்வு (படங்கள்)

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோம் இன்று காலை மன்னாருக்கு விஜயம் செய்து மன்னார் நகர சபை தலைவர், உப தலைவர்களுடன் மன்னாரின் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடினார். 

இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகர சபைக்குச் சென்ற இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோம், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், செயலாளர் எஸ்.ஜே.குரூஸ், நகர சபையின் உறுப்பினர்கலான இரத்தினசிங்கம் குமரேஸ், அரச தரப்பு உறுப்பினர் டிலான் ஆகியோரை சந்தித்து உரையாடினார். 

இதன்போது மன்னார் மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார். இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தமிழ், முஸ்ஸிம் மக்களின் நிலவரம், மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாவட்டத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் கேட்டறிந்தார். 

மக்களின் பிரதிநிதிகள் மற்றும் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். 

இதன்போது மன்னார் மாவடடத்தில் தற்போது அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும், குறிப்பாக அரச தரப்பு அமைச்சர் ஒருவரினால் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத காணி அபகரிப்பு, பாகுபாடான வேலை வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மன்னார் நகர சபையின் உறுப்பினர்கள் - இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரி றொயிஞ்சோமிடம் தெரிவித்தனர். 

இங்கு கருத்து தெரிவித்த மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுப்பினர் டிலான், மன்னார் மாவட்டத்திற்கு சொந்தமான அமைச்சர் ஒருவர் அவருக்கு பணிக்கப்பட்ட விடையங்களை விட சகல விடயங்களிலும் தலையிடுகின்றார். 

அவரின் செயற்பாடுகள் மன்னாரில் பகுபாடான விதத்தில் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 





Read More »

வட மாகாணப் பாடசாலைகள் மோதும் கரப்பந்தாட்டத் தொடர்


வட மாகாண கல்வித் திணைக் களத்தினால் வட மாகாணப் பாடசாலை களுக்கு இடையேயான 16 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிக்கான விண்ணப்பங்களை வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற் கல்வி பிரிவினால் கோரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் இணைந்து நடத்தும் இப்போட்டிக்கான விண்ணப் பங்களை யாழ். மாவட்டப் பாடசாலை அணிகள் யாழ்ப்பாணம் கல்வி வலய உடற் கல்வி கல்விப் பணிப்பாளர் சண் தயாளனுடனோ அன்றி யாழ்ப்பாணம் கல்வி வலயம் வலயக் கல்வி அலுவலகம் நல்லூர் யாழ்ப்பாணம் என்னும் முகவரியுடனும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டப் பாடசாலை அணிகள் ஏ. எம். சுபைர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற் கல்வி வலயக் கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு வவுனியா என்னும் முகவரியுடனோ உடன் தொடர்பு கொள்ளும் படியும் வட மாகாண உடற்கல்வி பிரதிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


Read More »

மன்னாரில் நிவாரணப் பொருட்களை திருப்பி அனுப்பிய மக்கள்!

மன்னார் மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

குஞ்சுக்குளம், மாதாகிராமம் மற்றும் பெரிய முறிப்பு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாதர், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று (வியாழக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் குறித்த பொருட்களை திருப்பி ஒப்படைத்துள்ளனர். 

மன்னாரில் நிவாரணப் பொருட்களை திருப்பி அனுப்பிய மக்கள்!







மன்னார் மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட, மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவு பொருட்களில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்துடன், இவர்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திரவிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். 

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது... 

மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட குஞ்சுக்குளம், மாதாகிராமம், பெரியமுறிப்பு , கிராமங்களானது மன்னார் வவுனியா பிரதான பாதையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் ஒரு கிராமமாகும். 

குஞ்சுக்குளம் பாலமானது இக்கிராமத்திற்கான பிரதான நுளைவாயிலாக இருப்பதுடன், இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் இருக்கின்றது. 

அருவி ஆறானது பெருக்கெடுத்து ஓடும் போது இப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டு விடுகின்றது. இவ் வேளைகளில் நாம் வேப்பங்குள பாதையை பயன்படுத்துகின்றோம் . 

ஆயினும் 26 கி. மீ தூரம் கொண்ட இப்பாதையானது பாதுகாப்பற்ற காட்டு வழி பாதையாகும். இருப்பினும் வெள்ளத்தின் நீர் மட்டம் அதிகமாகும் போது இப்பாதையும் துண்டிக்கப்பட்டு விடுகின்றது. 

