எமது தாயகத்தின் அபிவிருத்திகளை நாமே முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை: எம்.எம்.ரதன்


இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் அரசுக்கு ஆதரவாகவுள்ள வடக்கில் தீவகத்தின் மூன்று பிரதேச சபைகளுக்கும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கும் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ்த் தேசிய சுட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சபைகளுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எமது மக்கள் செலுத்தும் வரிப் பணத்தை கொண்டே எமது அபிவிருத்திகளை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது என கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.
2013ம் ஆண்டுக்கான வவுனியா நகரசபையின் வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்து தலைமை உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2013ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முழுமையாக மக்கள் நலன் சார்ந்து மக்களின் அடிப்படை சார்ந்த அபிவிருத்திகளை முன்னுரிமைப்படுத்தி இச்சபையிலே சமர்ப்பித்துள்ளதாக
இலங்கையின் நடைமுறையில் உள்ள யாப்பின் பிரகாரம் மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை என்ற மூன்று உள்ளூராட்சி மன்ற பிரிவுகள் காணப்படுகின்றது.
இவற்றின் நோக்கம் உள்ளூர் சமூகத்தில் இனங்காணப்பட்ட அபிவிருத்திகளை நிறைவேற்றுவதுதான். அந்தவகையில் வடமாகாணத்தின் நுழைவாயிலின் பிரதான நகரமாக கருதப்படுகின்ற வவுனியா நகரசபையானது மற்றுமோர் புதிய ஆண்டினை நோக்கி நகருகின்றது.
2012ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் பிரகாரம் நாம் பல அபிவிருத்திகளை மக்களின் நலன்சார்ந்து மேற்கொண்டோம். எமது சபையின் நிதிகளில் வீதிகள் என்ற அடிப்படையில் கல்லிட்டு தாரிடுதல், பண்டாரிகுளம் பிரதான வீதி, பட்டக்காடு 1ம் ஒழுங்கை, பூந்தோட்டம் பெரியார்குளம், பிரதான வீதி, கற்குழி முதலாம் ஒழுங்கை, கண்டிவீதி 11ம், 12ம் ஒழுங்கை, வெளிக்குளம் பிள்ளையார் வீதி, மூன்றுமுறிப்பு பாடசாலை வீதி, இறம்பைக்குளம் ஒளவையார் வீதி, திருநாவற்குளம் சிவன்கோவில் வீதி, பட்டக்காடு முதலாம் ஒழுங்கை என்பன எமது சபையின் நிதியுடனும், புறநெகுமு திட்டத்தில் தச்சன்குளம் பிரதானவீதி, பட்டக்காடு மூன்றாவது ஒழுங்கை, குருமன்காடு உள்ளக வீதிகள், பத்தினியார் மகிழங்குளம் முதலாம் ஒழுங்கை, வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை என்பன செப்பனிட்டு இவற்றுடன் கோவில்புதுக்குளம், பூந்தோட்டம், பத்தினியார் மகிளங்குளம் என்பவற்றில் பொது மயனம் மேடை அமைத்து புனரமைத்தோம்.
இவற்றுடன் சுகாதார தொழிலாளர்களின் நலன்கருதி மலசலகூடம் அமைத்தமை, வவுனியா நகரின் மிகப்பெரும் பிரச்சினையாக இருந்த நடைபாதை வியாபாரத்தினை முற்றாக அகற்றி நடைபாதை வியாபாரிகளுக்கென தனியான வர்த்தக நிலையம் ஒன்றினை அமைத்தோம். இவற்றுடன் உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் வடமாகாணத்தின் முதலாவது எரிவாயு உடல்தகனம் செய்யும் நிலையத்தினை பூந்தோட்டத்தில் அமைத்தோம். இவ்வாறான பல அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களை 2012 இல் நாம் முன்னெடுத்தோம்.
