புனர்வாழ்வுக்காக தடுத்துவைக்கப்பட்ட மாணவர்களில் இருவர் வவுனியாவில் விடுதலை


Jaff Uni students_CI (1)
இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதாகி, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் சொலமன் மற்றும் மாணவ ஒன்றியத்தின் தலைவர் பவானந்தன் ஆகியோரே விடுதலை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இன்று விடுதலையாகி யிருப்பதாக கூறப்படும் இந்த மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்களையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பல்கலைக்கழக இம்மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் புனர்வாழ்வுக்காக வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தனர்.
இவர்கள் 45 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையிலே இன்று விடுவிக்கப்பட்டனர் என புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டார்.
குறித்த மாணவர்களின் பெற்றோர்களும், யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி வேல்நம்பி ஆகியோரும் விடுதலை செய்யப்பட்ட மாணவர்களை பொறுப்பேற்க வவுனியா சென்றுள்ளனர்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.