இதனால் இக்கிராமத்திற்கான அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் நிர்க்கதியாகி நிற்க நேரிடுகின்றது. இது இவ்வாறு இருக்க கடந்த மாதம் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கின் போது எமது கிராமம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியது. 

இதனால் கடந்த 23ம் திகதி முதல் தை மாதம் முதலாம் திகதி வரை எமது கிராமம் வெளிதொடர்புகள் அனைத்தும் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது. 

250 குடும்பங்கள் நிற்கதியாகி நின்ற அதேவேளை மருத்துவ வசதிகள் தொடர்பாடல் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழந்து நின்றதோடு ஒரு நேர உணவு கூட இன்றி பட்டினி சாவை எதிர்நோக்கி இருந்தோம். 

ஆயினும் எமக்கு எந்த வகையான உதவிகளும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்திடம் இருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடம் இருந்தோ கிடைக்கப் பெறவில்லை. 

இதற்கான காரணமும் என்ன என்று எமக்கு தெரியவில்லை. 

இது இவ்வாறு இருக்க பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு பல படகுகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டதாக பல பத்திரிகைகள் உண்மைக்கு முரணான செய்திகளை வெளியிட்டிருந்தது எமக்கு இன்னும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. 

மன்னார் மாவட்டத்தை பார்வையிட வந்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கூட குஞ்சுக்குள பிரதான பாலத்தை மட்டும் பார்வையிட்டு சென்றிருக்கின்றார். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வை இடவேண்டியவர் ஏன் பாலத்தை மட்டும் பார்வை இட்டார் என்பதும் ஓர் ஆச்சரியமாகவே இருக்கின்றது. 

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வரையில் வெள்ள அனர்தம் என்பது புதிதல்ல ஒவ்வொரு வருடமும் ஏற்படும் வெள்ளத்தால் அதிக அளவாக பாதிக்கப்படுவது எமது கிராமமாகும். இதற்கு கடந்த கால வரலாற்று பதிவுகள் சான்றாகும். 

தற்கால நிலமையும் கடந்த கால வரலாறும் இவ்வாறு இருக்க கடந்த மாதமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நாம் எமது பங்குதந்தையின் ஊடாக பலரிடமும் அவசர உதவிகளை செய்யுமாறு தொலைபேசி மூலம் கேட்டிருந்தோம் . 

இதன் பலனாக மடு உதவி அரசாங்க அதிபரின் பணிப்பினைக்கு அமைய மன்னார் மேலதிக அரசாங்க அதிபரினால் படகுகளின் மூலம் ஒரு தொகுதி உணவுப் பெருட்கள், அரிப்பு வரை அனுப்பி வைப்பதாக கூறப்பட்டது. 

நாம் 5 உழவு இயந்திரங்களின் உதவியோடு பலத்த சிரமங்களுக்கு மத்தியில் சிதைவடைந்து கிடந்த காட்டு பாதையை துப்பரவு செய்து கிட்டத்தட்ட 7 மணித்தியால பிரயாணத்தின் பின்னர் அரிப்பிற்கு சென்றோம். 

ஆயினும் அங்கும் எமக்கு ஏமாற்றமே காத்திருந்தது. 250 குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுக்குமாறு எமக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு. 

அரிசி 750 கிலோ கிராம்,பருப்பு 25 கிலோ கிராம்,மீன் ரின் 50,நெத்தலி 50 கிலோகிராம்,உருளைக்கிழங்;கு 45 கிலோ கிராம்,வெங்காயம் 30 கிலோ கிராம்,உப்பு 40 பக்கட்,செஞ்சிலுவை சங்க பொதி 30 ( துவாய் பற்பசை சவற்காரம் சம்போ போன்ற பொருட்கள்) 

நாம் எவ்வாறு இவற்றை மக்களுக்கு கொடுப்பது? இவற்றை வாங்கி தம்பட்டம் காட்டுவதை விட வாங்காமல் இருப்பது மேல் என்பது எமது மக்களின் கருத்து. 

இறுதியாக நாம் உரிய அதிகாரிகளிடம் கேட்பது என்னவென்றால் நாமும் இலங்கையின் பிரஜைகளாக இருப்பதால் பாராபட்சமற்ற முறையில் உரிய அதிகாரிகள் நிவாரண பொருட்களை பகிர வேண்டும். 

அனர்த்தம் கூடிய பிரதேசங்களுக்கு முன் உரிமை கொடுக்கப்பட வேண்டும். 

எமக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக எமக்கான போக்குவரத்து பாதைகள் மிக விரைவில் புணரமைக்கப்பட்டு பிரதான பாலத்தையும் கட்ட ஆவனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம். 

