நான்கு தினங்களில் 85 பேர் கைது

இலங்கை மின்சார சபையினால், கடந்த நான்கு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 வவுனியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
 கைது செய்யப்பட்ட இவர்கள் வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட நிலையில், இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 26 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் பெறப்பட்டுள்ளது.
 சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழேயே இந்த பணத்தை அறவிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இவ்வாறு சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களில், மின்சார சபையின் ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் வர்த்தகர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
சம்பூர் அனல்மின் நிலையம் ஒப்பந்தம் 02
சம்பூர் அனல்மின் நிலையம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை மறுதினம் இந்த ஒப்பந்தம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, யுத்தம் காரணமாக சம்பூரில் இருந்து அகதி முகாம்களில் தொடர்ந்தும் வாழ்பவர்கள் தம்மை மீள குடியேற்றம் செய்ய வேண்டும் என கோரிவருகின்றனர்.
by:yasi

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.