கிளிநொச்சியில் வாழும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை


இரணைமடு குளத்தில் இருந்து 11 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்ட நிலையில் ஏராளமன நீர் குளத்தை விட்டு வெளியேறுகின்றது. ஏனவே கிளிநொச்சி மாட்டத்தில் தாழ்நிலங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் தற்போது 34 அடியினையும் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நீர்மட்டமானது குளத்தின் ஆபத்தான கட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
கடந்த 7 வருடங்களில் இவ்வாறான ஒரு நீர் மட்டத்தினை இரணைமடுக்குளம் கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு 34 அடி 7 அங்குலம் நீர் மட்டம வந்திருந்தது. ஆயினும் இவ்வருடம் அதனையும் தாண்டி 34 அடி 8 அங்குலம் வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
 
இதனால் வான் கதவுகளையும் மேவி குளம் வான் பாய்ந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுமட்டுமல்லால் குளத்தில் இருந்து 11 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்ட நிலையில் ஏராளமன நீர் குளத்தை விட்டு வெளியேறுகின்றது.
 
ஏனவே கிளிநொச்சி மாட்டத்தில் தாழ்நிலங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்ட்டு தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
இடைவிடாது தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இரணைமடுக்கு குளத்திற்குள் ஒரு செக்கனுக்கு 26 ஆயிரத்து 176 கனஅடி நீர் உட்புகந்து கொண்டு உள்ளது. துறந்து விடப்பட்டுள்ள 11 வான் கதவுகளின் ஊடாக ஒரு செக்கனுக்கு ஆயிரத்து 479 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டுக் கொண்டு உள்ளது. இதனால் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துச் செல்கின்றது.
 
இதே போன்று கிளிநொச்சி மாட்டத்தில் உள்ள ஏனைய குளங்களும் வான் பாயத் தொடங்கியுள்ளது.
அக்கராயன் குளம் 25 அடியும் 6 அங்குலமுமாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஒரு அடி 6 அங்குலம் வான் பாய்கின்றது. அதே போன்று கல்மடுக்குளம் 25 அடி ஒரு அங்குலம் நீர் மட்டம். ஒரு அடி ஒரு அங்குலம் வான் பாய்கின்றது. பிரமந்தனாறு 13 அடி ஒரு அங்குலம் நீர் மட்டம். ஒரு அடி வான் பாய்கின்றது. புதுமுறிப்புக் குளம் 17 அடி 2 அங்குலம் நீர் மட்டம். 8 அங்குலம் வான் பாய்கின்றது. கனகாம்பிகைக் குளம் 10 அடி 4 அங்குலம் நீர் மட்டம். 4 அங்குலம் வான் பாய்கின்றது. வுன்னேரிக் குளம் 10 அடி 2 அங்குலம் நீர் மட்டம். 8 அங்குலம் வான் பாய்கின்றது. கரியநாவுவான் குளம் 12 அடி 10 அங்குலம் நீர் மட்டம். 2 அடி 6 அங்குலம் வான் பாய்கின்றது. குடம் உறுட்டிக் குளம் 10 அடி ஒரு அங்குலம் நீர் மட்டம். ஒரு அடி ஒரு அங்குலம் வான் பாய்கின்றது.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.