வவுனியாவில் வெள்ளத்தால்; 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை பாதிப்பு
வவுனியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஏற்பட்ட வெள்ளத்தால் 8 கமநல சேவைகள் பிரிவுகளில் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்செய்கை பாதிப்டைந்துள்ளது. அத்துடன், மேட்டுநிலப் பயிர்ச்செய்கைகளும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் செயலாளர் தெரிவித்தார்.
நெற்செய்கை நிலங்கள் பகுதியளவிலும் மொத்தமாகவும் பாதிப்படைந்துள்ளமையால் விவசாயிகள் பெரும் இழப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, விவசாயிகளின் எதிர்கால தொழில் முயற்சிக்கு அரசங்கத்தால் முழுமையான நிவாரணங்களை வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தினூடாக எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.