ரிஸானா மரணத்தால் வதந்தி..!
ரிஸானாவின் மரணச் செய்தி கேட்டு தந்தை நபீக் மாரடைப்பினால் மரணித்துவிட்டதாக வதந்தி ஒன்று நாடு முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்த நிலையிலேயே நான் அவரைச் சந்தித்தேன்.
மூதூர் ஷாபி நகரிலுள்ள ரிஸானா நபீக்கின் குடிசையைச் சென்றடைந்தபோது சனிக்கிழமை மாலை 3 மணியையும் தாண்டியிருந்தது.
குடிசையைச் சூழ பெருங் கூட்டம். மௌனம் குடிகொண்டிருந்த அந்த வளவில் கரை புரண்டோடிய கண்ணீர் வெள்ளத்தினால் ரிஸானாவின் குடிசையே கரைந்துவிடும் போலிருந்தது.
குடிசைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த சிறு கொட்டில் ஒன்றின்கீழ் போடப்பட்டிருந்த சாக்குக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார் ரிஸானாவின் தந்தை முகம்மது நபீக்.
மகளின் மறைவினால் மூன்று நாட்களாக தூக்கத்தைத் தொலைத்திருந்த அவர் அப்போதுதான் சற்று கண்ணயர்ந்து தூங்குவதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அவர் கண்விழிக்கும் வரை அங்கேயே காத்திருந்தேன்.
"ரிஸானா கடும் பயந்த சுபாவம் கொண்டவ. ஸ்கூலில் கூட யாரும் அடிச்சா அவ திருப்பி அடிக்கமாட்டா. கை நீட்டமாட்டா. ஊட்ட வந்துதான் சொல்லுவா.. அவ ஒரு அமைதியான புள்ள.
குடும்பக் கஷ்டத்தாலயும் தம்பி தங்கச்சிமார படிக்க வைக்கணும் என்டும்தான் அவ சவூதிக்கு போனா... அந்த நேரத்துல என்னால தொழிலுக்குப் போக ஏலாத நிலை...அங்கால புலிப் பிரச்சின....இங்கால ஆமிப் பிரச்சின....
அல்லாஹ்தான் அவவ தந்தான்..இப்ப அவனே அவவ எடுத்துக்கிட்டான்...."
இதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.... சுருக்கமாகக் கதைத்துவிட்டு மீண்டும் கண்ணயர்கிறார்.
***
ரிஸானாவின் தாயாரைச் சந்திப்பதற்காக பல மணி நேரம் காத்திருந்தேன். ஆறுதல் சொல்வதற்காக வந்திருந்த பெண்களால் நிறைந்திருந்தது அந்தச் சிறு குடிசை. அவர்கள் ரிஸானாவின் தாயாரைக் கட்டிப்பிடித்து கதறியழுது கொண்டிருந்தார்கள். அழுகுரல்களைத் தவிர வேறு எந்த சப்தமும் அங்கிருந்து வெளிவரவில்லை.
போர்வை ஒன்றினால் போர்த்தியபடி ரிஸானாவின் தாயார் பரீனா நடுவில் அமர்ந்திருக்க அவருக்கு வலப் புறமாகவும் இடப் புறமாகவும் ரிஸானாவின் சகோதரிகள் அமர்ந்திருந்தார்கள்.
ரிஸானாவின் தாயார் பேசத் தொடங்கினார்...இல்லை இல்லை அழத் தொடங்கினார்.
அவர் சொல்வதைக் கேளுங்கள்....
" என்ட புள்ளய இழந்துபோட்டு நான் படுறபாடு எனக்கு மட்டும்தான் தெரியும்.
ஒன்பதாம் ஆண்டு வரயும் படிச்சிப்போட்டு உம்மா இதுக்கு மேல என்னால படிக்க ஏலா..நான் வெளிநாட்டுக்கு போய் காசு அனுப்பி தம்பி தங்கச்சிமார படிக்க வைக்கன் என்டு சொன்னா...
எங்கட குடும்ப கஷ்டம் அப்படி....புலிப்பிரச்சினையால வாப்பாக்கு ஒழுங்கான தொழில் இல்ல... ஒருநாள் திண்டா அடுத்த நாளைக்கு திங்க ஏலா..இந்த நிலமையினாலதான் நாங்களும் அவவ அனுப்பி வைச்சம்.
