உறவுகளுக்கான உதவிக்கரம்

வெள்ளிக்கிழமை முல்லைத்தீவில் ஏந்பட்ட வெள்ள அனர்த்தத்தால்பாதிக்கப்பட்ட தண்ணீர்ஊற்று கிராமத்தைச் சேர்ந்த 100 தமிழ்க்  குடும்பங்களுக்கு யாழ் இந்துக் கல்லுரியின் 2012 உயர்தரப் பிரிவு மாணவர்கள் யாழ் நகர் மைய நகர் றோட்டறக்ட் கழகத்துடன் இணைந்து அத்தியாவசியப் பொருட்களான உலர் உயவுப் பொதிகள், மருந்துப் பொருட்கள், உடைகள் மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள். யாழின் கரங்கள் – உறவுகளுக்கான உதவிக்கரம்- என பெயர் சூட்டப்பட்ட இச்செயற்திட்டத்தில் 6 தினங்களில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் பாடசாலைகள் பொது நல விரும்பிகளின் ஊடாக மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட 1.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் குமிழமுனைப் பிரதேசத்தில் தந்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ஊற்று கிராமத்தைச் சேர்ந்த 93 குடும்பங்களுக்கும் மேலும் 7 வறிய குடும்பங்களுக்கும் யாழ் இந்து மாணவர்கள் மற்றும் யாழ் நகர் மைய றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களினால் நேரடியாக மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.  இச் செயற்திட்டத்திற்கான போக்குவரத்துச் செலவு மற்றும் பாரிய நிதி உதவிகளை யாழ்ப்பாணம் சிவ குருநாத குருபீடம் வழங்கியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு குருபீடத்தின் குருபீடாதிபதியும் எமது ஏற்ப்பாட்டுக்குழு சார்பில் அன்றைய நிகழ்வுக்கான விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மேலும் இவ்வாறான செயந்திட்டங்களை முன்னெடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாக யாழ் இந்து மாணவர்கள் தெரிவித்திருந்தனர்

_DSC5518_DSC5526

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.