வவுனியாவில் மேதின ஊர்வலத்தின்போது எழுப்பப்பட்ட கோசங்கள்!
இதன்போது வவுனியா நகரசபையிலிருந்து வவுனியா இந்து இளைஞர் மன்றம், மணிக்கூட்டு கோபுரம், வவுனியா காவல்நிலையம் வழியாக மீண்டும் வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடையும் வகையில் ஒரு ஊர்வலமும் நடைபெற்றது.
ஊர்வலத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களன த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி, வவுனியா நகரசபை தலைவர், வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர், வவுனியா செட்டிகுளம் பிரதேசசபை தலைவர், வவுனியா வடக்கு பிரதேசபை தலைவர், கரைச்சி பிரதேசசபை தலைவர், உபதலைவர்கள், உறுப்பினர்கள், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின் போது கலந்துகொண்டவர்களால் எழுப்பப்பட்ட கோசங்கள்
வாழவிடு வாழவிடு! எமது நிலத்தில் எம்மை வாழவிடு!
மக்களை வாட்டுவதா மகிந்தவின் சிந்தனை?
மறுக்காதே மறுக்காதே!! உரிமைகளை மறுக்காதே!
பொருளின் விலையைக் கூட்டாதே! ஏழையின் வயிற்றில் அடிக்காதே!
ஏற்றாதே ஏற்றாதே! பொருட்களின் விலையை ஏற்றாதே
உள்நாட்டுத் தம்பட்டம்! வாய்க்காது வெளிநாட்டில்!
நிரந்தரமாக்கு! நிரந்தரமாக்கு!! சுகாதாரத் தொண்டரை நிரந்தரமாக்கு! நிரந்தரமாக்கு!!
இடிக்காதே இடிக்காதே! மதத்தலங்களை இடிக்காதே!!
பெண்கள் என்ன கடைச்சரக்கா? காடைத்தனத்தின் பலிகடாவா?
திணிக்காதே திணிக்காதே! எழுதாத சட்டங்களை திணிக்காதே! திணிக்காதே!!
நுழைக்காதே! நுழைக்காதே!! வேலைவாய்ப்பில் அரசியலை நுழைக்காதே நுழைக்காதே
சுரண்டாதே சுரண்டாதே! எங்கள் வளத்தைச் சுரண்டாதே!!
கொள்ளையிடாதே! கொள்ளையிடாதே! கருங்கல் கிரவலைக் கொள்ளையிடாதே!
கண்டுபிடி கண்டுபிடி! காணாமல் போனோரைக் கண்டுபிடி
விடுதலை செய் விடுதலை செய்! எம் உறவுகளை விடுதலை செய்
கொள்ளையடிக்காதே கொள்ளையடிக்காதே! ஆயுதமுனையில் கொள்ளையடிக்காதே
நாடுகடத்தாதே நாடுகடத்தாதே! அறிவியலாளர்களை நாடுகடத்தாதே
துப்பாக்கிக் காவலில் கால்நடையா? மக்களின் கைகளில் திருவோடா?
நிறுத்திவிடு நிறுத்திவிடு! சர்வாதிகாரத்தை நிறுத்திவிடு
தீர்வைக்கொடு தீர்வைக்கொடு! அரசியல் தீர்வை உடனே கொடு
புத்திகெட்டவர் நாமல்ல! புத்திமதி நீ சொல்ல
பசியும் பட்டினியும் எமக்கு! உனக்கு மட்டும் பஞ்சணையா?
ஊர்வலத்தின்போது பிடித்துச்செல்லப்பட்ட பதாகைகளில் எழுதப்பட்டிருந்த சுலோகங்கள்
1. சுகாதாரத் தொண்டரை நிரந்தரமாக்கு
2. கல்வி எங்கள் மூலதனம் அதில் கத்திவைக்க நினைக்காதே
3. கல்விக்கு நாளேது கட்டப்படுத்துவதால் அம்மைக்கு ஏது பயன்?
4. பொருட்களின் விலையைக் கூட்டாதே ஏழையின் வயிற்றில் அடிக்காதே
5. ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே இனம் ஒரே மதம் அதுவே சிங்களம், பௌத்தம்
6. ஆசியாவின் ஆச்சரியம் நாளைய சோமாலியா?
7. பாண் என்ன பணக்காரவீட்டு பீசாவா?
8. மக்களை வாட்டுவதா? மகிந்தவின் சிந்தனை
9. அற்ப சலுகைகளை வழங்கி எமது உரிமைகளைப் பறிக்க நினைக்காதே
10. இன்றைய தொழில்வாய்ப்புச் சமன்பாடு பணம் + சிபாரிசு ஸ்ரீ பதவி
11. எச்சில் இலைக்கு ஆசைப்பட்டு எம்மினத்தை விலைபேசாதே
12. பிறமத அழிப்பா மகிந்த சிந்தனை தன்மத வளர்ப்பே மகிந்த சிந்தனை
13. விலை உயர்வில் கோதுமை மா என்ன ஹெரோயின் பவுடரா?
14. உள்நாட்டுத் தம்பட்டம் வாய்க்காது வெளிநாட்டில்
15. கல்வியைப் பறிக்கும் கயவனே நீயும் முன்னொருநாள் ஆசான்தானே?
16. விலையேற்றப் போட்டியில் இலங்கை முதலாமிடம்
17. மீள்குடியேர்க்கு வாழ்வாதாரத்தை வழங்கு
18. நல்லிணக்கம் மனிதஉரிமை பேண்
19. அதிகாரிகளே மக்களை மதி! மனிதாபிமானம் பேண்
20. அதிகாரிகளே கல்வி நிலையங்களில் கைவையாதே
21. பிரதேச சிறுவியபாரிகளை வாழவிடு
22. சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தாதே
23. வேலையற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பளி
24. தகரக்கொட்டகை வாழ்விற்கு முடிவுகாண்
25. அபிவிருத்தியின் பெயரில் எமது நிலங்களைச் சுரண்டாதே
26. பெண் தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே
27. காணிநிலம் வேண்டும்
28. பூர்வீக கிராமங்களில் வாழவிடு
29. உள்ளுர் ஒப்பந்தக் காரர்களிடமே பணிகளை ஒப்படை
30. தமிழ் மக்களுக்கு ஏற்புடைய அரசியல் தீர்வை ஏற்படுத்து
31. மக்கள் மீதான பாலியல் வன்முறைகளை உடன் நிறுத்து
32. பெண்களை நுகர்வுப் பண்டமாக்காதே
33. விவசாயக் காணிகளை மீளளி
34. பாடசாலைகளைக் கல்விச்செயற்பாட்டிற்கு வழங்கு
35. பல்லின கலாசாரத்தை வாழவிடு
36. வேலைவாய்ப்பில் அமைச்சர்களின் தலையீட்டை நிறுத்து
37. கிராமப்பொது அமைப்புக்களைச் சுயாதீனமாக இயங்கவிடு.
By:-yasikanth