பாத்தீனியம் களையினால் வவுனியா விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் விவசாய நிலங்கள் உட்பட பல பிரதேசங்களையும் ஆட்கொண்டிருக்கும் பாத்தீனியம் களையின் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாய திணைக்களத்தினால் பாத்தீனியம் களையானது நெற்செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதனை வயல் பிரதேசத்தில் கண்டவுடன் அழிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அது ஓர் நச்சுத்தன்மை கொண்டது என்றும் கூறப்பட்டதனால் நாம் எமது விவசாய நிலங்களில் இவ்வாறான களைகளை கண்டால் உடன் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். 

எனினும் தொடர்ச்சியாக இந்த களை வளர்வதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் விரிவாக்கற் பிரிவு பிரதி பணிப்பாளர் சகிலா பாணுவிடம் கேட்டபோது,

"இந்த களையானது எமது நாட்டில் உருவானதன்று. வேறு நாட்டில் இருந்து அங்கு கொண்டுவரப்ட்டுள்ளது. எனினும் எமது நாட்டில் இது வளாவதற்கு ஏதுவான சூழல் காணப்படுவதனாலும் அதற்கு எதிரான சக்திகள் இன்மையாலும் அவை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

இப்பயிரானது செவ்வந்தி இன வாக்கத்தை சேர்ந்ததாக காணப்படுவதுடன் இத்தாவரத்தின் விதையானது 10 முதல் 15 வருடங்கள் உறங்கு நிலையில் காணப்படும் என்பதனால் இன்று எமது சூழலில் காணப்படும் பாத்தீனியத்தை அழிப்பதற்கு 10 தொடக்கம் 15 வருடங்கள் உழைக்க வேண்டியுள்ளது. 

அத்துடன் ஒரு பூவில் 15 ஆயிரம் விதைகள் உற்பத்தியாகும் என்பதனால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டியிருக்கும். எனினும் இத் தாவரத்தை பயிரிட்டால் அல்லது அழிக்கத்தவறினால் ஒரு இலட்சம் ரூபா வரை தண்டப்பணமும 6 மாத காலம் வரையிலான சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டி வரும்" என்றார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.