புதைக்கப்பட்டிருந்த 359கிலோ சீ- 4 ரக வெடிபொருட் பவுடர் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 359 கிலோகிராம் நிறையுடைய சீ- 4 ரக வெடிபொருட்கள் மற்றும் வெடிபொருள் பவுடரை வவுனியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படும் வெடிபொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் சீ- 4 ரக வெடிபொருட்கள் 30 கிலோகிராமும் அதனைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சீ- 4 ரக வெடிபொருட் பவுடர் 329 கிலோகிராமுமே கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.