முகத்தை பளபளப்பாக்கும் சொக்லேட்
சொக்லேட் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், அழகாகவும் ஜொலிக்கலாம்.
பொதுவாக சொக்லெட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருப்பதால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.
அந்த சொக்லெட்டை பயன்படுத்தி சருமத்திற்கு ஃபேஷியல், ஸ்கரப் என்று செய்தால் நிச்சயம் முகம் இளமையான தோற்றத்தில் காணப்படும்.
சொக்லேட் மற்றும் தயிர்
இந்த முறைக்கு சொக்லெட்டை பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து உருக வைத்து, சிறிது தயிரை ஊற்றி கலவை நன்கு மென்மையாகும் வரை கிளர வேண்டும்.
பின்னர் குளிர வைத்து அதனை முகம் மற்றும் கழுத்திற்கு மாஸ்க் போட்டு, 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சொக்லெட், ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன்
இது ஒரு டூ-இன்-ஒன் ஃபேஷியல். இந்த ஃபேஷியலுக்கு டார்க் சொக்லெட் மற்றும் ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்த வேண்டும்.
அதற்கு சாக்லெட்டை உருக வைத்து, அதில் ஸ்ட்ராபெர்ரியை மசித்து, சிறிது தேன் மற்றும் கொக்கோ பவுடர் போட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 45 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் நன்கு பளிச்சென்று இருக்கும்.
சொக்லெட் மற்றும் தேன்
இந்த ஃபேஷியல் மிகவும் சிறந்த ஒன்று. ஏனெனில் இதில் தேன் சேர்த்திருப்பதால், முகம் நன்கு மென்மையாக இருக்கும்.
இந்த ஃபேஷியல் செய்வதற்கு சொக்லெட்டை உருக வைத்து, அதில் சிறிது தேனை ஊற்றி நன்கு மென்மையாக கலந்து முகத்திற்கு தடவி, 45 நிமிடம் ஊற வைத்து பாலால் கழுவி பின் நீரால் கழுவ வேண்டும்.