அவ எந்தக் காரணம் கொண்டும் இந்தக் குற்றத்த செய்யமாட்டா என்டு நான் சத்தியம் பண்ணுவன்.
''உம்மா நான் அந்தப் புள்ளய கொலை செய்யலம்மா.... செய்யாத குற்றத்துக்கு ஏன் உம்மா நான் தண்டனை அனுபவிக்கனும்-?'' என்டு கேட்டா.... அந்தக் கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியல...
ஏழரை வருஷமா கல்லை விழுங்கிக்கிட்டு கக்க முடியாதளவு என்ட புள்ளக்காக ஏங்கியிருக்கன்... ராத்தா எப்பம்மா வருமா என்டு என்ட புள்ளயல் கேட்குதுகள்.... அதுக்கு நான் என்ன பதில் சொல்லுவன்...?
ஜனாதிபதியே நீங்க ஒரு சரியான ஜனாதிபதியா இருந்தால் இந்த நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளையையும் சவூதிக்கு அனுப்பக் கூடா. உங்களக் கெஞ்சிக் கேட்கிறேன். என்ட புள்ள ரிஸானாக்கு வந்த நிலை வேற யாருக்கும் வந்துடக் கூடா. குப்பை கொட்டினாலும் பரவால்ல.... இந்த நாட்டுக்குள்ளயே புளப்புக்கு ஏதாவது செஞ்சி கொடுங்க...
என்ட புள்ளய தன்ட புள்ள போல கேட்டு சவூதிக்கு கடிதம் அனுப்பின ஜனாதிபதிக்கு நான் நன்றி சொல்றன். லலித் கொத்தலாவல சேர் என்ட புள்ளக்காக அவருட காச செலவழிச்சாரு.. அவருக்கு நன்றி சொல்றன்.... டொக்டர் கிபாயா, மஹ்ரூப் சேர், என்ட புள்ளைக்காக கஷ்டப்பட்ட எல்லாருக்கும் நன்றி சொல்றேன்.
இலங்கையில எனக்குத் தெரியாத அத்தன பேரயும் என்ட புள்ள சவூதியில இருந்துக்குட்டு எனக்குக் காட்டித்தந்திருக்கா... ஜெயிலுக்குள்ள இருந்துக்கிட்டே அவ என்ன உம்றாவுக்கு எடுத்திருக்கா....
ஜெயில்ல போய் நான் அவவ சந்திச்சேன்.... அவவ பிரிஞ்சி வரும்போது ஏன் உம்மா என்ன விட்டுட்டுப் போரீங்க... எப்ப உம்மா என்ன கூட்டிட்டுப் போவீங்க என்டு கேட்டா...
கடைசியா டிசம்பர் 12 ஆம் தேதி அவ என்னோட போன்ல பேசினா... ''உம்மா எப்ப உம்மா உங்க கையால ஆக்கின சோற நம்ம குடில்ல இருந்து சாப்பிடுறது....? நீங்க, வாப்பா, தம்பி, தங்கச்சிமார் எல்லாரோடயும் ஒன்டா இருந்து சோறு திங்கனும்போல இருக்கும்மா'' என்டு சொன்னா.... அந்த ஆசை நிறைவேறாமலேயே என்ட புள்ள போயிட்டாளே...
என்ட புள்ள இன்னும் உயிரோட இருக்கு என்டு நான் நம்புறன்....அல்லாஹ் என்ட புள்ளயத் தருவான்.... இந்த மாசம் என்ட புள்ள எனக்கு கோல் எடுக்கும்... அந்தக் கோல் வராட்டித்தான் நான் என்ட புள்ள மௌத்தாப் போயிட்டன்டு நம்புவன்...அதுவரைக்கும் நான் நம்பமாட்டேன்..
சவூதிக்காரன் ஏன் எனக்குட்ட சொல்லாம என்ட புள்ளய கொன்டான்...?
