தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் ஒருங்கிணைப்பு அவசியம்
நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் சிறை கைதிகளாக, வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய அனைத்து பிரதேசங்களையும் சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
அதேபோல இந்த பிரச்சினை தொடர்பான போராட்டங்களில், இன்று தமிழ் கட்சிகள் மாத்திரம் அல்லாமல் பல்வேறு தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும், தொண்டு நிறுவன அணியினரும் பங்குபற்ற தொடங்கியுள்ளார்கள்.
அத்துடன் கொழும்பிலுள்ள சர்வதேச பிரதிநிதிகளும் இந்த பிரச்சினையில் இன்று விசேட அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். இந்த மாறிவரும் நல்ல சூழலை எவரும் மாசு படுத்திவிடக்கூடாது.
எனவே இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருங்கிணைந்த சிந்தனையும், செயல்பாடும் இருக்க வேண்டும். குறிப்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நெருக்கடிமிக்க போர் நடைபெற்ற காலகட்டங்களில், தமிழர் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து சர்வேதேசத்தின் மனசாட்சியை தட்டிய வரலாறு எமது கட்சிக்கு உண்டு.
இன்றும் அதே வரலாறு சகோதர கட்சிகளுடன் இணைந்து தொடர்கிறது. இன்றைய போருக்கு பிந்திய சூழலில், தமிழர் மீதான அநீதிகளுக்கு எதிராக, தமிழ் மற்றும் முற்போக்கு கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பதையே தமிழ் மக்களும், சிறையிருக்கும் கைதிகளும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் விரும்பியுள்ளார்கள். இதில் எவருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது.
இந்த கொள்கையின் அடிப்படையிலேயே, அழைப்பை ஏற்று நாம் கொழும்பிலிருந்து சென்று கூட்டமைப்பின் வவுனியா கிளை ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதத்தில், கலந்து கொண்டோம்.
பல்வேறு தமிழ் கட்சிகள், முற்போக்கு கட்சிகள், கைதிகளின் பெருந்தொகையான குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த ஒருநாள் அடையாள சாத்வீக போராட்டம், காலையில் ஆரம்பித்து, மாலை கட்சி தலைவர்களின் உரைகளுடன்கூடிய பொதுக்கூட்டத்துடன் வெற்றிகரமாக முடிவுற்றது.
அரசு வழங்கியுள்ள ஒரு மாத கால கால அவகாசத்தை கருத்தில் கொண்டு, சிறை கைதிகளின் உண்ணாவிரதத்தை ஒத்தி வைப்பது என்பது சரியான ஒரு முடிவாகும்.
ஆனால் இது தொடர்பான அறிவித்தல் சிறை கைதிகளுக்கும், அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும், கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் முறைப்படி வழங்கப்படும் போதுதான் இதன் முக்கியத்துவம் உணரப்படும்.
வவுனியாவில் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அனைத்து கட்சியினரின் பங்குபற்றலுடன் நடந்த உண்ணாவிரதம், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பெரும் கவனத்தை பெற்று இருந்தது.
எனவே உண்ணாவிரதத்தின் பின்னர், கட்சி தலைவர்களால் கூட்டாக இந்த, உண்ணாவிரத ஒத்திவைப்பு மற்றும் அரசுக்கு கால அவகாசம் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
இதன் மூலமாகவே இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து தமிழ் கட்சிகளும் மற்றும் முற்போக்கு கட்சிகளும் ஒன்றிணைந்து எழுப்பும் குரலுக்கு தேசிய, சர்வதேச அங்கீகாரங்கள் கிடைக்கும். அதன்மூலமாகவே நாம் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். இதை சிந்திக்ககூடிய அனைவரும் ஏற்றுகொள்வார்கள் என நம்புகிறேன்.
இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டை, தமிழ் அரசியல் கட்சிகள் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ நமது நடவடிக்கைகள் நமது பொது நோக்கத்திற்கு பாதகமாக அமைந்துவிடகூடாது.
எனவே தற்போது நாம் முன்னெடுக்கும், இந்த தமிழ் கைதிகள் விவகாரம் தொடர்பில் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

By:-yasikanth