இயற்கையின் சீற்றத்தில் முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 2362 குடும்பங்களைச் சேர்ந்த 7796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலகப் பிரிவில் ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 3505 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலகப் பிரிவில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 972 பேரும் மாந்தை கிழக்கில் 328 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர். துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 420 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளிலும் பொதுக் கட்டடங்களிலும் அவர்
கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு குளம் நிரம்பி வழிவதுடன் பேராறும் பெருக்கெடுத்து ஓடுகிறது. ‘உடனடியாக மக்களின் பாதிப்புத் தொடர்பில் முழுமையாகக் கணக்கிட முடியாதுள்ளது. பிரதேச செயலக ரீதியாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றார் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்.
கேப்பாபிலவில் வலுக்கட்டாயமாக மீளக்குடியேற்றப்பட்ட தமிழ் மக்கள் அன்றாடக் கருமங்களைச் செய்ய முடியாமல் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். வவுனியா மெனிக்பாம் தடுப்பு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு கேப்பாபிலவு, சீனியாமோட்டைப் பகுதியில் 110 குடும்பங்கள் சிறீலங்கா இராணுவத்
தினராலும், அதிகாரிகளாலும் கட்டாயமாக மீளக்குடியமர்த்தப்பட்டனர். கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் மழையினால் இவர்களின் தற்காலிகக்குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
தினராலும், அதிகாரிகளாலும் கட்டாயமாக மீளக்குடியமர்த்தப்பட்டனர். கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்யும் மழையினால் இவர்களின் தற்காலிகக்குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
சமைக்கவோ, படுத்துறங்கவோ முடியாத நிலையில் தாம் அவதிப்படுகின்றோம் என்று அந்த மக்கள் தெரிவித்தனர். குடிசைகளுக்குள் மேலும் வெள்ளம் புகாதவாறு மண் அணைகளை அமைப்பதிலும், தேங்கியுள்ள வெள்ளத்தை அகற்றுவதிலும் நேற்று முழு நாளும் தாம் ஈடுபட்டனர் என்று அந்த மக்கள் கூறுகின்றனர்.
ஒட்டுசுட்டானில் பண்டாரவன்னி, கருவேலன் கண்டல், கற்சிலைமடு, பேராறு, கனகரத்தினபுரம் வசந்தபுரம், முத்துஐயன்கட்டு, மூத்தவிநாயகர் முதலாம் கண்டம், இரண்டாம் கண்டம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியை மூடி மூங்கிலாறு பெருக்கெடுத்து பாய்கிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவுக்கு சுற்றுலா வந்த 150ற்கும் மேற்பட்ட சிறீலங்கா வாகனங்கள் வெளியேற முடியாமல் உடையார்கட்டுப் பகுதியில் சிக்கிக்கொண்டிருந்தன. இதேவேளை, இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வடைந்துள்ளது. குளத்தின் மொத்த நீர்க்கொள்ளவு 34 அடியாக உள்ள நிலையில் குளத்துக்கான நீர் வரத்து மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தண்ணீர் வரத்து அதிகரித்தாலும் குளத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என கூறப்படுகின்றது. இரணைமடுக்குளம் உடைப்பெடுத்தால் பாரிய அழிவு ஏற்படும் என்பதால் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் கடமைக்கு அமர்த்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, இம்மாவட்டத்திலுள்ள ஏனைய குளங்களான அக்கராயன் குளம், கல்மடுக்குளம், பிரமானந்தன்குளம், புதுமுறிப்புக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகவடுவான்குளம், குடமுறுட்டி குளம் ஆகிய குளங்கள் தொடர்ந்து வான்பாய்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.