ரிஸானாக்கு மரண தண்டனை என்டு போன்ல மெசேஜ் வந்துச்சி..அதயும் நான் நம்ப இல்ல... அரசாங்கத்துக்குக் கூட அவன் இன்னும் அறிவிக்கல்ல..ஏன் அவன் அப்படிச் செஞ்சான் என்டு கேட்கிறேன்.... சவூதிக்காரன் பதில் சொல்லட்டும் என்டுதான் காத்திட்டிருக்கிறேன்...அதுக்கப்புறம் நான் அவனுக்கு பதில் சொல்லுவன்...பாருங்க...
முழு நாடுமே எண்ட புள்ளக்காக துஆ செய்திச்சி....எல்லாருக்கும் நான் நன்றி சொல்றேன்...
ஏழரை வருசமா அவள் என்ட புள்ளய மன்னிக்கல்ல... என்ட புள்ள குற்றம் செஞ்சாத்தான அவள் மன்னிக்கனும்...என்ட புள்ள குற்றம் செய்யலயே....
அவள் என்ட புள்ளய மன்னிக்காட்டியும் நான் அவள மன்னிக்கன்...!
***
ரிஸானாவின் தம்பி ரிப்கான். வயது 21. துக்கம் தாளாது ஆங்காங்கே அலைந்து திரிந்து கொண்டிருந்த ரிப்கானை ஒருவாறு தேடிப்பிடித்தேன். தனது தந்தைக்குச் சொந்தமான வண்டில் மாடுகளுக்கு வைக்கோல் போட்டுக் கொண்டிருந்தார். அழுதழுது அவரது கண்கள் வீங்கிப் போயிருந்தன. சகோதரியின் மரணச் செய்தி கேட்ட கணம் முதல் ஒழுங்காகச் சாப்பிட்டிருக்கவில்லை என்பதை அவரது உடல் நிலை காட்டியது.
"ரெண்டு நாளா மாடுகளுக்கு ஒழுங்கா சாப்பாடு போடல... அதான் வைக்கோலும் தண்ணியும் வைக்கலாம் என்டு வந்தேன்" என்றார்.
தாம் பசியால் வாடினாலும் மாடுகளுக்கு பசி வந்துவிடக் கூடாது எனக் கருதும் இரக்க குணம் கொண்ட குடும்பத்தில் பிறந்த ரிஸானாவா நான்கு மாத பச்சிளம் குழந்தையைக் கொலை செய்திருப்பாள்?
ரிஸானாவின் குடும்பத்துக்கு வருமானம் தேடிக் கொடுப்பது அந்த இரண்டு வண்டில் மாடுகளும்தான். இப்போது அந்த மாடுகளும் சோர்விழந்து கிடக்கின்றன ரிஸானாவின் இழப்பால்!
***
ரிஸானா ஏன் வெளிநாடு போனாள் என்பதற்கு அவளது குடிசை மட்டுமே சாட்சி சொல்லப் போதுமானது.
ரிஸானாவின் குடிசை அமைந்திருப்பது ஷாபி நகரின் எல்லையிலாகும். அவர்களது குடிசையை ஒட்டினாற் போல் ஒரு பொலிஸ் காவலரண் அமைந்திருக்கிறது. தற்போது அந்த முகாம் அகற்றப்பட்டுவிட்டாலும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் குறித்த முகாம் மீது விடுதலைப் புலிகள் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம்.
குடிசையைத் துளைத்துக் கொண்டு ஊடுருவும் துப்பாக்கிச் சன்னங்கள் ரிஸானா குடும்பத்தினரின் உயிர்களை எந்தவொரு நேரத்திலும் பதம் பார்க்கலாம் எனும் அச்சம் அவர்களுக்கு இல்லாமலா இருக்கும்? அதனால்தான் ஆறு பேரைக் கொண்ட தனது குடும்பம் பாதுகாப்பாக உயிர்வாழ கற்களால் கட்டப்பட்ட ஒரு வீடு வேண்டும் என ரிஸானா சிந்தித்திருக்கிறாள்.
ரிஸானாவின் தந்தை காடுகளுக்குச் சென்று விறகுகள் சேகரித்து வருவதையே தனது தொழிலாகக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு புறம் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலாலும் மறுபுறம் இராணுவத்தினர் தொழிலுக்குச் செல்ல தடை விதித்ததாலும் அவரால் குடும்ப வண்டியை ஓட்ட முடியவில்லை. இதனால்தான் வருமானத்திற்கு வழி தேடி ரிஸானா சவூதி அரேபியாவை தெரிவு செய்தாள் என்கிறார் ரிஸானாவின் உறவினரான முஜீப்.
