வவுனியா ஓமந்தையில் சிங்களவர்களை குடியேற்ற சிங்கள அரச அதிபர் முயற்சி
மன்னாரில் சிங்கள அரச அதிபர் நியமனத்தை பெரிய அளவில் தமிழர் தரப்பு எதிர்காததையடுத்து, வவுனியாவில் தமிழ் மொழியில் ஒரு சில வார்த்தைகள் கூட பேசத் தெரியாத சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசுவாசியை அரச அதிபராக அரசு நியமனம் செய்தது.
தமிழர் பகுதியில் சிங்கள அரச அதிபர்களை நியமனம் செய்வதன் ஊடாக சிங்கள குடியேற்றத்தை தமிழர் நிலங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கை திறைமறைவில் நடந்துவருகின்றது.
வவுனியால் ஓமந்தைப் பகுதியில் 600 தமிழ் அரச ஊழியர்களுக்கு காணிகளை வவுனியாவின் முன்நாள் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் வழங்கினார்.
அதில் இது வரை வீடுகளை கட்டி குடியேறாதவர்களின் காணிகளை அவர்களிடமிருந்த பறிமுதல் செய்து சிங்களவர்களை அந்த காணிகளில் குடியேற்ற வவுனியாவின் புதிய அரச அதிபர் களத்தில் குதித்துள்ளதாக அரச ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடமையை பொறுப்பேற்ற புதிய அரச அதிபர் தவறியும் செட்டிக்குளம் மெனிக் பாமில் உள்ள நலன்புரி நிலையத்திற்கு செல்லாதவர் முதலில் ஓமந்தைக்குச் சென்று இது வரை காணிகளில் வீடுகளை கட்டாதவர்களின் காணிகளை பறிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் முடிவிற்கு வந்ததை தொடர்ந்து, இப்போது தான் மூச்சு விட ஆரம்பித்திருக்கும் தமிழ் அரச ஊழியர்கள் வீடுகளை கட்டுவதற்கு என்ன செய்வதென தெரியாத நிலையில் உள்ளனர். பதவி நிலை ஊழியர்கள், இடைநிலை ஊமியர்கள் சிற்றூழியர்கள் என்ற முன்று தரத்திலானவர்களுக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.
இக்காணிகளில் பதவி நிலை ஊழியர்கள் வீடகளை கட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஏனைய இடைநிலை ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் காணிகளை சிங்களவர்களிடம் தாரை வார்க்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற் தடவையாக கடந்த 1994 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சி வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சுமதிபால வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அச்சுறுத்தப்ட்டதுடன் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி இரண்டு ஆசனங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியது.
அதனை தக்க வைத்துக் கொள்ள தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தினை திட்டமிட்டு அரசு மேற்கொள்கிறது. இதன் பின்னணியில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.
By:-yasikanth