பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கில் எதிரியான நபருக்கு ஆறுமாத கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.

மன்னார் பிரதேசத்தில் பயங்கரவாத செயல் பற்றி அறிந்திருந்தும் தகவல் கொடுக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் மீது வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதன்படி 01. 01. 2006 ற்கும் 22. 09. 2009 ற்கும் இடைப்பட்ட கால எல்லைக்குள் புலிகள் உறுப்பினர்கள் வெடிபொருட்களை ஏற்றிச் சென்று சேதத்தை விளைவிப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் எனத் தெரிந்திருந்தும்,

அல்லது அது குறித்த நியாயமான காரணங்களிருந்தும் அதனைப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அறிவிக்கத் தவறினார் என்றும் சந்தேக நபர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.