கைதிகள் மூவர் கூரையில் ஏறி உண்ணாவிரத போராட்டம்
தமது மனத்தாங்கலை வெளிப்படுத்தும் வகையில் வெலிக்கடை மகஸீன் சிறைச்சாலையின் கூரையில் ஏறி நிற்கும் மூன்று கைதிகளின் உண்ணாவிரத் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தம் மீதான சிறை அதிகாரிகளின் கொடுஞ் செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என இந்த சிறைக்கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்குகின்றவர்களே மன்னிப்பு வழங்குகின்ற வேளைகளில் கவனிக்கப்படுகின்றனர் என்றும் ஏனையோர் கவனிக்கப்படுவதில்லை என்றும் இந்தக் கைதிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இதேவேளை, போராட்டம் நடத்தும் தமது தோழர்களுக்கு ஆதரவு தெரிவித்தது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தமது மதிய உணவை இன்று தவிர்த்திருந்தனர்.