யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி; வெறிச்சோடியது வளாகம்

யாழ் பல்கலைக்கழக செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கபட்ட போதும் மாணவர்களது  வருகை காணப்பட்டதனால் பல்கலைக்கழகம் வெறிச்சோடி காணப்படுகின்றது.

சுமார் நாற்பது நாட்டளுக்கு பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என துணைவேந்தருக்கும் அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவப் பிரதி நிதிகளுக்கும் இடையில்  இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய தினமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினம் வந்து சேர்வதற்கான கால அவகாசம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதனாலேயே மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இன்றைய தினம் பல்கலைக்கழக சூழலில் ஒரு சில மாணவர்களையே காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் பல்கலைக்கழகத்தினைச் சுற்றி அமைக்கப்பட்ட காவலரண்கள் காணப்படுகின்றது ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் காவற்றுறையினர் ஏற்கனவே விலக்கப்பட்டிருந்தனர்.

ஆனாலும் காவரண்கள் அமைக்கப்பட்ட இடத்திலே தொடர்ந்தும் காணப்படுவதனால் வேண்டிய நேரத்தில் மீண்டும் காவற்றுறையினர் நிறுத்தப்படுவார்களா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய சந்திப்பில் நாளைய தினம் மாணவர்கள் வருகை தராதுவிட்டால் தான் பதவியினைத் துறப்பேன் என்றும் பல்கலைக்கழகம் மூடப்படும் நிலை ஏற்படும் எனவும் துணைவேந்தர் மாணவர்களிடம் எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்காதவரை பல்கலைச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது குறித்த மாணவர்கள் தொடர்ந்தும் விடுவிக்கப்படாது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.