ஆபத்தில் சிக்கும் பெண்கள் தகவல் தெரிவிக்க 500 ரூபாவில் நவீன கைக்கடிகாரம்
ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் அவசர உதவி கேட்டு தகவல் தெரிவிப்பதற்காக, 500 ரூபாவில் நவீன கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவம் நடந்த பிறகு மத்திய மாநில அரசுகள் பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வர முயற்சிக்கின்றன. இந்த வரிசையில் தனியாக செல்லும் பெண்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டால், உடனடியாக அவசர உதவி கேட்டு தகவல் அனுப்பும் வசதி கொண்ட நவீன கைக்கடிகாரம் தயாரிப்பதற்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கபில்சிபல் கருத்து தெரிவிக்கையில்
அனைவரும் எளிதில் வாங்கும் படியான வகையில் 500 ரூபாய் விலையில், இந்த கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்படும். பாதிக்கப்பட்ட அந்த பெண் எந்த இடத்தில் இ ருந்து தகவல் அனுப்புகிறார் என்பதையும் துல்லியமாகத் தெரிந்து கொண்டு, சிக்கலில் இருக்கும் பெண்ணுக்கு விரைந்து சென்று பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வசதி இதில் உண்டு. மேலும் கேமரா வசதி, மற்றும் 30 நிமிடங்கள் வரை பேசும் தகவலை பதிவு செய்யும் படியான வசதியும் பெண்களின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த கைக்கடிகாரம் விற்பனைக்கு வரும் என கூறினார்.