வவுனியா சிறைச்சாலையில் 54 கைத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

வவுனியா சிறைச்சாலையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று சனிக்கிழமை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 54 கையடக்கத் தொலைபேசிகளும் ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளால் பணயமாக்கப்பட்டிருந்த சிறைக்காவலர்களை சுமார் ஒரு மாதத்துக்கு பணயமாக வைத்திருப்பதே அக்கைதிகளின் நோக்கமாக அமைந்திருக்கலாம் என்று கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களின் மூலம் தெரியவந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்களில் 54 கையடக்கத் தொலைபேசிகள், 30 பற்றரிகள், இருக்கும் இடத்தை அறிந்துகொள்ளப் பயன்படும் ஜீ.பி.எஸ் உபகரணங்கள் இரண்டு என்பன மேற்படி கைதிகளின் தலையணைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அத்துடன், பிஸ்கட்டுகள், சீனி, பால்மா உள்ளிட்ட உணவுப் பொருட்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.இத்தொகைப் பொருட்களை மேற்படி கைதிகள் எதற்காக மறைத்து வைத்திருந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

By:-yasi


இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.