கடன் பெற்று விதைத்த நெல்லை இயற்கை காவு கொண்ட பரிதாபம்!


kilinochchi_dry_land_001
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டமையின் காரணமாக அம்மாவட்டத்தின் பெரும்பான்மையான வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன.
நேற்று (10) கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்யாவிடினும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா பிரதேசங்களில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக இரணைமடு குளம் நிறைந்து வான் கதவுகள் திறக்கப்பட்டன.
பரந்தன், முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, வட்டக்கச்சி, உமையாள்புரம், புளியம்போக்கனை ஆகிய பிரதேசங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கி முற்று முழுதாக அழிவடைந்துள்ள.
அறுவடைக்கு பதமான நிலையில் இருந்த நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்த காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரதேச விவசாயிகள் வங்கியில் கடனைப் பெற்று பயிற்ச் செய்கையில் ஈடுபட்டதன் காரணமாக, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த போகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை அழிவடைந்த காரணத்தினால் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு வழியில்லாது விவசாயிகள் பெரும் இக்கட்டான நிலைக்கு முகங் கொடுத்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.