பொது அமைப்புக்களின் கேள்விகளுக்கு வவுனியா நகர சபை நாளைமறுதினம் பதிலளிக்கும்


பொது அமைப்புக்களின் வேண்டுகோள்கள்,சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் தொடர்பில் நாளை மறுதினம் விளக்கமளிக்கப்படும் என வவுனியா நகர சபை அறிவித்துள்ளது.
 
வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் தொடர்பாக பொது அமைப்புக்கள் இணைந்து நகரசபைத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தன.
 
அந்தக் கடிதத்தில், 
 
நகரப்பகுதியில் கழிவு அகற்றப்படாமை, வீதிகள் உரியமுறையில் செப்பனிடப்படாமை, பல கோடி ரூபா செலவில் அரமக்கப்பட்ட மின்சார மயானம் திறக்கப்படாமை, இந்திய அரசினால் வளங்கப்பட்ட 3 பஸ்களின் சேவை, வரி அறவீடு போன்ற பல்வேறு விடயங்களுக்கு வவுனியா நகர சபை உரிய வகையில் பதிலளிக்கவேண்டும் என  24 பொது அமைப்புக்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
 
இந்த கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிடின் எதிர் வரும் 24ஆம் திகதி நகரசபைக்கு எதிராகப் போரட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாகவும், இக்கடிதத்தின் பிரதியொன்றை பிராந்திய உள்ளூரட்சி ஆணையாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. 
 
இந்த நிலையில் பொது அமைப்புக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தொடர்பில் நகர சபை உறுப்பினர்கள் இன்று கூடி ஆராய்த்துள்ளனர். இதன்போது நாளை மறுதினம் பொது அமைப்புக்களுக்கு பதிலளிப்பது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.