வவுனியாவில் 'திவிநெகும' நிகழ்ச்சித்திட்ட அறிமுக நிகழ்வு
வவுனியா மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் 'திவிநெகும' திட்டத்தின் அறிமுக நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றன.
'திவிநெகும' திட்டத்தினூடாக மக்களுக்கு கிடைக்கவுள்ள பயன்கள் மற்றும் அதனூடாக மக்கள் வங்கிகளில் எவ்வாறான கடன்களை பெறமுடியும் உள்ளிட்டவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், வீட்டுத்தோட்டம் செய்தல், அதனூடாக மக்கள் போஷாக்கான உணவுகளை பெறுவது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
இதன்போது வங்கிகளினூடாக கடன் பெறும் வழிவகைகள் தொடர்பிலான கையேடுகளும்; பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதனையடுத்து 'திவிநெகும' பயனாளிகள் சிலருக்கு கடன் திட்ட காசோலைகளும் வழங்கப்பட்டன.
வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், வடமாகாண ஆளுநரின் பிராந்திய இணைப்பாளர் முகைதீன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ச.மோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.