2 புசல் நெல் போதுமானதாகவில்லை: வவுனியா விவசாய சம்மேளனம்

கடந்த சிறுபோக நெற்செய்கையின்போது வறட்சியால் பாதிப்புக்களை எதிர்நோக்கிய விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற ஏக்கருக்கு 2 புசல் நெல் போதுமானதாகவில்லையென வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விவசாய சம்மேளனத்தின் செயலாளர் தெரிவிக்கையில்,

'ஒருபோக நெற்செய்கைக்கு சுமார் 40 ஆயிரம்வரை செலவு செய்யப்படுகின்றது. கடந்த முறை வறட்சியால் விவசாயம் பாதிப்படைந்தபோது சுமார் 30 ஆயிரம் ரூபா வரையில் விவசாயிகள் பணத்தை செலவு செய்திருந்தனர். இந்நிலையில் இழப்பீடுகள் தொடர்;பில் தகவல் சேகரிக்கப்பட்டபோது நாம் இத்தகவல்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தோம். எனினும் தற்போது காலபோக செய்கை  இடம்பெற்றுவரும் நிலையில் விவசாயிகள் பணத்தட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளனர். 

ஏக்கருக்கு 2 புசல் நெல் மாத்திரமே விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படுகின்றது. வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்திற்கு மாத்திரமே இந்நெல் வழங்கப்படுகின்றது.. ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் தென்பகுதியில் உழவுப்பணம் உட்பட சிலவற்றுக்கான செலவுத் தொகையும் வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றோம். இது தொடர்பில் நாம் வவுனியா மாவட்ட செயலரிடமும் மாவட்ட செயலகத்திலுள்ள விவசாயப் பணிப்பாளரிடமும் முறையிட்டுள்ளோம்' என்றார்

இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.