வவுனியா த.ம.வி. மாணவர்கள் 171 பேர் பல்கலைக்கு தகுதி




வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் வெளியாகிய உர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல், கணிதம், வர்த்தக பிரிவுகளில் மாவட்ட ரீதியில் முதலாமிடங்களை பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் பத்மநாதன் தெரிவித்தார்.

பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப்பிரிவில் பாக்கியகுமாரன் அருண்குமார் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று தேசிய மட்டத்தில் 21 ஆவது இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

அவருடன், தனபாலசிங்கம் தர்சன் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கடந்த மாவட்டத்தில் கணித பிரிவில் முதல் 10 இடங்களில் 3 ஆம் இடம் தவிர்ந்த ஏனைய ஒன்பது இடங்களையும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பெற்றுள்ளனர்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் சிவசுப்பிரமணியம் பவித்திரன் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று தேசிய மட்டத்தில் 19 ஆவது இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளதுடன் குகதாசன் கானப்பிரசன்னா மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் செல்வி ஜெயக்குமார் நிவேதிகா ஏ 2பி பெற்று மாவட்டத்தில் மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை வர்த்தக பிரிவில் அரியநாதன் பிரசனாத் மூன்று ஏ சித்திகளை பெற்று தேசிய மட்டத்தில் 258 ஆவது இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்றுள்ளதுடன் ஜெகதீஸ்வரன் நெல்சன் மூன்று ஏ சித்திகளையும் மூன்றாமிடத்தினையும் பெருமாள் குறளரசன் 3ஏ சித்திகளை பெற்று 4 இடங்களையும்,

ஆங்கில மொழி மூல வர்த்தக பிரிவில் விவேகானந்தராசா கிரிசாந்தன் மூன்று ஏ சித்திகளை பெற்று மாவட்டத்தில் 7 ஆம் இடத்தினையும் கஜேந்திரன் சர்மிளன், லோகநாதன் சாள்ஸ் சுபாஸ்கர், மகேந்திரராசா சங்கீத், யோசப் கமில்டன் ஆகியோர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளதுடன் வசந்தகுமார் குமணன், யோகேஸ்வரன் நிசாந்தன், சிவலோகநாதன் சிவதர்சன் ஆகியோர் 2ஏ, 1பி சித்திகளை பெற்றுள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து 2012 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி முதல் தடவையாக தோற்றிய 219 மாணவர்களில் 132 பேரும் இடண்டாவது தடவையாக தோற்றிய 72 பேரில் 39 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.