iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் i-FlashDrive HD
அப்பிள் நிறுவனமானது தனது உற்பத்திகளுக்கென ஒவ்வொரு துணைச்சாதனத்தையும் பிரத்தியேகமாக தயாரித்து வழங்குவதில் சிரத்தையுடன் செயற்பட்டுவருகின்றது.
இதன் அடிப்படையில் தற்போது தனது iOS இயங்குதளத்தில் செயற்படும் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியவாறு i-FlashDrive HD எனும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்பிள் கணினிகளிலிருந்து ஏனைய iOS சாதனங்களுக்கிடையே தரவுகளை பரிமாற்ற உதவும் இந்த i-FlashDrive HD ஆனது 4 GB, 8 GB, 16 GB, 32 GB மற்றும் 64 GB சேமிப்பு கொள்ளளவுகளை உடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
18 கிராம்களே எடையுள்ள இச்சாதனங்கள் உச்சமாக 10 MB/s வேகத்தில் தரவுகளை பரிமாற்றும் வல்லமை கொண்டவையாக காணப்படுகின்றன. இவற்றின் பெறுமதியானது அவற்றின் சேமிப்பு கொள்ளளவுகளுக்கு ஏற்ப 99 டொலர்களிலிருந்து 329 டொலர்கள் வரை வேறுபடுகின்றது.