***
ரிஸானாவுக்காக அனுதாபப்படும் பலரும் அவளது குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்குமிருந்து அழைப்புகள் வந்த வண்ணமிருக்கின்றன. உங்களுக்கு என்ன வேண்டும்? எவ்வளவு பணம் வேண்டும்? வீடு கட்டித் தருகிறோம்.... பிள்ளைகளைப் படிப்பிக்க உதவி செய்கிறோம்.... வேலைவாய்ப்புத் தருகிறோம்....
ஆனால் அனைத்தையும் நிராகரித்துக் கொண்டிருக்கிறார் ரிஸானாவின் தாய். பிள்ளையின் பெயரால் நாங்கள் சொகுசாக வாழ விரும்பவில்லை. இந்தக் குடிசைக்குள்ளேயே ரிஸானாவின் நினைவுகளோடு செத்துப் போக விரும்புகிறேன் என்கிறார் அவர்.
ஆனாலும் மூதூர் பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி கேர்ணல் விகும் லியனகே உடனடியாகவே செயலில் இறங்கிவிட்டார். ரிஸானாவின் குடும்பத்திற்கென வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை அவர் தொடக்கி வைத்திருக்கிறார்.
ரிஸானாவின் குடிசையிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வளவில் வீட்டுக்கு அத்திவாரம் இடுவதற்கான வேலைகளில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. வீடு கட்டத் தேவையாக கற்கள், மண் என்பனவும் அங்கு கொட்டப்பட்டிருக்கின்றன. கூடியவிரைவில் வீட்டை நிர்மாணித்துத் தருவதாக அவர் உறுதியளித்திருக்கிறார்.
இதற்கிடையில் ஜனாதிபதி ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளதாகவும் சவூதி தனவந்தர் ஒருவர் வீடு கட்டப்போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன. இவற்றில் எவை நடந்தேறப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க அரசியல்வாதியும் ரிஸானாவின் குடிசைக்கு விஜயம் செய்யவில்லை. ஆறுதல் கூறவரவில்லை. ஆனால் அறிக்கைகளால் மட்டும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து எமது பிள்ளையின் பெயரால் அரசியல் நடத்தாதீர்கள் என மனமுருகிக் கேட்கிறார் ரிஸானாவின் தாயாரின் சகோதரரான லரீப்.
இதற்கிடையில் ரிஸானாவின் குடும்பத்திற்காக கிடைக்கப்பெறும் உதவிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது பற்றி மூதூர் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ரிஸானாவில் ஞாபகார்த்தமாக ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலமாக ரிஸானாவின் குடும்பத்தைப் பராமரிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது என்கிறார் ரிஸானாவுக்கு கற்பித்த ஆசிரியரும் அக் குடும்பத்தின் நலனுக்காக கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருபவருமான ஜிஹாத் சேர்.
***
ரிஸானாவின் மரணச் செய்தி கேட்டு அந்தக் குடிசையை நோக்கி மக்கள் அலை அலையாகத் திரண்டு கொண்டிருக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி மட்டக்களப்பு, அம்பாறை, இரத்தினபுரி, கொழும்பு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அங்கு வந்திருந்தார்கள். இனம், மதம், மொழி வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ரிஸானாவுக்காக மட்டுமே ஒன்றுகூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது. எல்லோரும் பேச வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஆனால் பேச முடியவில்லை. துக்கம் அவர்களது நெஞ்சை அடைத்திருந்ததால் கண்ணீரால் மட்டுமே அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
***
இதற்கு மேல் அங்கு நின்று அழுவதற்கு என்னிடமும் கண்ணீர் இல்லை. நேரமும் இரவு 8 மணியாகியிருந்தது. ரிஸானாவின் குடிசையிலிருந்து விடைபெறுகிறேன். கடைசியாக ரிஸானாவின் உம்மாவிடம் ஒரு கேள்வி.
" உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?
"ம்.... ரிஸானா வேண்டும்'
கொடுக்க முடியுமா எங்களால்?
நன்றி - Tamil2FM