பொன்சேகா விடுதலையை அறிந்து பட்டாசு கொளுத்திய இராணுவ முகாம்களில் சிஐடி விசாரணை! கோத்தபாய உத்தரவு
சரத் பொன்சேகாவின் விடுதலை செய்தியைக் கேட்டு பட்டாசுக்களை கொளுத்திய இராணுவ முகாம்கள் மீது உடனடியாக விசாரணைகளை நடத்தி, அதற்கு பொறுப்பான அதிகாரிகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவிருந்ததை முன்னிட்டும், சில இராணுவ முகாம்களில் தொடர்ந்தும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கஜபா படைப்பிரிவின் நகர காவலரண், காங்கேசன்துறை, இரத்மலானை கலால் படையணி தலைமையகம், பேசாலை – காரைநகர் துறைமுக காவலரண், கல்லடி இராணுவ தலைமையகம், வவுனியா 22ஆவது படைப்பிரிவு, மாந்தோட்டம் இராணுவ முகாம் போன்றவற்றில் இவ்வாறு பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவை அடுத்து, குறித்த முகாம்களுக்கு சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர் அதிகாரிகளிடமும், சாதாரண சிப்பாய்களிடம் வாக்குமூலங்களை பெற்று வருகின்றனர்.
By:-yasi