வவுனியா கடும் மழை மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு! (Photos)
வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன் பல குளங்கள் வான் பாய்ந்து வருவதனால் விவசாயமும் பாதிப்படைந்தள்ளது. வவுனியா பன்றிக்கெய்தகுளம் மற்றும் நாவல்குளம் என்பன உடைப்பெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஓமந்தை கமநல கேந்திர நிலையத்தின் தலைவர் க. அமிர்தலிங்கம் இதன் காரணமாக 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை வயல் நிலங்கள் நீரிழ் மூழ்கியுள்ளமையினால் இம் முறை அறுவடை மேற்கொள்ள முடியாதிருப்பதன் காரணத்தால் அனைத்து விவசாயிகளுக்கும் நஸ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டுமெனவும் இது தொடர்பில் தான் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் கமநல கேந்திர நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஆகியோரை கோரியுள்ளதாகவும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு அவர்களுடைய செலவினை ஈடுசெய்யும் முகமாக 25000 ருபாய் வீதம் செலுத்த வேண்டும் எனவும்தெரிவித்தார்.
இத்துடன் வவுனியாவில் அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் தோட்டச்செய்கை உட்பட மேட்டுநிலப்பயிhச்செய்கைகளும் பாதிப்டைநதுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் இது தொடர்பில் அதிகாரிகள் நஸ்டஈடு வழங்க கவனம் செலுத்துமாறும் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக கமநல கேந்திர நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி சரோஜினியிடம் கேட்டபோது இரு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தமது அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இரு குளப்பகுதிக்கும் சென்றுள்ளதாக தெரிவித்தார்.