வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் மோதல்(07-09-2011)
இச்சம்பவத்தில் காயமடைந்த சிறைக் காவலர் ஒருவரும் அவரின் உதவியாளரும் 3 கைதிகளும் காயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கான தண்ணீர் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டமை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து இம்மோதல் ஏற்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இதேவேளை, சிற்றூழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதனை தடுக்கச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது
இந்த சம்பவம் குறித்து வவுனியா சிறைச்சாலை அதிகாரி ராஜகருண, அநுராதபுர சிறைச்சாலை அதிகாரி ஜெகதிஸ்ஸ ஆகியோருக்குத் தெரியவரவே அவர்கள் கைதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடி பின்னர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
by:-yasi