வவுனியா மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வு


வவுனியா மாவட்ட சர்வோதய நிலையத்தின் மலேரியா விழிப்புனர்வு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 2013ம் ஆண்டு ஐந்தாம் தரத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், நாட்காட்டிகள், நேரசூசி அட்டவணை, போன்றவை மலேரியாவிழிப்புனர்வு நிழல் படங்கள் மற்றும் விழிப்புனர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ள அப்பியாச கொப்பிகள் அடங்கிய பொதிகள் இன்று 13.02.2013ம் திகதி காலை 10.00 மணிக்கு  வவுனியா மாவட்ட சர்வோதய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வவுனியாமாவட்ட சர்வோதய இணைப்பாளர் ள.உதயகுமாரன் மற்றும் சர்வோதய குடும்பநல உத்தியோகத்தர் ஆனந், அத்துடன் இத்திட்டத்திற்கு பெறுப்பான சர்வோதய சக ஊழியர்கள் உட்பட  வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர், மற்றும் வ.மகாறம்பைக்குளம் அரசினர்தமிழ்க்கலவன் பாடசாலை, வஃஅற்றம்பகஸ்கடவித்தியாலயம், வஃகல்நாட்டினகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, வ.சிதம்பரபுரம் ஸ்ரீராகராஜா வித்தியாலயம், வ.சிவபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, வ.மதீனாவித்தியாலயம், வ.கற்பகபுரம் அரசினர்தமிழ்க்கலவன் பாடசாலை, வ.மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, வ.மூன்றுமுறிப்பு அரசினர் சிங்கள கலவன் பாடசாலை, ஆகிய பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர். இன்நிகழ்வில் மலேரியா விழிப்புனர்வு கலந்துரையாடல்கள் இடம் பெற்றது மலேரியா விழிப்புனர்வை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட முயற்சியாக பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் மற்றும் நேரசூசிகளும் வருகைதந்த பாடசாலை அதிபர்களின் கடங்களில் வழங்கப்பட்டது.
1 2 3 4 6 7 9 10

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.