அரசியல் கைதிகளுக்காக 3 சிறப்பு நீதிமன்றங்கள்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்த புதிய 3 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நீதிமன்றங்கள், கொழும்பு, வவுனியா மற்றும் அநுரதபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை தம்மை விடுவிக்கக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, காலி, வவுனியா உட்பட்ட சிறைகளில் இந்த போராட்டத்தில் அதிகளவான அரசியல் கைதிகள் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை கைவிடுமாறு நேற்று சிறைச்சாலைகள் அமைச்சர் கஜதீர சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்ட போதும் அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பலர் சந்தேகத்தின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனினும் அரசாங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தி வருகிறது.
By:-yasikanth