கொழும்பிலிருந்த வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மாதம்பை பகுதியில் வெள்ளநீரி்ல் இழுத்துச் செல்லப்பட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக புத்தளம் –கொழும்பு வீதியில் சிலாபம் ஜயபிம, மற்றும் மாதம்பை பகுதிகளின் ஊடக செல்லும் அனைத்து போக்குவரத்துக்களும் தடைபட்டுள்ளன.
இன்று (19.12.12)காலை கொழும்பிலிருந்த வவுனியா நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மாதம்பை பகுதியில் வெள்ள நீரி்ல் இழுத்துச் செல்லப்பட்டு பாதையினைவிட்டு வயல் பகுதியில் புதையுண்ட நிலையில் அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் பஸ்ஸிலிருந்த பயணிகளை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனனர்.

இதே வேளை வெள்ளப் பெருக்கால் பல பிரதேசங்களிலும் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதன் மூலம் இடம் பெயர்ந்த மக்கள் பொது கட்டிடங்கள்,மற்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.