வவுனியா சிறைக் கைதிகளை வழிநடத்தியது யார்?

வவுனியா சிறைச்சாலையில் உள்ள தமிழ் சிறைக் கைதிகள் வன்முறைகளில் ஈடுபடும் வகையில் வழி நடத்தியது யார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆகிய தரப்பினரே வவுனியா சிறைக் கைதிகளை வழிநடத்தியுள்ளனர்.                                                               புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு கிழக்கில் புலிகளின் பலம் தொடர்ந்தும் காணப்படுகின்றது என்பதனை வெளிக்காட்டும் நோக்கில் இவ்வாறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களை தொடர்ந்தும் புலிகளுக்கு ஆதரவாக தக்க வைத்துக் கொள்வதே புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.                                                                                                அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை நடாத்தியமையும் இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ் மக்கள் பிரிவினைவாதத்தை கைவிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.                        கூட்டமைப்பின் அரசியல் பலம் குறைவடைந்து செல்வதனால் இவ்வாறு சூழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
By:-yasi

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.