இதன் பிரகாரம் 2013ம் அண்டுக்கான வவுனியா நகரசபையின் மொத்த வருமானம் 158 941 179.46 ரூபாவும் 158 941 151.50 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலமாக வவுனியா நகரசபைக்குட்பட்ட வீதிகள், தண்ணீர்த் தாங்கிகள், இறைச்சிக்கடைகள், சந்தைக் கட்டடங்கள் மற்றும் மயானங்கள் என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அந்த வகையில் பண்டாரிக்குளம்- கூமாங்குளம் வீதி, மன்னார் - யாழ் ஐஸ்கிறீம் கடை வீதி என்பவற்றைப் புனரமைப்பதற்கு தலா 18 லட்சம் ரூபாவும் கோவில் புதுக்குளம் 9ஆம் ஒழுங்கையின் புனரமைப்புக்கு 30 லட்சம் ரூபாவும் வவுனியா நகர சபை வீதிகளில் மதகுகள் அமைப்பதற்கு 5 லட்சம் ரூபாவும், நூலக உபகரணக் கொள்வனவுக்கென 5 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் வீதியின் முதலாம், இரண்டாம் ஒழுங்கைகளின் புனரமைப்புக்கென 12 லட்சம் ரூபாவும் காளி கோவில் வீதியின் திருத்தத்திற்கு 10 லட்சம் ரூபாவும், வடிகால் திருத்தங்களுக்கு 2 லட்சம் ரூபாவும் வீதித் திருத்த வேலைகளுக்கான தார் கொள்வனவுக்கு 5 இலட்சம் ரூபாவும், சூசைப்பிள்ளையார் வீதியை கொங்கிறீற் வீதியாக அமைப்பதற்கு 25 இலட்சம் ரூபாவும், தண்ணீர் தொட்டிகளின் புனரமைப்புக்கு 6 இலட்சம் ரூபாவும், நகரசபைக்குச் சொந்தமான காணிகளுக்கு வேலி அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபாவும், மீன் சந்தை புனரமைப்புக்கு 10 இலட்சம் ரூபாவும்
கோழிக் கடைகள் திருத்தத்துக்கு 10 இலட்சம் ரூபாவும் குருமன்காடு மீன் சந்தை, நூலக மலசல கூடம் மற்றும் பூந்தோட்டம் சந்தை திருத்தம் என்பவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாவும் பஸ் நிலையம், நவீன சந்தைக் கடைகள் திருத்தம் என்பவற்றுக்கு 15 இலட்சம் ரூபாவும், நகரசபை நூலகம், நகரசபை மலசலகூடம் திருத்தம் என்பவற்றுக்கு தலா 3 இலட்சம் ரூபாவும் சந்தை சுற்றுவட்ட வீதி, பொது மலசலகூடத் திருத்தத்திற்கு 10 இலட்சம் ரூபாவும் அலுவலகத்துக்கான புதிய மலசல கூடத் தொகுதி அமைப்பதற்கு 20 இலட்சம் ரூபாவும் பத்தினியார் மகிழங்குளம் மயானத்துக்கான மேடை அமைப்பதற்கு 2 இலட்சம் ரூபாவும் அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றோடு, கெயார் திட்டத்தின் கீழ் அந்நிறுவனம் மில் வீதி, தர்மலிங்கம் வீதி, கந்தசாமி கோவில் வீதி 1ம் குறுக்குத்தெரு, 2ம் குறுக்குத்தெரு, சந்தை சுற்றுவட்ட வீதி, வை.எம்.சி.ஏ வீதி கதிரேசன், பொதி மண்டப வீதி, கித்துள் வீதி, வைத்தியசாலை வீதி, மடத்தடி வீதி, குளவீதி, சுடலை வீதி, நகரசபை வீதி, பூங்காவீதி, நகரசபை விடுதி வீதி, சூசைப்பிள்ளையார் குள உள்ளக வீதி, பிரை 21 வீதிகள் காபற் வீதிகள் செப்பனிடப்படவுள்ள நெல்சிப் திட்டத்தின் கீழ் மூன்று மில்லியன் செலவில் பாரிய சந்தை கட்டிடத்தொகுதி கோவில்குளத்தில் அமைக்கப்படவுள்ளது.
இவற்றுடன் இனங்காணப்பட்ட பல அபிவிருத்திக்காக இவ்வரவு செலவுத்திட்டம் பயனள்ளதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.