யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு புதிய மணிக்கூடுகள்
யாழ்ப்பாண நகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று மகாத்தமா வீதியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். 135 வருடங்கள் பழமை வாய்ந்த இம்மணிக்கூட்டுக் கோபுரம், 1875 இல் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவு கூருமுகமாக நிர்மாணிக்கப் பட்டது.
யாழ்ப்பாணத்தில் மகாத்மா வீதியில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில் புதிய மணிக்கூடுகள் பொருத்தப்பட உள்ளன. யாழ். மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இதற்கான நிதி மாநகர அபிவிருத்தி நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு உள்ளது.