இலங்கையில் சிசுக்கொலைகள் அதிகரிப்பு
இலங்கையில் சிசு கொலைகள் மற்றும் கைவிடப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வவுனியா ஓமந்தை மற்றும் கொழும்பின் புறநகர் பாதுக்க ஆகிய பகுதிகளில் இரண்டு குழந்தைகளை கொலை செய்ய முற்பட்ட வேளையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இந்த தவவலை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் நேற்றையதினம் இரத்தம் தோய்ந்த உடலுடன் ஹோமாகம வைத்தியசாலைக்கு ஒருவர் வந்துள்ளார். சந்தேகம் கொண்ட வைத்தியசாலை தரப்பினர் காவற்துறையினருக்கு அறிவித்ததை தொடர்ந்து, அவரது இல்லத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மரத்தில் செய்யப்பட்ட பெட்டகம் ஒன்றில் இருந்த இறந்த நிலையில் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறான பல சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும்,இதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தெளிவூட்டல் மற்றும் உதவி பணிகள் மூலம் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
By:-yasi