இதனால் வெறும் பிரச்சாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அதிகாரிகளினால் எமக்கு வழங்கப்பட்ட பற்றாக்குறையான உணவு பொருட்களை நாம் உங்களிடமே கையளிக்கின்றோம். 

இது பாதிக்கப்பட்ட மக்களின் தேவை கருதி எமக்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் அல்ல வெறும் அரசியல் இலாபத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொய் நாடகமாகும். 

தயவு செய்து இனி இவ்வாறான கண்துடைப்பு செயற்பாடுகளை நிறுத்தி உரிய அரச அதிகாரிகள் மக்களின் நலன் கருதி தங்கள் அரச கருமங்களை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு நிற்கின்றோம். 

உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டு ஏக்கத்தோடு வாழும் எமக்கு விடிவு கிடைக்கும் என நம்புகின்றோம். 

என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன் பிரதிகள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்,மடு உதவி அரசாங்க அதிபர்,மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்ட போது... 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராம மக்களுக்கு பாரிய கஸ்டத்தின் மத்தியில் படகுகள் மூலம் கொண்டு சென்று ஒபபடைத்தோம். 

இதன்போது பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவர்கள்,உட்பட திணைக்கள அதிகாரிகள் பல்வேறு சிறமங்களுக்கு முகம் கொடுத்தனர். குறித்த உலர் உணவுப்பொருட்கள் குறிப்பிட்ட சில தினங்களுக்கே வழங்கப்பட்டது. 

இந்த பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டமை எமக்கும் மனிதாபிமான பணியில் ஈடுபடும் சக அதிகாரிகளுக்கு மண வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த செயற்பாடுகளின் நிமித்தம் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட நடவடிக்ககை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

Read More »

மன்னார் உப்புக்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுகள்

மன்னார் உப்புக்குளம் பகுதியில் கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கழிவுகள் அகற்றப்படாமையினால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீதிவருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கழிவுகள் அகற்றப்படாது வீதியில் தேங்கிக்கிடப்பதை படங்களில் காணலாம்.





Read More »

அமைச்சர் மஹிந்த அமரவீர மன்னாருக்கு விஜயம்

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர,  அம்மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார். 

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர தேவைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,  பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 
Photos - Tamil Mirror



Read More »

மன்னார், வவுனியா: வெள்ளம் வடிகிறது


நலன்புரி நிலையங்களில் இருந்தோர் வீடு திரும்புகின்றனர்
147 தற்காலிக நிலையங்கள் மூடப்பட்டன.
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்தவர்களில் பெரும் பகுதியினர் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பி விட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி 10795 குடும்பங்களைச் சேர்ந்த 38681 பேர் 240 தற்காலிக நலன்புரி நிலையங்களில் நேற்று முன்தினம் (31ம் திகதி) காலையாகும் போது தங்கி இருந்தனர். ஆனால் நேற்று முதலாம் திகதி மாலையாகும் போது 4153 குடும்பங்களைச் சேர்ந்த 14616 பேர் 93 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கி இருந்தனர்.
இதன்படி 6642 குடும்பங்களைச் சேர்ந்த 24,065 பேர் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இதன் காரணத்தினால் 147 தற்காலிக நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
வெள்ள நீர் தொடர்ந்தும் வடிந்து வருவதுடன் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருந்தவர்களும் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தற்போது மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட் டங்களில்தான் அதிகளவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 35 நலன்புரி நிலையங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 நலன்புரி நிலையங்களிலும் இவர்கள் தங்கியுள்ளனர் என்றார்.


Read More »

40 ஆண்டுகளுக்கு பின்னர் பரீட்சை சட்டத்தில் மாற்றம்

1-depart
இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் பரீட்சைத் திணைக்கள வடடாரங்கள் தெரிவித்துள்ளன.
2013ஆம் ஆண்டில் பரீட்சை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பரீட்சை மோசடிகள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தாராதர  சாதாரண தரப்பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் பரீட்சைக்கு முன்பே வெளியாகியிருந்தது.
எனவே பரீட்சை வினாத்தாள்களை கசியவிட்ட அரச அச்சக அதிகாரிக்கு வாழ்நாள் பரீட்சைத் தடை விதிக்கப்பட உள்ளது.
மேலும் கடந்த காலங்களில் பரீட்சைகளின் மூலம் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளை ரத்து செய்வது குறித்தும் சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்க உள்ளதாக பரீட்சை ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


Read More »
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.