வடக்கில் முதன் முதலாக அரச ஊழியர் வீடமைப்புத் திட்டம்! சிங்கள உத்தியோகத்தர்களும் இணைப்பு

வடக்கில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, முதன் முதலாக இங்கு 300 வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் கடமையாற்றும் அரச உழியர்களின் நன்மை கருதியும் கடமைகளை கிரமமாக மேற்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தும் வகையிலுமான இலவச வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் முதற்கட்டமாக வவுனியா மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அரச ஊழியர்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக தலா 40 பேர்ச் காணியையும் 5 இலட்சம் ரூபாவைக் கடனுதவியாகவும் வழங்கி உள்ளது. வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அரச ஈடு மற்றும் முதலீட்டு வங்கியினால் வழங்கப்படும் இக் கடன் தொகைக்கு 11 வீத வட்டி அறவிடப்படுகின்றது.

வீடுகளை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவற்றை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் ஓமந்தைப் பகுதியில் தமிழ் உத்தியோகத்தர்களுக்கான 200 வீடுகளும் இரட்டைப் பெரிய குளம் பகுதியில் சிங்கள உத்தியோகர்களுக்கான 100 வீடுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.