மன்னார் தனியார் பஸ் போக்குவரத்துச் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பு


மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டு வரும் பணிப்பகிஸ்கரிப்பால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி மன்னார் மாவட்டச் செயலகத்தினுடாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மன்னார் மாவட்டத்தில் ஒவ்வொரு வழித்தடத்துக்கும் அனுமதியை பெறுவதற்கு கேள்வி கோரல் விடுத்துள்ளனர்ர் . இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மன்னார் தனியார் பஸ் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.ர்
தமக்கு உரிய பதில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் கிடைக்கும் வரை தமது பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் என மன்னார் தனியார் பஸ் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது. பணிப்பகிஸ்கரிப்பால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட சகல கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ர்
இந்நிலையில் வேறு மாவட்டங்களில் இருந்தும் தனியார் பஸ்கள் மன்னாரிற்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் ரமேஸ் தெரிவித்தார்.ர்
இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.