வவுனியா சிறைச்சாலை புதிய கட்டிடத்தொகுதிகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது!


வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை நேற்று (12.3) புதிய கட்டிடத்தொகுதிகள் அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து மூடப்பட்ட நிலையில் 8 மாதங்கள் கழித்து மீண்டும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவால்  திறந்து வைக்கப்பட்டது.
சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு புதிதாக சிறைக்காவலர்களுக்கான கட்டிடத்தொகுதி மற்றும் சமையலறை எனபனவும் அமைக்கப்பட்டுள்ளன.
இச் சிறைச்சாலையில் இருந்து கடந்த ஆண்டு அசம்பாவிதங்களால் அனுராதபுரம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதிகளும் மீண்டும் இச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது விஜயம் செய்திருந்த அமைச்சர் சிறைக்கைதிகளின் சுடத்திற்கும் சென் றுநிலமைகளை பார்வையிட்டிருந்தார்.
இதன்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்பி. டபிள்யு. கொடிபுலி, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சி. எஸ். விதானகே, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் சிவலிங்கம் சதீஸ்குமார், ஜனாதிபதியியன் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் , சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
DSCF1448
DSCF1454
DSCF1455
DSCF1464
DSCF1469
DSCF1472
DSCF1476
DSCF1483
 




இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.