முல்லைத்தீவில் முந்திரிப் பயிர்ச் செய்கை


நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முந்திரி பயிர்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினால்ட் கூரேயின் ஆதரவுடன் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமான ஒன்றுகூடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் 120 விவசாயிகள் மத்தியில், அமைச்சரால் முந்திரி செடிகள் பெரிய அளவில் விநியோகிக்கப்பட்டன. இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம் விவசாயிகளுக்கு முந்திரி பயிரிடல் பயிற்சியையும் வழங்கியது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 ஏக்கர்கள் பயிரிட திட்டங்கள் முன்னெடிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட திவி நெகும அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 11 மாதங்களில் இலங்கை முந்திரி கூட்டுத்தாபனம் முந்திரி விவசாயிகள் மத்தியில் 700,000 முந்திரிச் செடிகளை விநியோகித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், முந்திரி கூட்டுத்தாபனம் 22 மாவட்டங்களில் உள்ள முந்திரி விவசாயிகள் மத்தியில் முந்திரி செடிகளை விநியோகம் செய்தது. இவ் விவசாயிகள் ஏற்கனவே 1,000 உள்நாட்டு பொருளாதார அலகுகளை ஸ்தாபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் ஏற்கனவே 20,000 ஏக்கர்களில் பயிரிட்டுள்ளனர். நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இதற்கான நிதியை வழங்கியுள்ளது. முந்திரி கூட்டுத்தாபனம் 22 மாவட்டங்களில் உள்ள 130 பிரதேச செயலக அலுவலகங்கள் மத்தியில் அதிகலவான முந்திரிச் செடிகளை விநியோகித்துள்ளது.
அதேநேரம் 3,500 முந்திரி பயிர் உற்பத்தியாளர்கள் இணைந்து 4,000 ஏக்கர்களில் பயிர்செய்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் 6,000 ஏக்கர்களில் மேலும் 500,000 முந்திரி செடிகள் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும் முந்திரி கூட்டுத்தாபனமானது இலவசமாக முந்திரி தோட்டக்காரர்கள் மத்தியில் உயர்தர முந்திரி செடிகளையும் வழங்கியுள்ளது

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.